விசுவாசிகளின் சுயாதீனம் மதிக்கப்பட வேண்டும். காக்கப்பட வேண்டும்
உங்கள் சிந்தனைக்கு:
விசுவாசிகளின் சுயாதீனம் மதிக்கப்பட வேண்டும். காக்கப்பட வேண்டும்.
The Liberty in Christ should be protected and respected.
நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்.
2 தீமோத்தே 2:6
எவ்வளவு பெரிய ஊழியக்காரனாக இருந்தாலும்,
எவ்வளவு பெரிய தீர்க்கதரிசன வரத்தைப் பெற்றிருந்தாலும், எவ்வளவு பெரிய போதகனாக இருந்தாலும், தேவனால் எவ்வளவு வல்லமையாகப் பயன்படுத்தப்பட்டாலும் அவர்கள் தங்கள் விருப்பத்தை, ஆசையை, நோக்கத்தை, விசுவாசிகள்மீது திணிக்கக் கூடாது என்பதுதான் இந்த வசனத்தின் மூலமாக வேதம் நமக்கு உணர்த்தும் செய்தி.
.விசுவாசிகளும் தேவனுடைய பிள்ளைகள்தான்.
அவர்களோடும் தேவன் தம்முடைய வார்த்தைகள் மூலமாகப் பேசுவார். அவர்களும் பரிசுத்த ஆவியினால் பிறந்தவர்கள்.
முதலில் இந்த வசனத்தின் பின்னணியை பார்க்கும்போது கீழ் காணும் காரியங்களைச் செய்யும்படி
எழுதுகிறார்.
1. "நீ கிறிஸ்து இயேசுவில் உள்ள கிருபையில் பலப்படு.''
2."என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத் தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி."2:1.
3. "உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள்."
4.நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி.
5.ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு.
இவைகள் அனைத்தும் சொல்லிவிட்டு கீழ்க்கண்ட வார்த்தைகளை அவர் பயன்படுத்துகிறார்
"நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார்."
2 தீமோத்தேயு 2:6
தான் எவ்வளவு பெரிய அப்போஸ்தலனாக இருந்தாலும், திமொத்தேயு அவருடைய விசுவாசத்தில் உத்தம குமாரனாக இருந்தாலும் தன் விருப்பத்தை அவர்மீது பவுல் திணிக்கவில்லை.
எல்லாவற்றையும் சொல்லிவிட்டு அவன் யோசித்து செயல்படுத்த அறிவுறுத்துகிறார்
It is the combination of ‘human study and divine illumination’
எனவே விசுவாசிகளும் எச்சரிக்கையாக இருந்து ஊழியர்கள் சொல்லுவதெல்லாம் தேவ வாக்கு என்கிற, தவறான உபதேசத்தில் சிக்கிவிடக் கூடாது.
ஊழியர்களும் தங்கள் எல்லையை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
'இந்தப் பெண்ணைத் திருமணம் செய்வதுதான் தேவனுடைய சித்தம்'
'உன் ஊழியம் சபைக்குள்ளே தான் இருக்கிறது'
'நீ அந்தச் சகோதரனோடு பேசக் கூடாது'
அந்த ஊழியங்களுக்கு'
நீ காணிக்கை கொடுக்கக் கூடாது'
'அந்த ஊழியர்களோடு ஐக்கியம் கொள்ளக் கூடாது '
என்று இது போன்ற பல தங்களுடைய விருப்பங்களை விசுவாசிகளின் மீது திணிக்கக் கூடாது.
ஊழியர்கள் விசுவாசிகளுக்கு ஒரு outline கொடுக்கலாம்.
அவ்வளவுதான் அந்த அளவை தாண்டித் தங்கள் விருப்பத்தைத் திணிக்கக் கூடாது.
விசுவாசிகளும் அளவுக்கு மீறி ஊழியர்களுடைய ஆலோசனையைச் சார்ந்து இருக்கக் கூடாது.
இருவருக்குமே இது நல்லது
போதகர்களும் விசுவாசிகளுடைய சுயாதீனத்தை மதிக்க வேண்டும் விசுவாசிகளும் தங்கள் சுயாதீனத்தை விட்டுக் கொடுக்கக் கூடாது.