விசுவாசிகள் மற்றவருக்கு போதிக்கலாமா?
உங்கள் சிந்தனைக்கு:
விசுவாசிகள் மற்றவருக்கு போதிக்கலாமா?
Whether a believer can teach the scripture.
படிக்கவும்
(Acts18:1-5)
உபதேசத்தில் குழம்பி இருக்கும் விசுவாசிகளை திருத்த விசுவாசிகளும் போதிக்கலாம்.இதற்கு சிறந்த உதாரணம்
ஆக்கில்லா பிரிஸ்கில்லாள்!
அப்பொல்லோ அலெக்ஸாண்டரிய பட்டினத்தில்பிறந்து வேதத்தில் வளர்த்து பின்னாளில் பவுல், பேதுரு போன்ற அப்போஸ்தலர்க்கு இணையாக ஆண்டவரால் உயர்த்தப்பட்டவன்.
இந்த உயர்வுக்கு ஆண்டவர் பயன்படுத்திய குடும்பம்
ஆக்கில்லா பிரிஸ்கில்லாள் குடும்பம். இந்தக் குடும்பம்
பவுலுக்கு உறுதுணையாக இருந்த குடும்பம் ( Rom 16:3-4)) தங்கள் வீட்டில் சபையை நடத்தியவர்கள் ( 1Cori 16:19)
எபேசு பட்டினத்தில் பவுலுக்கு உதவியாக இருந்தவர்கள்.
நல்ல நிலையில் வாணிபம் செய்தவர்கள்(1Cor18:18-28).
இவைகள் எல்லாவற்றையும் விட கூர்மையான ஆவிக்குரிய பார்வை உடையவர்கள்.
அப்பொல்லாவின் பிரசங்கத்தை கேட்ட மாத்திரத்தில் அவன் பின் நாட்களில் ஆண்டவருக்கு பயனுள்ள பாத்திரமாக மாறுவான் என்று அறிந்து அவனை சந்தித்து தேவனுடைய சத்தியத்தை நன்றாக விவரித்து முழுமையான சுவிஷேத்தை புரியவைத்தார்கள் . அவனுடைய குறைகளை வெளியில் சொல்லாமல் கனவீனம் பண்ணாமல் அழைத்து அறிவுறுத்தி பூரண சத்தியதுக்குள் நடத்தினார்கள் Apollos message was not inaccurate or insincere :it was in complete )
பின்பு ஆகயாவில் உள்ள சகோதர்களுக்கு அவனை ஏற்றுக்கொள்ளுமாறு கடிதம் கொடுத்து அவனை சிறந்த வல்லமையுள்ள தேவ உழியக்காரனாக உருவாக்கினார்கள் .
இந்த அப்பல்லோவை திருத்தியது சபை மூப்பரோ அப்போஸ்தலர்களோ தீர்க்கதரிசிகளோ அல்ல.
தங்கள் வாணிபத்தை கவனித்துக் கொண்டே ஊழியம் செய்து தங்கள் அழைப்பை நிறைவேற்றிய விசுவாசிகளே.
நாம் கற்றுக்கொள்ளும் பாடம் எதுவென்றால் விசுவாசிகளும் மற்ற விசுவாசிகளுக்கு போதிக்கலாம்.
சபையின் போதகர்தான் போதிக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் கிடையாது.
போதிக்கக் கூடிய கிருபை பெற்ற எந்த விசுவாசியும் குழப்பத்தில் இருக்கும் யாரையும் வசனத்தின் அடிப்படையில் போதித்து உண்மையான சத்தியத்துக்குள் கொண்டு வரலாம்.
இந்த வேலையை
போதகர்கள்தான் செய்ய வேண்டும் ,சபை மேய்ப்பர்கள்தான் போதிக்க வேண்டும்
அவர்கள் போதிப்பதுதான் சரி என்று வாதிடுவது வேதத்தின் படி சரியல்ல.
கிரமமான வேத வாசிப்பு அடிப்படையான கிறிஸ்தவத்தைப் பற்றி புரிதல் இவைகளைக் கொண்டு
கிறிஸ்தவ இலக்கிய உலகத்தில் கொட்டிக் கிடக்கும் வேத வியாக்கியானங்களை கொண்டு
ஓரளவுக்கு வேதத்தை அறிந்து கொள்ள முடியும்.
இந்தத் தகுதிகளோடு போதிக்கும் கிருபையைப் பெற்ற எந்த விசுவாசியும் இந்த பணியை செய்ய முடியும்.
இதை சபை போதகர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். விசுவாசிகள் தங்களை மீறி போய்விடுவார்கள் என்கிற பயம் அவர்களுக்கு இருக்கக் கூடாது அப்படிப்பட்ட போதகனே மெய்யான மேய்ப்பன்.
எசேக்கியேல் சண்முகவேல்