Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

நம்முடைய எதிரியை அறிந்து கொள்ளுங்கள்.
உங்கள் சிந்தனைக்கு!
நம்முடைய எதிரியை அறிந்து கொள்ளுங்கள்.

போர்க்களத்தில் வெற்றிபெற, நம்முடைய வலிமை எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நம் எதிரியைப் பற்றிய அறிவும் அவசியம். இந்தப் பதிவில், நம்முடைய எதிரியைப் பற்றிய சில முக்கிய குணாதிசயங்களை அறிந்து கொள்ளலாம்.
அவன் படைக்கப்பட்டவன். அவன் எங்கும் நிறைந்தவனும் அல்ல; எல்லாம் அறிந்தவனும் அல்ல; சர்வ வல்லவனும் அல்ல. சிலுவையில் நம்மீது குற்றம் சுமத்தும் அதிகாரத்தைத் தேவன் எடுத்துவிட்டார். அவனுடைய முக்கிய ஆயுதங்கள் தந்திரம், பொய், வஞ்சகம்.
மனுக்குலம் தன்னை ஆராதிக்க வேண்டும் என அவன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வான். அவன் கொலைபாதகனும் பெருமையின் மொத்த உருவமுமாக இருக்கிறான். தேவனுடைய அனுமதி இல்லாமல், விசுவாசியை அவன் தொட முடியாது. நாம் அவனை எதிர்க்கும்போது, அவன் விலகி ஓடுவான். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் முன்பாக அவன் நிற்க முடியாது.
அவன் இருளின் அதிபதி; நாமோ ஒளியின் இராச்சியத்தின் குடிமக்கள். அவனுடைய உலகம் வேறு, தேவன் நம்மை வைத்திருக்கும் உலகம் வேறு.
அவன் தூதனாகப் படைக்கப்பட்டவன்; நாமோ தேவ சாயலாக படைக்கப்பட்டவர்கள் சாத்தானும் ஒளியின் தூதனின் வேஷம் எடுத்து வரும். அவன் வேதத்தை நன்கு அறிந்தவன். அவனுக்கும் போலியான திரித்துவம் உண்டு. அவனுக்கென உபதேசங்களும் உண்டு. அவனுக்கென்று ஆளுகைகள், சிங்காசனங்கள், இராச்சியங்கள், தூதர்கள், ஊழியர்கள், படைகள் ஆகியவை உண்டு
சபையில் களைகளை விதைப்பவன், வேதத்தைப் புரட்டுபவன், நம்மைப் பிதாவிற்கு முன்பாகக் குற்றம் சாட்டுபவன். கடைசியாக, தன் வாழ்நாளைக் எண்ணிக்கொண்டிருக்கிறவன்.
கடவுள் அனுமதித்தால் தவிர, நம்மீது அவனுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. சாத்தான் ஒரு போதும் போர்க்களத்தை விட்டுப் பின்வாங்குகிறவன் அல்ல.
சாத்தான் போரில் தோற்றாலும் அல்லது தோற்றது போல் தோன்றினாலும், களத்தில் எப்போதும் இருப்பவன். பல நேரங்களில் கிறிஸ்தவர்கள் போரில் வெற்றிபெறுகிறார்கள், ஆனால் பின்னர் யுத்தத்தில் தோல்வியடைகிறார்கள்.

Many times, Christians win the battle but later lose the war. Let us learn to stay alert!
விழிப்புடன் இருக்க கற்றுக்கொள்வோம்!
Ezekiel Shanmugavel