Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*உருவத்தைக் காண *முயற்சிக்க* *வேண்டாம்.


*உருவத்தைக் காண *முயற்சிக்க* *வேண்டாம்.*

அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார், வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள், ; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு உருவத்தையும் காணவில்லை.
*உபாகமம் 4:12*

தேவனுடைய சத்தத்தைக் கேட்க முயற்சி செய்யுங்கள். உருவத்தைக் காண முயற்சிக்க வேண்டாம்.

சத்தத்தைக் கேட்டவர்கள் ஒருபோதும் வஞ்சிக்கப்பட மாட்டார்கள்.

உருவத்தைப் பார்த்தவர்களில் அநேகர் வஞ்சகத்தில் விழுந்து விட்டார்கள்.

தேவனுடைய சத்தம் நமக்குப் பாதுகாப்பானது.
தேவனுடைய உருவத்தைப் பார்க்க முடியாது.

மோசே தேவனுடைய சத்தத்தைக் கேட்டார். பவுலும் கடவுளின் சத்தத்தைக் கேட்டார்.

தேவனின் சத்தத்தைக் கேட்கும்பொழுது நாம் தாழ்மையுள்ள மனிதர்களாக மாறி விடுகிறோம்.

உருவத்தைப் பார்க்க முயற்சி செய்து பிறகு வேறு எதையாவது பார்த்து‌ பெருமை அடைந்து விழுந்து போனவர்கள் அனேகர்.

ஒளியின் வேடத்தை அணிந்து சாத்தானும் கடவுள் போல் தோன்றுவான். அதைப் பகுத்துப் பார்ப்பது நமக்கு முடியாத காரியம். பரவசத்தை விடப் பாதுகாப்பு முக்கியம்.

நாம் வேதத்தைச் சார்ந்த மக்களாக இருக்க வேண்டும் என்பது தேவனின் கட்டளை.

நாம் வேதத்தைத் தியானிக்கும்போது தேவன் நம்மோடு இடைபடுகிற, நம்மோடு பேசுகிற, மெல்லிய சத்தத்தைக் கேட்காதவர்கள்தான் உருவத்தைக் காண முயற்சிப்பார்கள்.

நாம் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடக்கிறோம்.

வார்த்தைகள் ‌மூலமாகத் தேவனுடைய சத்தத்தைக் கேட்பது மிகவும் ஒரு பாதுகாப்பான அனுபவம். அதைத்தான் ஆண்டவர் விரும்புகிறார்.

ஆர்ப்பாட்டம், பரவசம், கொண்டாட்டம் இவைகள் மூலம் தேவன் ஒரு நாளும் வெளிப்படமாட்டார்.

தியானத்தின் மூலம் வெளிப்படும் ஆண்டவர் பக்தி விருத்திக்கு நேராக, பரிசுத்தத்திற்கு நேராக, ஆன்மீக விடுதலைக்கு நேராக, உலகத்தில் நாம் இயேசு கிறிஸ்துவின் பிரதிநிதிகளாக வெளிப்பட நம்மை வழி நடத்துவார்.

இன்றைய வாலிபர்களைப் பரவசம் என்னும் மாயையிலிருந்து விடுதலையாக்க நாம் பெரும் முயற்சி எடுக்க வேண்டும்.

மிகுந்த பாரத்தோடு ஜெபிக்க வேண்டும்.
இல்லையென்றால் அடுத்த தலைமுறையை நாம் கிறிஸ்துவுக்குள் உருவாக்க முடியாது.

போலி பரவசத்தை நம்மால் முடிந்த அளவுக்கு எதிர்த்து நிற்போம். பொருள் சார்ந்த விவாதத்தை ஏறெடுப்போம்.

நமக்குத் தனிப்பட்ட மனிதர்கள் விரோதி அல்ல. போலிகளை உற்பத்தி பண்ணுகிறவனே நமக்கு விரோதி.

வசன வெளிச்சத்தை காட்டுவோம். இருளை அகற்றுவோம். போலிகளை அடையாளம் காட்ட நம்மால்
முடிந்ததெல்லாம் செய்வோம்.

போலிகள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் அவர்களை அடையாளம் காட்ட தயங்க கூடாது.