பிலேயாமின் வழி
உங்கள் சிந்தனைக்கு:
பிலேயாம்களை அடையாளம் கண்டு ஒதுக்கி வையுங்கள்.
பழைய ஏற்பாட்டில் அநேக போலியான தீர்க்கதரிசிகள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் புது ஏற்பாட்டு அப்போஸ்தலர்களால் மிகவும் கடினமான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட போலி தீர்க்கதரிசி யார் என்றால் பிலேயாம்தான்.
பேதுரு ,யூதா, யோவான் ஆகிய மூவரும் இவனுடைய செயல்பாட்டை கடிந்து கொண்டிருக்கிறார்கள்.
2பேது:15-16,யூதா 11 வெளி2:14
இதனை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.
பிலேயாமின் வழி. அவனுடைய பிழை. அவனுடைய உபதேசம்.
The way of Balaam.
The error of Balaam
The doctrine of Balaam.
பிலேயாம் ஒரு குறி சொல்கிறவன், ஒரு கள்ள தீர்க்கதரிசி. ஆனால் இவனுக்கு உண்மையான தேவனைப் பற்றி ஒரு அறிவு இருந்திருக்கிறது.
வேதத்தில் வெளிப்படையாக பார்க்கும் பொழுது இவன் தேவனுடைய கட்டளைக்கு இணங்கி தேவனுடைய பிள்ளைகளுக்கு விரோதமாக சபிக்கவில்லை என்பது போல தோன்றும்
ஆனால் எண்ணா 31:16, 2 பேதுரு 2:15ல் உள்ள வசனங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும் பொழுது இவன் பாலாக்கிடம் பணம் வாங்கி இஸ்ரவேல் மக்களை மோவாபின் பெண்களோடு வேசித்தனம் பண்ணுவதற்கும் இஸ்ரவேல் மக்களை விக்ரக ஆராதனைக்கு நேராக வழி நடத்தி விட்டான்.
பாலாக்கின் பணத்திற்காக விலைபோன இந்த செயல்தான் பிலேயாமின் வழிகள் என்று பேதுரு சொல்லுகிறார்.
பிலேயாமின் உபதேசம் எப்படி ஆபத்தானதோ அதேபோல் பிலேயாமின் வழிகளும் அதே அளவுக்கு சபைக்கு பாதிப்பு விளைவிக்க கூடியவைகள்.
பிலேயாமின் வழிகள் என்றால் என்ன? என்று பார்க்கும் பொழுது சுருக்கமாக சொன்னால் பெற்றுக்கொண்ட வரங்களை வணிக மயமாக்குகின்ற காரியம்.
பெற்றுக் கொண்ட கிருபைகளை கொண்டு பொருளை சம்பாதித்துக் கொள்வது.
தாங்கள் பின்பற்றுகின்ற மார்க்கத்தை இழிவான ஆதாயத் தொழிலாக கருதுவது.
எந்த நோக்கத்திற்காக தேவன் வரங்களை கிருபைகளை கொடுத்தாரோ அதை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாமல் தங்களுடைய ராஜ்யத்தை கட்டுவதற்கும், தங்கள் பொருளாதார வசதிகளை விருத்தியாக்கி கொள்வதற்கும் பயன்படுத்துகிற காரியமே பிலேயாமின் வழிகள்.
பிலேயாமின் வழிகள் என்பது அவர்களின்வாழ்க்கை முறை.(Life style).
According to W.W.Wiersbe
"His motive was to make
money and he used his opportunities, not to serve God
and His people, but to satisfy his craving for wealth. In
other words, he was a hireling who sold himself to the
highest bidder. He used “religion” only to make money
and to cover up his sinful cravings. He also used “reliட gion” to entice people to sin."
இன்றைக்கும் தேவனுடைய வரங்களைப் பெற்ற ஊழியர்கள் அதுவும் இலவசமாக பெற்ற வரங்களைக் கொண்டு தேவனுடைய இராஜ்யத்தை கட்டாமல் தங்களுடைய இராஜ்யத்தை கட்டுகிறார்கள். பொருளாதாரத்தை தங்களுக்கும் தங்களுடைய பிள்ளைகளுக்கும் பல தலைமுறைகளுக்கு சேர்த்து வைக்கிறார்கள்.
தேவனிடத்தில் இலவசமாய் பெற்று வரங்களை வியாபாரம் செய்வது தான் இந்த பிலேயாமின் வழிகள். இன்றைக்கு சபைகள் இந்த பிலேயாமின் வழிகளால் நிரம்பி இருக்கிறது.
இன்றைக்கு விசுவாசிகள் இந்த பிலேயாம்களை அடையாளம் கண்டு அவர்களை விலக்கி அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டும். இப்படிப்பட்டவர்ளுக்கு நாம் ஒருபோதும் நம்முடைய பணத்தை வாரி இறைக்க கூடாது.
அப்படி வாரி இறைப்பதன் மூலம் நமக்கு ஒரு நன்மையும்
தேவனிடத்திலிருந்து வராது.