Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

கொல்கொதாவில் வெளிப்பட்டதேவனின் வல்லமை
உங்கள் சிந்தனைக்கு
கொல்கொதாவில் வெளிப்பட்டதேவனின் வல்லமை

ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் தேவனுடைய வல்லமை மிக அதிகமாக வெளிப்பட வேண்டிய இடம் எது தெரியுமா?
அவன் பாடுகளை சந்திக்கும்பொழுது, அநீதிகளைச் சந்திக்கும்பொழுது,
உபத்திரவங்களை சந்திக்கும்பொழுது
அவன் அதை எப்படி எதிர்கொள்கிறான் என்பதில் தான் தேவனுடைய வல்லமையின் அளவு உள்ளது.
நம் மூலமாக அதிசயங்கள், அற்புதங்கள், எதிர்ப்புகளை மேற்கொள்ளுதல் இவைகள் மூலம் நம்மிடத்தில் வெளிப்படும் வல்லமையை விடப் பாடுகளில் நம்மிடத்தில் வெளிப்படும் வல்லமையே மிக வலிமையானது.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு,
தேவனின் மகத்தான வல்லமை அதிகமாக வெளிப்பட்ட இடம் எது தெரியுமா?
அந்த இடம் கொல்கொதா


தேவனின் வல்லமை கொல்கொதாவில் வெளிப்பட்டது போல அற்புதமாக வேறு எங்கும் எந்த மனிதனிடத்திலும் வெளிப்படவில்லை.

மனிதனாய் வெளிப்பட்ட கடவுளுடைய குமாரனாகிய மத்தியஸ்தர் மூன்று மணி நேர இடைவெளியில் உலகத்தின் பாவங்களுக்காகப் பாடுகளை சகித்துக்கொள்ள கடவுளின் வல்லமை அவரிடம் வெளிப்பட்டது.

தெய்வீக கோபத்தின் அலைகள் அனைத்தும் அவர்மீது பாய்ந்தது.
( சங்கீ 42: 7) ஆனாலும் அவர் நிர்மூலமாகவில்லை.
உலகத்தின் பாவத்தைச் சுமந்ததின் நிமித்தம் தேவகோபாக்கினை அவர்மேல் வந்த போதும்
அவர் பிதாவை மறுதலிக்கவில்லை.
தேவனுடைய வல்லமையேயன்றி வேறு எந்தச் செயல் துன்பப்பட்ட மீட்பரை நிலை நிறுத்தியிருக்க முடியும் ? எபி 2:10
சிலுவைக் காட்சியைத் தியானிக்கிற நாம் பாடுகளை சுமக்கக்கூடிய மிகப் பெரிய வல்லமையை நாம் தேவனிடத்தில் பெற்றுக் கொள்வதே மிகச் சிறந்த
சிலுவை தியானம்.

நம் வாழ்க்கையில் தேவன் அனுமதிக்கும் பாடுகளை, ஏன் என்று கேட்க மனம் இல்லாமல் ஆரோனை போல் தன் இரண்டு மகன்கள் தேவனால் தண்டிக்கப்பட்டபொழுது அமைதியாக இருந்துபோல நாமும் நம் வாழ்க்கையில் விளங்கிக் கொள்ள முடியாத, புரிந்து கொள்ள முடியாத அந்தப் பாடுகளுக்கு நாம் காரணம் இல்லாமல் இருக்கும்பொழுது அதைச் சகிக்க நாம் தேவனிடத்தில் வல்லமையை கேட்கும்பொழுது உண்மையாகவே தேவ வல்லமை நம்மிடத்தில் வெளிப்படும்.
இதை எழுதுவது எளிது அதை நடைமுறையில் பின்பற்றுவது கடினம்.
கடவுள் அப்படிப்பட்ட கிருபைகளை நமக்குத் தருவாராக.
எசேக்கியேல் சண்முகவேல்
Never was the power of God so marvelously displayed as it was at Golgotha. In that, the Mediator was enabled to endure within the space of three hours. All the waves and billows of Divine wrath went over Him. (Psa42:7) yet He was not destroyed. Nothing but the power of God could have upheld the suffering saviour. ARTHUR W. PINK