Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

2 நாளாகமம்* *அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* Bible lesspn 7
*உங்கள் சிந்தனைக்கு*

*2 நாளாகமம்* *அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்*




*அதிகாரம் 20*

யோசபாத்தின் வெற்றியின் இரகசியம்.

நம்முடைய ஆவிக்குரிய போராட்டங்களிலும் உலகத்திற்கு அடுத்த போராட்டங்களிலும் நாம் வெற்றி பெறுவதற்கு யோசபாத்தின் மன்றாட்டிலிருந்து நாம் செய்ய வேண்டிய காரியங்கள்.

1. கடவுளைத் தேட வேண்டும். வச. 3

2. கடவுளுக்கு முன்பாக தாழ்மைப்பட வேண்டும். வச.18

3. தேவனுடைய ஆளுகையை விசுவாசிக்க வேண்டும். வச 6

4. நம்முடைய
இயலாமையை
அறிக்கையிட
வேண்டும் .வச.12

5. நாம்
போராட்டத்தில்
கலந்து கொண்டி
ருந்தாலும் போர்க்
களத்தை
அவரிடம்
ஒப்படைக்க
வேண்டும். வச. 15

6. நம்முடைய யுத்தங்களை நாம் அல்ல, அவரே நடத்த அவரை அனுமதிக்க வேண்டும். வச 17

7. ஆவிக்குரிய போராட்டத்தில் நிலைத்து நிற்க வேண்டும்‌ விலகிப் போய் விடக்கூடாது. வச.17

8. பயப்படக் கூடாது கோழையாகி விடக் கூடாது. வச.15

9. அவரை நம்ப வேண்டும்.வச.20

10. விசுவாசத்தோடு துதித்து பாட வேண்டும். வச.21

கடவுள் மோசேக்கு கொடுத்த பத்து கட்டளைகளைபோல் நம்முடைய ஆவிக்குரிய போராட்டத்தில் இந்த 10 கட்டளைகளை நாம் பின்பற்றுவோமென்றால் நம்முடைய எதிரிகள் ஒருபோதும் நம்மை மேற்கொள்ள முடியாது.

யோசபாத்தின் மன்றாட்டு விண்ணப்பம் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள் இவைகள். இந்தப் பாடங்கள் எந்தக் காலத்திற்கும் எந்தச் சூழ்நிலைகளுக்கும் எவ்வளவு கடுமையான எதிரிகளை மேற்கொள்வதற்கும்
ஒரு அடிப்படையாக இருக்கிறது.

இந்த அடிப்படை பாடங்களை நாம் பின்பற்றும்போது நம்முடைய வாழ்க்கையிலும் எந்தவிதமான மோவாபியரும், அம்மோனியரும், மெயூனியரும் எதிர்த்து வந்தாலும் கடவுள் நமக்கு வெற்றியைத் தருவார்.

நமக்கும் வெற்றியைக் கொண்டாட ஒரு பெராக்கா கிடைக்கும்.