Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

சபையை விட்டு பிரிந்து போவது பெரிய பாவமா?
உங்கள் சிந்தனைக்கு:
படிக்க 1கொரி1‌1:19
சபையை விட்டு பிரிந்து போவது பெரிய பாவமா?
பிரிவினைகளை வேதம் அனுமதிக்கிறதா?
ஒரு விசுவாசி ஒரு நல்ல நோக்கத்திற்காக கர்த்தருடைய வழிநடத்ததுதலின்படி ஒரு இயக்கத்தை விட்டோ ஒரு சபையை விட்டோ வெளியேறினால் அவனை பற்றி குறை சொல்வதில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
பொதுவாக சபைகளில் காணக்கூடிய காரியம் என்னவென்றால் சபையை விட்டோ, ஐக்கியத்தை விட்டோ, பிரிந்து போகிற மனிதனை துரோகி என்றும், நம்பிக்கை துரோகி என்றும், கெட்டவன் என்றும், வேதப் புரட்டன் என்றும், நம்ப தகாதவன் என்றும் நம்ப முடியாதவன் என்றும்,, நம்பிக்கை இல்லாதவன் என்றும், ஏமாற்றுக்காரன் என்றும், இப்படி பலவிதமான பட்டங்களை சூட்டுவது இயல்பு .
ஆனால் பிரிந்து போகிற நபர் நல்ல நோக்கத்திற்காக நல்ல உபதேசத்திற்காக, கர்த்தருடைய சித்தத்தை பரிபூரணமாக நிறைவேற்றுவதற்காக ,கர்த்தர் அவனுக்கு கொடுத்த தரிசனத்தை நிறைவேற்றுவதற்காக, அவன் ஒரு இயக்கத்தை விட்டு தலைவர்களை விட்டு சபையை விட்டு பிரிந்து சென்றால் அதில் எந்த தவறும் இல்லை.
இதைத்தான் பவுல்
“உங்களில் உத்தமர்கள் இன்னார் என்று விளங்கும்படி மார்க்க பேதங்கள் உங்களுக்குள் அவசியமாய் இருக்கிறது " என்று சொல்கிறார்.
இதற்கு என்ன அர்த்தம்?
இப்படிப்பட்ட பிரிவினைகள், மார்க்க பேதங்கள், அவசியம்.
Divisions and factions
.
சிபிம் (CPM)சபையை விட்டு பிரிந்து எத்தனையோ ஊழியக்காரர்கள் நல்ல சபைகளை உருவாக்க வில்லையா?
சபைய விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் துரோகிகள் அல்ல,வேத புரட்டர்கள் அல்ல.
சில நேரங்களில் பிரிவினைகள் தவிர்க்க முடியாத காரியமாய் மாறிவிடும்.
அதன் மூல காரணத்தை அறியாமல் பிறரை குறை சொல்வது சரியல்ல.
பிரிந்துசென்றவர்களையும் தேவன் வழிநடத்தி தம்முடைய சித்தத்தை, அவர்களை அழைத்த நோக்கத்தை நிறைவேற்றும் படியாக செய்வார்.
நல்ல நோக்கத்திற்காக சபையை விட்டு பிரிந்து செல்பவர்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு கூட்டத்தோடு அவர்கள் பிரிந்து சென்றால் அது தவறு .
தனிப்பட்ட முறையில் கூடுமான வரைக்கும் தலைமையோடு பேசி நல் மனதோடு அந்த இயக்கத்தை விட்டு, சபையை விட்டு வெளியேறினால் அவர்களை நிச்சயமாக குறை சொல்வதற்கு யாருக்கு உரிமை கிடையாது.
தவறான உபதேசங்களுக்கு கீழ்ப்படிந்து, தீய காரியங்களுக்கு அடிபணிந்து அடிமையாய் வாழ்வதைவிட, ஒரு விசுவாசி தனது சுயாதீனத்தை பாதுகாத்துக் கொள்வது மிக சிறந்த ஒரு காரியம்.
அதே வேளையில் பிரிந்து போகிற வரை தலைவர்களை விசுவாசிகளை எங்கிருந்தாலும் வாழ்க என்று வாழ்த்திஅனுப்புவதுதான் தலைவருடைய பண்பாக இருக்க வேண்டுமே தவிர பிரிந்து போனவர்களை சபித்து கர்த்தருக்கு பிரியம் இல்லாத பலவிதமான வசைகளை சொல்லி அவர்களை களங்கப்படுத்துவது தலைவர்களுக்கும் அழகல்ல.
தனிப்பட்ட மனிதனுடைய ஆவிக்குரிய நிலையை, வளர்ச்சியை, அழைப்பை தலைவர்கள் சில வேளை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும்.
எனவே தலைவர்களும் பெருந்தன்மையோடு அப்படி பிரிந்து போகிற விசுவாசிகளை உடன் ஊழியர்களை குறைந்தபட்சம் சபிக்காமல் இருந்தால் நல்லது.
பிரிந்து போகிற ஊழியக்காரர்களை, விசுவாசிகளை தலைவர்கள் கரித்துக் கொட்டுகின்ற காரியங்களைபார்த்திருக்கிறேன்.
பர்ணபாவும் ‌பவுலும்
பிரிந்து போகவில்லையா?
முதல் மிஷனரி பயணத்தில் மார்க் வெளியேறவில்லையா?
ஆண்டவருடைய ராஜ்ய விருத்திக்கு பிரிந்து போகிறார்கள் பங்கம் வராமல் ஊழியம் செய்கிற வரையில் அவர்களை குறித்து தவறாக சொல்லாமல் இருப்பது தலைவர்களுக்கு அழகு.