Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

யோசேப்பு தன் சகோதரர்களை எதிர்கொண்ட விதம் சரியா ?
உங்கள் சிந்தனைக்கு:

யோசேப்பு தன் சகோதரர்களை எதிர்கொண்ட விதம் சரியா ?

யோசேப்பு பார்வோனுக்கு அடுத்த ஸ்தானத்தில் உயர்வு பெற்றபோது தன் சகோதரர்களை முதல் முதலாகப் பார்த்த நாளில் அவர்களை நடத்தின விதம் சரியா?

1.முதலில் அவர்களை ஒற்றர்களாகக் கருதியது.

2.அடுத்தது அவர்களை மூன்று நாட்கள் சிறையில் அடைத்தது.

3 அதற்குப் பிறகு எல்லோரையும் விடுதலை செய்யாமல் சிமியோபெற்றபோதுனை மட்டும் வைத்து மற்றவர்களை கானானுக்குஅனுப்பி பென்யமீனை எகிப்திற்கு கொண்டுவர முயற்சி செய்தது.

4.பின்பு வெள்ளி கிண்ணம் பென்யமீன் சாக்கில் கண்டுபிடிக்கப்பட்டு அதன் நிமித்தம் அவர்கள்மேல் குற்றம் சுமத்தியது.
5. அதன்பிறகு பென்யமீனை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவர்களைக் கானானுக்கு அனுப்ப முயற்சி செய்தது.

இப்படி அடுக்கடுக்கான காரியங்கள் செய்த யோசேப்பின் செயல்கள் சரியா?
20 ஆண்டுகள் கழித்து தன் சகோதரர்களைப் பார்த்தபோது அவர்களை அன்பினால் அரவணைத்து, நேசித்து அவர்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவதற்கு பதிலாக இவ்வளவு கடினமான முயற்சிகளை எடுத்ததற்க்கு என்ன காரணம்?
1.ஆரம்பத்திலேயே தன்னை யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் தன்னுடைய சகோதரர்கள் தங்களுடைய குற்றத்தை உணர முடியாமல் போயிருக்கும்.

2.தாங்கள் யோசேப்பிற்கு செய்த கொடுமையை, அநீதியை அறிய வாய்ப்பு இல்லாமல் போயிருக்கும்.

எனவே தான் அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்வதற்கும், தங்கள் பிழைகளை அறிந்து கொள்வதற்கும் இப்படிப்பட்ட கால நேரத்தை அவர்களுக்குக் கொடுத்து அவர்களை உணர வைப்பதற்காகத்தான் யோசேப்பு இப்படி கடுமையாக நடந்து கொண்டான்.

யோசேப்பின் நோக்கம் அவர்களைச் சிறுமைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ, துக்கப்படுத்துவதோ அல்லாமல் அவர்களை மனம் திரும்பதலுக்குள்ளாக நடத்தி அவர்களைச் சிந்திக்க வைத்து அவர்கள் குற்றங்களை உணர வைப்பதற்காகத் தான் இப்படி கடுமையாக நடந்து கொண்டான்.

நாம் பார்க்க வேண்டியது யோசேப்பின் நோக்கத்தைத் தான். அவன் செய்த காரியங்களை அல்ல.
அதேபோலத்தான் தேவனும் அநேக நேரங்களில் நாம் செய்த தவறுகளை உணர வைப்பதற்காகப் பலவித சோதனைகள், கஷ்டங்கள், துன்பங்களைக் கொடுத்து, அதன் மூலமாக நம்முடைய தவறுகளை உணர வைத்து, பாவங்களை அறிக்கையிடச் செய்து நம்மை அவருடைய வழியில் நடத்துகிறார் .சிலருடைய மனம் திரும்புதல் ஒரு வினாடியில் நடந்து விடும்.
எல்லோர் வாழ்க்கையிலும் அப்படி நடக்காது. அநேக நேரங்களில் "Repentance is a process. " என்று சொன்னால் அது தவறில்லை.

யோசேப்பின் இந்தச் செயல்பாடு Ends justify the means என்கிற கருத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று சொன்னால் அதில் எந்தத் தவறும் இல்லை. செயல்களைவிட நோக்கங்கள் மிகவும் முக்கியமானது. நோக்கங்கள் நியாயமானதாக, பரிசுத்தமானதாக, உண்மையானதாக இருக்கும் என்றால் அது தேவனுடைய பார்வையில் ஏற்று கொள்ளப்படும். எசேக்கியேல் சண்முகவேல்