Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

தனிப்பட்ட ஆகானின் பாவம் முழு இஸ்ரவேல் ஜனங்களின் தோல்விக்கு காரணமாயிற்று ஏன்?
உங்கள் சிந்தனைக்கு:

தனிப்பட்ட ஆகானின் பாவம் முழு இஸ்ரவேல் ஜனங்களின் தோல்விக்கு
காரணமாயிற்று ஏன்?

எரிகோ பட்டிணத்தை கைப்பற்றும்பொழுது அந்தத் தேசத்தில் காணப்படுகின்ற பொன், வெள்ளி போன்ற செல்வங்கள் கர்த்தருடைய கருவூலத்திற்கு வந்து சேர வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை.
ஆண்டவருடைய கருவூலத்திற்கு வந்து சேர வேண்டிய அந்தப் பொருள்கள் அழிவுக்குரிய பொருட்கள்.
அதை இஸ்ரவேல் ஜனங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது. இதுதான் சாபதீடான காரியம்.

ஆனால் ஆகான் கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் இச்சித்து எடுத்துக்கொண்டான்.
யோசுவா 7:21
ஆகான் அத்தனை ஆண்டுக் காலம் வனாந்தரத்திலே சுற்றி சுற்றி திரிந்து அணிந்து கொண்ட உடைகளையே திரும்பத் திரும்ப அணிந்த காரணத்தினால் பாபிலோனிய சால்வையை பார்த்தவுடனே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது. உபா8:4
தேவனுடைய கட்டளையை மீறிச் சால்வையையும், செல்வத்தையும் எடுத்துக் கொள்ளும் அளவுக்கு அவனுடைய ஆசை மேலோங்கி நின்றது.
இந்தத் தனிப்பட்ட ஒரு பாவம்தான் இஸ்ரவேல் ஜனங்களின் தோல்விக்குக் காரணமாயிற்று.

நாம் அறிந்து கொள்ளக்கூடிய சத்தியங்கள்.

சபைகளில், இயக்கங்களில் மரணங்கள் தோல்விகள் இழப்புகள் பிரிவினைகள்(Vertical spilt) ஏற்படும்பொழுது அதை ஏதோ ஒரு சத்துருவின் செயலாகக் கருதி கடந்து விடக் கூடாது.
சபைகளில், இயக்கங்களில் ஊடுருவிக் காணப்படும் சில ஆகான் போன்றவர்களின் பாவமாகக் கூட இருக்கலாம்.
ஆகானுக்கு சால்வையைப் பார்த்தவுடன் ஆசை வந்தது போலச் சபைகளில், இயக்கங்களில் காணப்படுகின்ற ஆகான்கள் தேவனுடைய ஆதீனம் முடிவு பண்ணக்கூடிய பொறுப்புக்களை தவறான முறையில் அடையும்பொழுது இயக்கங்களுக்கு, சபைகளுக்கு மிகப்பெரிய சோதனைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.

ஆகான்களை அடையாளம் கண்டு அவர்களை ஒதுக்கி வைப்பதும் தலைமைப் பண்புகளில் முக்கியமானது.

தலைவர்கள்
நல்லவர்கள் சோதித்து புரிந்துகொள்ளக்கூடிய கிருபையை பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
தங்களை பிரியப்படுத்துகின்ற முகஸ்துதிகளை எப்பொழுதும் (sycophants)பக்கத்தில் வைத்துக் கொண்டால் ஆகான்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். இப்படிப்பட்ட முகஸ்துதிகளால் இழப்பை, பாதிப்பை, பிரிவினைகளை வல்லமையை இழந்த இயக்கங்கள், சபைகள் அநேகம். எசேக்கியல் சண்முகவேல்