Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

முதியவர்களை நாம் ஏன் மதிக்க வேண்டும்?

முதியவர்களை நாம் ஏன் மதிக்க வேண்டும்?

இன்றைய கிறிஸ்தவ உலகில் முதியோர்களை பற்றிய சிந்தனை மாற வேண்டும்.
முதியோர்களை பற்றி வேதம் என்ன சொல்லுகிறது?

நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே வேதம் சொல்கிற வார்த்தையை கவனியுங்கள்.


"நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படுவாயாக, நான் கர்த்தர்.
லேவியராகமம்" 19:32

1.நாம் எவ்வளவு பெரிய உயர்ந்த நிலையில் காணப்பட்டாலும் பெரியவர்கள் வரும்போது எழுந்து நிற்க வேண்டும்.
முதியவர்கள் எழுந்து நின்று நம்மை வரவேற்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கக் கூடாது.

அவர்களை கனம் பண்ணுவது என்பது தேவனுக்கு பயப்படுவதற்கு சமம்.

2.அடுத்தபடியாக தேவனுடைய பார்வையில் வயது முதிர்ந்தவர்கள் சிறப்பான கவனத்தைப் பெறுகிறார்கள்.

வயது முதிர்ந்தவர்களையும் தேவனே படைத்தவர் என்பதால் அவர்களை இறுதி வரைக்கும் காப்பேன், சுமப்பேன் என்று வாக்குறுதி
கொடுத்திருக்கிறார். ஏசா 46:4

அந்த அளவுக்கு முதியவர்களின்  ஆரோக்கியத்தில் தேவன் அக்கறை உள்ளவராய் இருக்கிறார்

3. முதியோர்களை கவனத்தோடு கண்டிக்க வேண்டும். தந்தைப் போல் மதித்து அறிவுரை வழங்க வேண்டும்.1,தீமோ 5:1
எல்லோரையும் கண்டிக்கிறது போல வயது முதிர்ந்தவர்களை நாம் கண்டனம் செய்யக்கூடாது.

நம்மை எவ்வளவு அதிகமாக கர்த்தர் உயர்த்தி வைத்தாலும் முதியவர்களை கண்டிக்கிற காரியத்தில் ஞானமாக அந்த அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.

இறுதியாக இளைஞர்கள் முதியோர்களுக்கு அடங்கி இருக்க வேண்டும். முதியவர்களை தன் வாலிப நண்பனைப்  போல கண்டிக்கவும் கூடாது, அவர்களை நடத்தவும் கூடாது.

இன்றைய கிறிஸ்தவ உலகம் முதியோர்களின் அனுபவமிக்க ஆலோசனையை புறம்பே தள்ளுகிறது, அலட்சியப்படுத்துகிறது, கனவீனம் பண்ணுகிறது, எள்ளி நகையாடுகிறது.

அவர்களின் அனுபவங்களையும் தேவனோடு உறவாடுகிற ஐக்கியத்தையும் பயன்படுத்திக் கொள்கிறவன் பாக்கியவான்.