தேவன் நம்மோடு இல்லாதிருந்தால்?
உங்கள் சிந்தனைக்கு:
தேவன் நம்மோடு இல்லாதிருந்தால்?
தப்பியோடிய யாக்கோபை லாபான் சந்தித்தபொழுது யாக்கோபு பொங்கி எழுந்து லாபானை நோக்கிச் சொன்ன வார்த்தை "ஆபிரகாமின் கடவுளும் ஈசாக்கின் அச்சமுமான என் தந்தையின் கடவுள் என்னோடு இருந்திராவிடில் உண்மையாகவே நீர் என்னை வெறுங்கையனாய் அனுப்பியிருப்பீர்." என்பதே.ஆதி31:42
"தேவன் மட்டும் நம்மோடு இல்லாதிருந்தால்" என்கிற வார்த்தை மிகவும் சிந்திக்க தூண்டக்கூடிய ஒரு வார்த்தை.
இப்படி நாம் ஆபத்து நேரத்தில் சிந்திக்கும் போதெல்லாம் கடந்த காலத்தில் நம்மை வழிநடத்தின ஆண்டவரை நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. அவர் மட்டும் நம்மோடு இல்லாதிருந்தால் இந்த உயர்வு, இந்த வசதி, வாய்ப்புகள், விபத்துகள் நாசமோசங்களை கடந்து வந்த காரியங்கள், பிள்ளைகளுடைய ஆசீர்வாதம் இவைகளை நாம் பெற்றிருப்போமா? இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
தேவன் மட்டும் நம்மோடு இல்லாதிருந்தால் இவைகளை ஒன்றையும் நாம் பெற்றிருக்க முடியாது.
நாம் அடிக்கடி தியானிக்க வேண்டிய ஒரு வார்த்தை "தேவன் மட்டும் நம்மோடு இல்லாத இருந்தால்"என்பதே.
லாபானோடு யாக்கோபு வாழ்ந்த 20 வருட வாழ்க்கையில்
தேவன் அவனை அனைத்து காலகட்டங்களிலும் பாதுகாத்தார்.
யாக்கோபோடு தேவன் இல்லாதிருந்தால் அவன் வெறுமையாய் திரும்பி இருப்பான்.
அதுபோல் நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் இல்லாதிருந்தால் அந்த வாழ்க்கையை நாம் எண்ணி கூடப் பார்க்கவே முடியாது.
தேவன் நம்மீதுவைத்துள்ள அன்பு எவ்வளவு உயர்ந்தது.
படிக்க ஆதி31:42