Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

வேத வசனத்திற்கு ஒத்து வராத சபை பாரம்பரியங்கள்
உங்கள் சிந்தனைக்கு:

வேத வசனத்திற்கு ஒத்து வராத சபை பாரம்பரியங்கள்


People who revere man-made traditions above the Word of God eventually lose the power of God's Word in their lives. No matter how devout they may appear, their hearts are far from God.- Wiersbe

வேத வசனத்திற்கு ஒத்து வராத சபை பாரம்பரியங்கள், நடைமுறைகள், பண்டிகைகள், தேவனுடைய
கிருபையை முக்கியபடுத்தாத மனிதர்களுடைய போதனைகள்,
அர்த்தமில்லாத சடங்குகள்,
சபைகளை ஆளுகை
செய்கின்ற வரையிலும், சபைகள்
பாரம்பரியங்களையும் சடங்குகளையும்
,எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்ட கடவுளுடைய
வசனத்திற்கு ஈடாகக் கருதுகிற வரை சபைகளில் மறுமலர்ச்சி ஏற்பட வாய்ப்பு இல்லை.
இதற்கு ஒரே தீர்வு
கலாத்திய நிருபத்தை ஆழ்ந்து படித்து அதில் உள்ள கருத்துக்களை பின்பற்ற வேண்டியதுதான்.
சபைகளில் மறுமலர்ச்சி ஏற்பட மிகவும் கட்டாயமாக ஆழ்ந்து தியானிக்க வேண்டிய ஒரு கடிதம் இது.

சபையில் காணப்படுகின்ற மனித பாரம்பரியங்கள், சட்ட திட்டங்கள் வெளி தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு போதிக்கின்ற உபதேசங்கள், பெலனற்ற வெறுமையான வழிபாடுகள் இவற்றை எதிர்த்துக் களையக்கூடிய ஒரே நிருபம் கலாத்திய சபைக்குப் பவுல் எழுதிய இந்த நிருபம் தான்.

இதைப் பற்றிய ஒரு புரிதல் சபைக்கு உண்டாக வேண்டும்.
உயிரற்ற சடலத்தை உயிர்ப்பிக்கிற வல்லமை உள்ள இந்த நிரூபத்தில் சொல்லப்பட்டஅந்த வார்த்தைகளை உணர்ந்து தியானித்தால் மட்டுமே சபையில் மாற்றம் என்பது நிச்சயமாக வரும்.

மார்ட்டின் லூத்தருக்கு பயன்பட்ட கலாத்திய நிருபம் இன்றைய ஊழியர்களுக்குப் பயன்படாமல் இருப்பது வேதனைக்குரிய காரியம்

"இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?
கலாத்தியர்

நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே.


நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். "என்கிற
பவுலின் கதறல் இன்றைய சபைகளில் கேட்கவில்லையே