ஆரோக்கியமான உபதேசங்கள் போதிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் போதகர்கள் மட்டும்அல்ல
உங்கள் சிந்தனைக்கு!
ஆரோக்கியமான உபதேசங்கள் போதிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் போதகர்கள் மட்டும்அல்ல.
செவித்தினவு கொண்ட விசுவாசிகளே அதற்குப் பொறுப்பு. நலந்தரும் போதனையைப் பொறுக்க, கேட்க, ஏற்றுக்கொள்ள மனது இல்லாமல் தங்கள் சுய இச்சைகளுக்கேற்ப, உலகத்தில் செல்வங்களைப் பெறுவதற்கு ஏற்றபடி பேசக்கூடிய போதகர்களைத் திரளாகச் சேர்த்து கொள்வதினால்தான் ஆரோக்கியமான உபதேசங்கள் புறம்தள்ளப்படுகிறது. என்னைப் பொறுத்த அளவில் நான் போதகர்களைக் குறை சொல்லமாட்டேன். விசுவாசிகளுடைய வசனத்தின் மீதுள்ள தாகக் குறைவு, வேத தியானிப்பை புறம் தள்ளுகிற மனப்பான்மை,
அனுதினமும் தேவனுடைய மன்னாவை தேட மனது இல்லாமல் வாரத்திற்கு ஒரு முறை கிடைக்கும் ஆவிக்குரிய காரியங்கள்போதும் என்கிற மனப்பான்மை, அப்படியே வேத வசனத்தைப் படித்தாலும் அதைக் கடமைக்காக
வேத வாக்கியங்களை ஏனோதானோ என்று தியானிக்கிற மனப்பான்மை,
வேதத்தின் மகத்துவங்களை அறிந்து கொள்ளக்கூடிய மனப்பான்மை தங்களுக்கு உரியது அல்ல என்கிற மனோபாவம், இவைகள் தான் ஆரோக்கிய உபதேசங்கள் சபைகளில் பிரசிங்கிக்கப்படாமல் இருப்பதற்கான முக்கிய காரணம்.
வேத தியானம் எவ்வளவு அவசியமனது, முக்கியமானது ஆவிக்குரிய வாழ்க்கைக்குஉயிர் மூச்சானது என்பதை உணராத லட்சக்கணக்கான விசுவாசிகள் சபையில் குவிந்து கிடக்கிறார்கள்.
வேத வசனத்தைச் சிரமம் எடுத்துப் படித்துத் தியானிக்கிற விசுவாசிகளைச் சபைகளில் எண்ணிவிடலாம்.
கைகளில் தான் வேத புத்தகம் அவர்கள் இதயங்களில் வேதத்திற்கு இடமே இல்லை.
வேத தியானம் என்பது ஒவ்வொரு விசுவாசிக்கும் கடவுள் நியமித்த கடமை.
அந்தக் கடமையைச் சரியாக நிறைவேற்றாமல் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியும் என்பது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்டது போன்ற கதை தான்.
அப்படி ஒவ்வொரு விசுவாசியும் வேத வசனத்தைத் தியானிக்கிற ஒரு பழக்கத்திற்கு வரும்பொழுதுதான் அவனுக்கு ஆரோக்கியமான உபதேசங்களை பற்றிய புரிதல் வரும். ஒரு தேடல் வரும்.அந்தத் தேடல் உள்ளவர்கள் சபை போதகர்களை நிர்பந்தம் பண்ணுவார்கள்
ஆரோக்கியமான உபதேசங்களை பிரசங்கம் பண்ண சொல்ல விசுவாசிகள் போதகர்களை வலியுறுத்திக் கேட்பார்கள்.
அப்படி விசுவாசிகள் வருந்திக் கேட்டுக் கொள்ளும் பொழுதுப் போதகர்கள் எப்படி தப்பித்துக் கொள்ள முடியும்? விசுவாசிகளுக்கு விருப்பம் இல்லாத காரணத்தினால்தான் போதகர்களுக்கும் ஆரோக்கியமான உபதேசத்தை பிரசங்கம் செய்ய வேண்டும் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
ஒருவன் மறுபடியும் பிறந்தவுடனே அவன் உள்ளத்தில் ஏற்படக்கூடிய மிக ஆழமான விருப்பங்களில் ஒன்றாக வேத தியானம் என்பது காணப்படாவிட்டால் அப்படி மறுபடியும் பிறந்தவன் ஒருக்காலும் தேவனுடைய சித்தத்தை அவனது வாழ்க்கையில் அறிந்து கொள்ள முடியாது. பின் எப்படி அவன் தன் வாழ்க்கையில் தேவ சித்தத்தை நிறைவேற்றுவான்.
அதன் விளைவு போதகர்களும் வேதத்தைச் சத்தியத்தின் படி போதிக்காமல் விசுவாசிகளுக்கு எது பிடிக்கிறதோ, எது கண்டனம், கண்டிப்பு இல்லாத பிரசங்கமோ அதைக் கொடுக்கும் உற்பத்தியாளர்களாக மாறிவிட்டனர்.
"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள்.
ஓசியா 8:12
(ஆயிரக்கணக்கில் நான் திருச்சட்டங்களை எழுதிக் கொடுத்தாலும், அவை நமக்கில்லை என்றே அவர்கள் கருதுவார்கள். இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு)
2000 ஆண்டுகளுக்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்களுக்குத் தேவன் சொல்லிய வார்த்தை இன்றைக்கு சபைகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது
ஆம் இன்றைக்கு வேததியானங்கள் எனக்கில்லை என்று சொல்லக்கூடிய மனநிலை உருவாக்கி விட்டது.
.சபை அடுத்த தலைமுறையை நோக்கிச் சரியான முறையில் செல்ல வேண்டும் என்றால் இந்தச் சீர்கேட்டைச் சபைத் தலைவர்கள் எப்பாடுபட்டாவது தடுக்க வேண்டும்.
Believers have become the consumers and preachers have become the producers and suppliers. Money and wordly blessings have become the the profitable products.
இன்றைக்கு சபைகளில் ஒவ்வொரு விசுவாசியும் ஒரு மார்ட்டின் லூத்தராக எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். TPM, AG,,Brotheren, CSI, யகோவாசம்மா என்கிற சபை வைராக்கியத்தை புதைத்து விட்டு வேத வசனத்தை நிலை நிறுத்துகின்ற ஒரு சமுதாயத்தைத் தேவன் எதிர்பார்க்கிறார்
எசேக்கியேல்சண்முகவேல்