போதகத்தையும் போதகரையும் அறிந்துகொள்ளுங்கள்
உங்கள் சிந்தனைக்கு!
போதகத்தையும் போதகரையும் அறிந்துகொள்ளுங்கள்
தியானிக்க 2தீமோ 3:10,11
இந்த வசனங்களில் 'நீ நன்றாய் அறிந்திருக்கிறாய்' என்று பவுலடியார் சொல்லக்கூடிய சில காரியங்களை பற்றி தியானிக்கலாம்.
நாம் போதகரிடம் கவனிக்க வேண்டியது,போதகருடைய
1. போதனை
2. நடத்தை
3. நோக்கம்
4. நம்பிக்கை
5. பொறுமை
6. அன்பு
மற்றும்
7. மனஉறுதி
இவைகளை நாம் நன்றாக அறியவேண்டும் பின்பு அவரை பின்பற்றி நடக்கவேண்டும்.
எதைப்பற்றியும் அறியாமல், பேசுகின்ற போதகத்தை மட்டும் நம்பி விலை மதிப்பில்லாத நமது ஆவிக்குரிய வாழ்க்கையை தொலைத்துவிடக்கூடாது.
சொல்லும் செயலும் ஒத்துப்போகாத ஊழியரை விட்டு விலகுவதே நலம்.
போதனையும் போதகருடைய நடக்கையும் பிரிக்க முடியாதவைகள்.
ஒரு வீடு அல்லது இடத்தை வாங்கும் போது பட்டா இருக்கிறதா ? மற்றும் DTCP , BUILDING APPROVAL இருக்கிறதா? என்று எல்லா விபரங்களையும் விசாரித்து வாங்கும் நாம், நம் ஆவிக்குரிய இடத்தை முடிவு செய்யும் விஷயத்தில் ஏனோ தானோ என்று இருப்பது நம்முடைய ஆவிக்குரிய மதியீனம்.
எந்த ஒரு காரியத்திலும் கவனமாக இருக்கும் நாம் யுகயுகமாக தேவனோடு வாழும் காரியத்தில் கவனக்குறைவாக இருக்கலாமா?
நியாயத்தீர்ப்பில் எல்லா பலன்களையும் இழந்து இரட்சிப்பை மட்டும் பிடித்துகொன்டு பரலோகத்தில் பிரவேசிக்கும் நிலை நமக்கு வேண்டாம். நிறைந்த ஆசீ ர்வாதத்தோடு நுழைவதே தேவ சித்தம்.
Spiritual diligence, vigilance, intelligence நமக்கு தேவை.