1 *நாளாகமம்* ( *அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* ) *வேதபாடம் 17*
? *உங்கள்* *சிந்தனைக்கு*
1 *நாளாகமம்* ( *அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* )
*வேதபாடம் 17*
தியானிக்க வேண்டிய வேத பகுதி: 20வது அதிகாரம்
ஆதியாகமம் 6ஆம் அதிகாரம் 2 முதல் 4ஆம் வசனங்களில் குறிப்பிடப்பட்ட “தேவகுமாரர்கள்” தூதர்கள் என்றும், அவர்கள் மனித குமாரத்திகளோடு இயற்கைக்கு மாறான உறவு கொண்டதின் விளைவாக இராட்சத சந்ததி பிறந்தது என்ற பார்வையின் அடிப்படையில் இந்த அதிகாரத்தை நான் தியானிக்கிறேன்.
இத்தகவல் குறித்து வேறொரு பார்வையும் உண்டு — அதாவது, அந்த “தேவகுமாரர்கள்” தூதர்கள் அல்ல, மனிதர் என்கிற கருத்து. ஆனால், இந்தப் புத்தகத்தின் 20ஆம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட நிகழ்வுகளை நான் தூதர்கள், பெண்களோடு இயற்கைக்கு மாறான உறவு கொண்டார்கள் என்ற அடிப்படையில் புரிந்துகொண்டு, அதன்படி என் பதிவுகளைச் சமர்ப்பிக்கிறேன்.
இந்த 20ஆம் அதிகாரத்தில் நெட்டையான ஒரு இராட்சசனைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. அவனுக்கு 24 விரல்கள் இருந்ததாகவும், அவன் இராட்சத சந்ததியிலிருந்தவன் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மேலும் 4ஆம் வசனத்தில் “சிப்பாய்” என்கிற இராட்சத மனிதனைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்படியானால், யார் இந்த இராட்சதர்கள்?
இவர்களை அரக்கர்கள் என்றும் அழைக்கலாம். இந்த அரக்கர்கள் யார் என்றால் — பரலோகத்தில் இருந்த சில தேவதூதர்கள் உலகப் பெண்களோடு உறவு கொண்டதின் விளைவாக பிறந்தவர்கள். யூதா எழுதிய கடிதத்தில் சொல்லப்பட்டதுபோல, இவர்கள் இயற்கைக்கு மாறான உறவினால் பிறந்த அரக்கர்கள்.
சாத்தான், தன் அழிவு “பெண்ணின் வித்தின் மூலம்” வரும் என்பதை அறிந்து, அதைத் தடுப்பதற்காக மனுக்குலத்தை கறைப்படுத்த முயன்றான். அவன் இதற்காக இரண்டு முறை முயற்சி செய்தான்.
முதல் முயற்சி:
ஆதியாகமத்தில் சொல்லப்பட்ட நிகழ்வு. அந்த நேரத்தில் விழுந்துபோன தேவதூதர்கள் மனுக்குலத்தை கறைப்படுத்தியதால், தேவன் ஆதாமின் சந்ததியில் கறைபடாமல் இருந்த நோவாவின் குடும்பத்தைத் தேர்ந்தெடுத்தார்.
இரண்டாவது முயற்சி:
பெருவெள்ளத்திற்குப் பிறகும் சாத்தான் இதே முயற்சியை மேற்கொண்டான். அதன் விளைவாக மீண்டும் அரக்கர்கள் தோன்றினர். (எண்கள் 13:33ல் குறிப்பிடப்பட்டபடி).
இறுதியாக, அரக்கர்கள்பற்றிய குறிப்பை இந்த அதிகாரத்தில் பார்க்கலாம்; அதற்குப் பிறகு வேதத்தில் அவர்கள்பற்றிய குறிப்பிடுதல் காணப்படவில்லை. இதனால், இராட்சத (அரக்கர்) சந்ததி முழுவதும் அழிந்தது என்று பார்க்கலாம்.
சாத்தான் தன்னுடைய அழிவு “பெண்ணின் வித்தின் மூலம்” வருமென்பதை அறிந்திருந்ததால், மனுக்குலத்தையும் கறைப்படுத்த முயன்றான்; ஆனால் அதில் தோல்வியுற்றான்.
*கற்றுக்கொள்ளும்* **பாடங்கள்* :
சாத்தான் ஏதேன் தோட்டத்திலிருந்து கல்வாரி வரை உலகத்தின் இரட்சகர் தோன்றுவதைத் தடுக்க விரும்பினான்; அவர் மரிக்காமல் இருக்கப் பார்த்தான். ஆனால் அவனுடைய திட்டம் நிறைவேறவில்லை. இறுதியில் தாவீதின் சந்ததியிலிருந்தே உலகத்தின் இரட்சகர் தோன்றினார்.
இதன் மூலம் நாம் அறிவது — தேவன் செய்ய நினைத்த அவர் தீர்மானத்தை எந்த சக்தியும் தடுக்க முடியாது.
இராட்சதர்களின் அழிவே இதற்கான சாட்சியாக நமக்கு ஒரு ஆழமான பாடமாகும்.