Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

For Your Thoughts

Admitting sin isn't the same as confessing sin உண்மையான மனம் திரும்புதல்
Admitting sin isn't the same as confessing sin

உண்மையான மனம் திரும்புதல்

“அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம்.”
எண்ணாகமம் 14:40
இது காதேஸ் பர்னேயாவில் இஸ்ரவேல் மக்கள் சொன்ன வார்த்தை.

ஆகான் " மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன். இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன்."
யோசுவா 7:20
இது ஆகானுடைய‌ அறிக்கை.

இப்படி "நான் பாவம் செய்தேன் "என்று சொல்லி தாவீது‌, சீமேயு, கெட்ட குமாரன், சவுல் அரசன், எகிப்தின் அதிபதி பார்வோன் யூதாஸ் என்று தங்கள் பாவத்தை குறித்து அறிக்கையிட்டார்கள்.
ஆனால் தேவன் எல்லாருடைய பாவங்களையும் மன்னிக்கவில்லை.
தாவீதை தேவன் மன்னித்தார்.
சவுல் ராஜ்யத்தை இழந்தான்.

ஆகான் கல்லெறிந்து கொல்லப்பட்டான்.
யூதாஸ் தற்கொலை பண்ணி கொண்டான்.
சீமேயுக்கு மன்னிப்பு கிட்டியது.

எகிப்தின் அதிபதி செங்கடலில் அமிழ்ந்து போனான்.

Admitting sin isn't the same as confessing sin and turning to the Lord to seek His mercy.W.W.Wiersbe

பாவங்களை ஒத்துக் கொள்வது என்பது வேறு. மனம் திரும்பி தேவனை நோக்கி திரும்புது என்பது வேறு.
நம்முடைய பாவமன்னிப்பு எத்தகைய தன்மை வாய்ந்தது என்பதை தேவன் மட்டுமே அறிவார்.
அது உதட்டில் இருந்து வருகிறதா? அல்லதுஇதயத்தில் இருந்து வருகிறதா?என்பது தேவனுக்கு மட்டுமே தெரியும் நான் தேவனை ஏமாற்ற முடியாது.
போலியான மனந்திரும்புதல் பாவ அறிக்கை எந்த வகையிலும் பயன் தராது.

நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். நம்முடைய தவறுகளுக்காக உண்மையான வருத்தத்தோடு தேவனை நோக்கி திரும்புவோம்.