Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*வேத பாடம் 16.* 1 *நாளாகமம்* *அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* .
*உங்கள் சிந்தனைக்கு.*
*வேத பாடம் 16.*

1 *நாளாகமம்* *அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* .

தியானிக்க வேண்டிய வேத பகுதி19:13.

" *தைரியமாயிரு , *நாம் நம்முடைய* *ஜனத்திற்காகவும்* , *நமது தேவனுடைய* *பட்டணங்களுக்காகவும்*திடன்* *கொண்டிருக்கக்கடவோம்*, *கர்த்தர்* *தமது பார்வைக்கு* *நலமானதைச்* *செய்வாராக என்றான்*" .
(1 நாளாகமம் 19:13)

இந்த வசனத்தில் சொல்லப்பட்ட நிகழ்வு நடந்த பின்னணி.
நாகாசு (Nahash) — அம்மோனிய அரசாங்கத்தின் ராஜா.
அவன் சவுலின் ஆட்சிக் காலத்தில் (1 சாமுவேல் 11:1–2) யாபேசை முற்றுகையிட்டான்.

அப்போது சவுல் அப்பொழுதுதான் ராஜாவாக பதவி ஏற்ற காலம் . அவன் அப்போது இஸ்ரவேலரை ஒன்றிணைத்து, யாபேஸ் மக்களை விடுவித்தான்.

இதனால் நாகாசு சவுல் மேல் சற்று பகைமை கொண்டிருந்தான்.

ஆனால் அதே வேளையில் தாவீது அவனோடு சமாதானமான உறவு வைத்திருந்திருக்கிறார். இதனால்தான் “நாகாசு எனக்கு தயை செய்தான்” 19 ம் வசனத்தில் சொல்லப்பட்ட தாவீதின் சொற்களில் தெரிகிறது.

இதன் பொருள், தாவீது
சவுலிடமிருந்து தப்பித்து ஓடிய நாட்களில் நாகாசு தாவீதுக்கு உதவி
செய்திருக்கலாம்.

நாகாஸ் மரித்து, அவன் குமாரன், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1 நாளாகமம் 19:2

தாவீது "ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவு செய்ததுபோல,நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவு செய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக ஆறுதல் சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்."

தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது, அந்த
நாட்டின் பிரபுக்கள் அவர்களை வேவு பார்க்க வந்தவராக கருதி அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.

அது மட்டுமல்ல அவன் அவன் மிகப் பெரிய படையை திரட்டி தனக்கு ஆதரவாக சீரிய தேசத்து கூலிப் படைகளையும் இணைத்துக் கொண்டான்.

அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.
2 சாமுவேல் 10:7.

இந்தப் போர்க் களத்தில் தாவீது நேரடியாக கலந்து கொள்ளவில்லை. அதற்கு பதிலாக தன்னுடைய படைத்தளபதி யோவாபை போருக்கு அனுப்பினான்.

யோவாபுக்கு இந்த போர்க்களம்
மிகப்பெரிய சோதனையான ஒன்று . ஒரு பக்கம் மிகப்பெரிய அம்மோன் தேசத்தின் ராணுவத்தையும்
இன்னொரு பக்கம் சீரிய தேசத்தின் கூலிப்படைகளையும் எதிர்க்க வேண்டிய சூழ்நிலை. அப்பொழுதுதான் இந்த வார்த்தையை அவன் சொல்கிறான்.
*"தைரியமாயிருப்போம்* , *நாம்* *நம்முடைய* *ஜனத்திற்காகவும்* , *நமது தேவனுடைய* *பட்டணங்களுக்காகவும்* **திடன்கொண்டிருக்கக்கடவோம்.* *கர்த்தர்* *தமது* *பார்வைக்கு* *நலமானதைச்* *செய்வாராக* " *என்றான்* .
(1 நாளாகமம் 19:13)

ஆம் நம்முடைய போர்க்களத்தில் நம்முடைய படைத்தலைவர் இயேசு கிறிஸ்து
நம்மை ஆவிக்குரிய போர்க்களத்துக்கு அனுப்பி இருக்கிறார்.

இந்த போர்க்களத்தில் இயேசு கிறிஸ்துவின் சார்பாக நிற்கிறோம். நம்முடைய போர்க்களம் என்பது இந்த உலகத்தில் மட்டுமல்ல அது விண்ணுலகிலும் நடந்து கொண்டிருக்கிறது. ( *படிக்க* *தானியல்* *பத்தாவது* *அதிகாரம்*)

நாம் அவருக்காக தைரியமாக நிற்கும் பொழுது வெற்றி நம்முடையது. அவர் இந்த போர்க்களத்தில் தமக்கு நலமானதை நமக்கு செய்வார்.

தாவீது சார்பாக ‌யோவாப் நின்றது போல இன்றைக்கு இந்த போர்க்களத்தில் இயேசு கிறிஸ்து சார்பாக நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு விசுவாசியும் கடவுளுக்காக தேவனுடைய சபைக்காக பக்தி வைராக்கியம் கொண்டவர்களாக காணப்பட வேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் அரசாங்கமும் அதிகாரமும் நமக்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையில் ஒவ்வொரு விசுவாசியும்  தங்களுடைய நிலையில், அழைப்பில் தைரியமாக, வைராக்கியமாக அழைக்கப்பட்டி ருக்கிறோம்.

இன்றைக்கு நமக்குள்ள மிகப் பெரிய ஊழியம் நம்மையும் காத்துக் கொண்டு நம்முடைய குடும்பத்தை அடுத்த தலைமுறைக்கு நிலை நிறுத்தவும் ,நமக்கு கடவுள் தனிப்பட்ட முறையில் கொடுத்த ஊழியத்தை இறுதிவரை நிறைவேற்றவும் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.

நாம் ஆண்டவருக்காக தைரியமாக விசுவாசத்தோடு செயல்படும்பொழுது கடவுள் தமக்கு நலமானதை நம்மிலும் நம்முடைய குடும்பத்திலும், ஊழியத்திலும் நிச்சயம் நிறைவேற்றுவார்,
நமக்குத் தேவை திடமானது , விசுவாசம்.
இந்த இரண்டு காரியங்களையும் உறுதியாக பற்றிக் கொண்டால் வெற்றி நமதே‌.

எசேக்கியேல் சண்முகவேல்
கைபேசி எண்
9444447744
7397312322