Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

பிலேயாம் கூறிய இறைவாக்குகள் என்ன?
உங்கள் சிந்தனைக்கு:
Oracles of Balaam.
பிலேயாம் கூறிய இறைவாக்குகள் என்ன?
அது நமக்கு கூறும் பாடம் என்ன.?
வேதத்தில் ஆயிரக்கணக்கான நபர்களைப் பற்றி சொல்லப்பட்டாலும் மிகவும் புரிந்து கொள்ள முடியாத ஒரு மர்மமான நபர் யார் என்றால் அது பிலேயாம் மட்டும்தான். பிலேயாமைபோல் தேவ மனிதர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட போலி தீர்க்கதரிசி வேறு யாரும் புதிய ஏற்பாட்டில் இருக்க முடியாது .
பேதுரு ,யோவான், யூதா போன்ற மிகப் பெரிய அப்போஸ்தலர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவன் தான் இந்த பிலேயாம்.. The most mysterious character in the Bible is Balaam
ஆனாலும் இந்த பிலேயாமை தேவன் தன் கையில் எடுத்து அவனுடைய வாயை பயன்படுத்தி நமக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஒரு மிகப்பெரிய செய்தியை கொடுத்தார்.
அதனால் தான் "பிலேயாமின் இறைவாக்கு" என்று பதிவு செய்திருக்கிறேன்.
4 Oracles of Baalam.
இந்தப் பதிவில்
அவனுடைய முதல் இறைவாக்கினை குறித்து பார்க்கலாம்.
இவன் ஒரு யூதன் அல்ல.
யூப்ரடீஸ் நதிக்கரையில் உள்ள பெத்தோரைச் சார்ந்த பெகோரின் மகன் .
எண்ணா 22:5
இவன் ஒரு குறி சொல்கிறவன்.(Soothsayer).
இஸ்ரவேலை சபிக்க பாலாக்கு இவனை விலை பேசினான்.
ஆனால் தேவன் இவனுடைய வாயை பயன்படுத்தி இஸ்ரவேலை குறித்து தீர்க்கதரிசனம் சொல்ல வைத்தார்.
"ஆண்டவர் ஒரு வார்த்தையை பிலேயாமின் வாயில் வைத்து அவனிடம், "பாலாக்கிடம் திரும்பிப்போய் இப்படியே பேசு" என்றார்
எண்ணா 23:5
அப்படி சொன்ன வார்த்தை இதுதான்
'' இதோ! தனியாக வாழ்கின்றதொரு மக்கள் கூட்டம். இது வேற்றினத்தாரோடு தன்னையும் ஓர் இனமாய்க் கொள்ளவில்லை''
எண்ணா 23:9
அன்றைக்கு இஸ்ரவேலரை குறித்து சொன்ன வார்த்தை.
இஸ்ரவேல் ஜனங்கள் பிறரோடு இணைந்து வாழாமல் தனித்து வாழ்கின்ற ஒரு மக்கள் கூட்டம் என்பதுதான்.
ஆம் இஸ்ரவேல் ஜனங்கள் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட ஜனமாக இருந்தாலும் அவர்கள் மற்ற இன குழுக்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஜனம்.
This is their uniqueness and their strength.
அதுபோல்தான் தேவனால் பிரித்தெடுக்கப்பட்ட நாமும் உலகத்தோடு ஒத்துப் போகாதபடி நம்முடைய தனித்தன்மையை பாதுகாக்கப்படும் வரை தேவன் நம்மில் பிரியமாய் இருப்பார்.
நாம் நம்முடைய தனித்தன்மையை இழக்கும் போது நாம் நம்முடைய வல்லமையை இழக்கிறோம்.
அது சபையாக இருந்தாலும் சரி நம்முடைய தனிப்பட்ட வாழ்விலும் நம்முடைய தனித்தன்மையை பாதுகாக்க அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
தனித்துவத்தை பாதுகாக்க வேண்டிய நாம் அதே வேளையில் பிற இனங்களோடு ஒதுக்கப்பட்டு தனிமைப்பட்டு விடக்கூடாது.. Be separated but not isolated.
பொது நலம் சார்ந்த காரியங்களில் உலக மக்களோடு இணைந்து காணப்பட வேண்டும் அதே வேளையில் நம்முடைய வழிபாடுகள், பரிசுத்தம், விசுவாசம் இவைகளில் நம்முடைய தனித்துவத்தைபாதுகாக்க வேண்டும்.
குறிப்பாக அரசியலோடு ஒருபோதும் நம்மை இணைத்துக் கொள்ளக் கூடாது. அரசியலைப் பற்றி அறிவு நமக்கு கட்டாயம் வேண்டும் ஆனால் அரசியல் ஈடுபாடு வேண்டாம்.
அரசியல் ஈடுபாடு வேண்டும் என்பது பிலேயாமின் ஆலோசனை.
அது அவனுடைய உபதேசம்.
பிலேயாமின் இறைவாக்கை பின்பற்ற வேண்டும். அவனுடைய உபதேசத்தை புறக்கணிக்க வேண்டும். கர்த்தர் மகிமைப்படுவாராக.