Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

சம நிலை கிறிஸ்தவன்
சம நிலை கிறிஸ்தவன்
நம் வாழ்வில் சத்தியமும், அன்பும் சேர்ந்து காணப்படவேண்டும். (Truth and love )
சத்தியம், பூரண சத்தியம், அப்போஸ்தல உபதேசம் என்றெல்லாம் சொல்லி கொண்டு அன்பை தன் வாழ்க்கையில், ஊழியத்தில் வேலை பார்க்கும் இடங்களில், சுற்று புறத்தில் வெளிப்படத்தாவிட்டால் அதனால் பயன் என் ?அதே வேளையில் அன்பை மட்டுமே காண்பித்து வேதம் கூறும் அடிப்படை சத்தியங்களை பின்பற்றாவிட்டால் நாம் காண்பிக்கும் அன்பு உபயோகமற்றதாக மாறிவிடும்.
இதே போலத்தான் சபைகளும் உள்ளது.
சபை இவை இரண்டையும் சம நிலைபடுத்தி போதிக்க வேண்டும்.
உபதேசம் என்கிற பெயரில் பிரிவினைகளை குடும்பத்தில், சமுதாயத்தில் , ஊழியத்தில் உண்டாக்கி தேவன் உருவாக்கியஉறவுகளை குழிதோண்டி புதைப்பது உண்மையான சத்தியம் ஆகாது
.
அன்பு என்கிற பெயரில் தேவ நீதியை போதிக்காமல் இருப்பதும் உண்மையான அன்பில்லை .