Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

தேவன் எகிப்தின் முதற்பேறனைத்தையும் அழித்த காரணம் என்ன? இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
உங்கள் சிந்தனைக்கு
தேவன் எகிப்தின் முதற்பேறனைத்தையும் அழித்த காரணம் என்ன? இதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
கடவுள் இஸ்ரவேலை தன்னுடைய முதற் பேறான மகன் என்று சொல்லுகிறார் (யாத்திராகமம் 4:22).
பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை எல்லாம் கொன்று குவித்து நைல் நதியில் வீசி எறிந்தான்.
எனவே தான், கடவுள் தன்னுடைய முதற் பேறான மகனாகிய யூதர்களைத் தன்னை ஆராதிக்க அனுமதிக்காவிட்டால், பார்வோனுடைய முதற்பேறான மகனைக் கொல்லுவேன் என்று ஆரம்பத்திலேயே அவனை எச்சரித்தார்.

ஆனால், பார்வோன் ஒன்பது வாதைகளை சந்தித்த பிறகும் தன் இருதயத்தை கடினப்படுத்தி, இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை ஆராதிக்க அனுமதிக்கவில்லை. எனவே, பார்வோனுடைய தலைப்பிள்ளை முதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும், மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும்படி தேவன் செய்தார் (யாத்திராகமம் 11:5).
மனிதன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான். இந்த உபதேசத்தில் எந்த மாற்றமும் கிடையாது:
"தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ, அதையே அறுப்பான்." — கலாத்தியர் 6:7
தேவனுடைய ஜனங்களைப் பார்வோன் எப்படி பழிவாங்கினானோ, அதன்படியே தேவன் அவனுக்குத் தம்முடைய நீதியை செலுத்தினார்
.
"Lord simply paid Pharaoh back with His own currency." — W.W. Wiersbe

வேதத்தில் இப்படி செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்தவர்கள் பலர் உண்டு — யாக்கோபு, தாவீது, ஆமான் போன்றவர்கள் உதாரணமாகக் கூறலாம்.
இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட நாம், மற்றவர்களுக்கு இழைக்கும் தீமைகள், அநீதிகள் இவற்றிற்காக மன்னிப்பு கேட்டால் தேவன் மன்னிக்கலாம். ஆனால், அதற்குரிய தண்டனையை நாம் இங்கு அனுபவித்தாக வேண்டும். இதில் எந்த மாற்றமும் கிடையாது.
மற்றவர்களுக்குத் தீங்கு செய்யும் காரியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுப்போம்.
விசுவாசிகள், மற்றவர்களுக்கு நன்மை செய்யாமலிருந்தாலும் பரவாயில்லை. ஆனால் பிறருக்கு அநீதியை இழைக்க நாம் பயப்பட வேண்டும்.