One with God is always a majority
One with God is always a majority
கடவுளோடு இருக்கிற மனிதனே பெரும்பான்மையானவன்
இன்றைக்கு தேவை யோசுவாக்கள்.
தைரியமான ,பயமில்லாத தேவனை சரியாக புரிந்து கொண்ட வாலிபர்கள் தேவை.
கிறிஸ்தவத்தில் காணப்படும் சமுதாய சீர்கேடுகள் அநீதிகள் ஜாதி அடக்குமுறைகள் சடங்காச்சாரங்கள் சீர்கேடான உபதேசங்கள் இவைகளை தைரியமாக சமரசம் இல்லாமல் தேவனுடைய வசனத்தை சார்ந்து இருக்கக்கூடிய வாலிபர்களே இன்றைய தேவை. அன்றைக்கு 10நபர்கள் தேவனுடைய வாக்குறுதிகளாகிய அவருடைய வசனத்தை நம்பாமல் தவறான தகவல்களை பரப்பி அதன் மூலம் லட்சக்கணக்கான முழு இஸ்ரவேல் ஜனங்களையும் தேவனுக்கு விரோதமாக கலகம் செய்ய தூண்டினார்கள். அந்தப் பெருங்கூட்டத்தை எதிர்த்து நின்றவர்கள் காலேபும் யோசுவாவும் மட்டும்தான். இந்த சிறுபான்மையான இரண்டு வாலிபர்களுடன் கடவுள் இருந்தார்.. விளைவு தேவன் வாக்குறுதி கொடுத்த கானானுக்குள் நுழைந்தார்கள். எப்பொழுதுமே ஒரு நபரோடு தேவன் இருக்கும்போது அவன்தான் பெரும்பான்மையாக கருதப்படுவான்.One with god is a majority.
இன்றைக்கு தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கிற கோழைகள் தேவை இல்லை.
என்ன நடந்தாலும் தேவனுக்காக ,வேதம் போதிக்கின்ற
கோட்பாடுகளுக்காக இம்மியளவும் உலகத்தின் கவர்ச்சிகளுக்கு விலை போகாத வாலிபர்கள் தேவை
வருங்கால கிறிஸ்தவம் இத்தகைய வாலிபர்கள் கையில்தான் இருக்கிறது.
இறுதியாக சபை வரலாற்றில் என்றைக்கும் தேவன் பெரும்பான்மை மக்களோடு இருந்ததில்லை.
சத்தியத்துக்காக போராடும் ஒரு சில நபர்களோடுதான் இருந்திருக்கிறார்.
அவர்களைக் கொண்டுதான் தேவன் சித்தத்தை செய்திருக்கிறார்