கடவுள் தரிசனமானார் என்பதற்கும் தம்மை வெளிப்படுத்தினார் என்பதற்கும் என்ன வித்தியாசம்?
உங்கள் சிந்தனைக்கு:
கடவுள் தரிசனமானார் என்பதற்கும் தம்மை வெளிப்படுத்தினார் என்பதற்கும் என்ன வித்தியாசம்?
யாத்திராகமம் 6:3
நமக்குச் சொல்லும் பாடம் என்ன?
"சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் ‘யேகோவா’ என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை."
– யாத்திராகமம் 6:3
I appeared to Abraham, to Isaac and to Jacob as God Almighty, but by my name the LORD I did not make myself known to them.
தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு சர்வவல்லமையுள்ள தேவனாக (El Shaddai) தோன்றினார். ஆனால் அவருடைய தனிப்பட்ட நாமம் ‘யேகோவா’ (YHWH) எனும் பெயரால் அவர் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. மோசேவுக்கு மட்டும் அல்லாமல், இஸ்ரவேல் ஜனங்களுக்கும்கூட, தேவன் தன்னை ‘யேகோவா’ என்னும் நாமத்தால் வெளிப்படுத்துகிறார் (யாத்திராகமம் 3:14).
"அதற்கு இறைவன் மோசேயிடம், “நானே என்றென்றும் இருக்கின்ற அவர்” என்றார். “நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘என்றென்றும் இருக்கின்ற அவர் என்னை உங்களிடம் அனுப்பினார்.’ ”
யாத்திராகமம் 3:14
சுருக்கமாகச் சொல்வதானால், தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு உடன்படிக்கையின் தேவனாகத் தன்னை அறிமுகப்படுத்தினார் (யாத்தி. 6:4). ஆனால் மோசேவுக்கு அவர் என்றென்றைக்கும் இருக்கிற தேவனாக (Self-Existing or Eternal God) தன்னை வெளிப்படுத்தினார்.
இதன் உண்மையான அர்த்தம் என்னவென்றால் –
அவர் "இருக்கிறவராகவே இருக்கிற தேவன்" – அதாவது, அவர் என்றென்றும் இருப்பவர்.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு கொடுத்த வாக்குத்தத்தங்களை இஸ்ரவேல் மக்களில் நிறைவேற்றுகிறவராக அவர் தன்னை வெளிப்படுத்துகிறார்
.
பாடங்கள்:
நம்முடைய தேவன், வாக்குத்தத்தங்களை கொடுக்கும் தேவன் மட்டுமல்ல; அவற்றை நிறைவேற்றும் தேவனும் ஆவார். மேலும், அவர் எல்லாவற்றிற்கும் மேலாக, என்றும் இருக்கிற தேவனாக (Eternal and Complete God) அறியப்பட வேண்டும்.
தேவன் தன்னை எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரி வெளிப்படுத்தமாட்டார். அவரவர் சூழ்நிலை, தேவையைப் பொருத்து அவரவர் வாழ்க்கையில் தேவன் தன்னை விசேஷமாக வெளிப்படுத்துவார். முழுமையாகத் தேவனைப் பற்றிய வெளிப்பாட்டைப் பெற்றவர் உலகத்தில் யாரும் இல்லை.
எசேக்கியேல் சண்முகவேல்