Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Voice of the Laity

நம்முடைய வேத தியானம் எப்படி இருக்க வேண்டும்.
உன் உங்கள் சிந்தனைக்கு:

படிக்க‌ உபா 30:11

நம்முடைய வேத தியானம் எப்படி இருக்க வேண்டும்.

வேதத்தைப் படிப்பது அல்லது வாசிப்பது என்பது வேறு. ஆனால் வேத தியானம் என்பது படிப்பதோ,வாசிப்பதோ அல்ல.

1.நமது வேத தியானம் மறைபொருளாக இருக்கக் கூடாது அல்லது புதிராக இருக்கக் கூடாது.
It should not be mysterious

கடந்த காலங்களில் நமது கையில் உள்ள வேதத்தை வைத்துக்கொண்டு
concordance மூலமாக தியானிப்பது வழக்கம்.

சமீபகாலங்களில் வேதத்தை தியானிப்பதற்கு தமிழில் பல ஆராய்ச்சி வேதாகமங்கள்(Study Bible) வெளியிடப்பட்டிருக்கிறது.
அதில் ஒன்றை நாம் வாங்கி ஒவ்வொரு அதிகாரத்தையும் அதில் உள்ள வார்த்தைகளையும் வைத்து நாம் தியானிக்கும் பொழுது நம்முடைய தியானம் மறைபொருளாக புதிராக இருப்பதில்லை.

அடுத்தது வேத தியானம் என்பது நம்மால் முடியாத காரியம்‌ இல்லை. 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே யோசுவாவிடம் கடவுள் நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாயைவிட்டுப் பிரியாமலும் இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம்,இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருக்க சொல்லியிருக்கிறார்
யோசுவா 1:8

வேத தியானம் என்பது ஏதோ முழு நேர பணியாளர்களுக்ககும் போதகர்களுக்கும்‌ மட்டும் உரியது என்பது போன்ற ஒரு மாயை நம்மிடத்தில் காணப்படக் கூடாது.

நாம் கிரமமாக அதை நாம் முயற்சி செய்தால் வேத தியானம் நம் இருதயத்திலே தங்கி இருக்கும்.
நாமே யாருடைய முயற்சி இல்லாமல் பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையோடு ஆராய்ச்சி வேதாகமங்களகளின் உதவியோடு ஒரு ஆரோக்கியமான வேத தியானத்தை நம்மால் செய்ய முடியும்.
அது நமக்கு தூரமானது அல்ல.
வேதத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் கிரமமாக‌‌ தியானம் பண்ணுகிற காரியத்தில் கிடைக்கும் மகிழ்ச்சி வேறு எங்கும் நமக்கு கிடைக்காது வேதத்தை தியானிக்கிற மனிதன் செய்வதெல்லாம் வாய்க்கும்