1 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்* வேதபாடம் – 15
*உங்கள் சிந்தனைக்கு.*
1 *நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்*
*வேதபாடம் – 15*
*தியானிக்க வேண்டிய* *வேத பகுதி: 1*
1.நாளாகமம்17:16–19.*
தாவீதுக்கு கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்
இந்த வேதப் பகுதி தேவபிள்ளைகள் அதிகம் நேசித்து வாசிக்கும் பகுதி.
புதிய வருட ஆராதனைகளிலும் இவ்வசனங்கள் அதிகம் தியானிக்கப்படுகின்றன. ஆனால், இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆழமான சில காரியங்களை நாம் கவனிக்காமல் விடுகிறோம். அதை இப்போது பார்ப்போம்.
இந்த வசனத்தை, 17ஆம் அதிகாரத்தின் 11–14 ஆம் வசனங்களோடு இணைத்து பார்க்கும்போது, தாவீது சொன்ன வார்த்தைகளின் ஆழத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
நாம் பயன்படுத்தும் பவர் மொழிபெயர்ப் பில் 19 ஆம் வசனம் இவ்வாறு உள்ளது:
“ *உமது அடியனின்* *நிமித்தமும், உமது* *இருதயத்தின்படியும் , இந்தப் பெரிய* *காரியங்களையெல்லாம்* *அறியப்* *பண்ணும்படிக்கு* , *இந்தப்* *பெரிய* *காரியத்தையெல்லாம்* *செய்தீர்* .”
(1நாளாகமம். 17:19)
இந்த வசனத்தை ஒருவர் மேலோட்டமாகப் பார்த்தால், கடவுள் தாவீதுக்கு செய்த உலக நன்மைகளைக் கண்காணித்து தாவீது இவ்வாறு சொன்னான் என்று நினைத்து விடலாம்.
ஆனால், தாவீது அப்படிச்சொல்லவில்லை.அவன் சொன்னது:
“ *தேவனாகிய* *தர்த்தாவே நான்* *எம்மாத்திரம்? என்* *வீடும்* *எம்மாத்திரம? *நீர்* *என்னை* *இவ்வளவு** *தூரமட்டும்* *கொண்டுவந்தீரே* '"
—
1 நாளாகமம் 17:16
தாவீது உயர்ந்த அரசனாக இருந்தான்:
சிறந்த போர் வீரன்.
சிறந்த படைத்தளபதி.
மிகுந்த தைரியசாலி.
15 வயதில் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டவன்.
கோலியாத்தை வீழ்த்தியவன்.
பகைவர்களை வென்று தேசத்தில் அமைதியை நிலைநாட்டியவன்.
யூதர்களுக்கென்று மிகப்பெரிய ராஜ்யத்தை உருவாக்கியவன்.
60 ஆண்டுகளாகக் காணப்படாமலிருந்த உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமுக்கு கொண்டு வந்தவன்.
இவ்வளவு பெரிய ஆசீர்வாதங்கள் ஆடுகளின் பின்னால் திரிந்த தாவீதுக்கு அளிக்கப்பட்டது.
ஆனால், இவற்றையெல்லாம் எண்ணி எண்ணி தாவீது அந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை.
அவன் சிந்தித்தது ஒரு அற்புதமான வாக்குத்தத்தத்தைப் பற்றிதான்.
இலங்கை இலகு மொழிபெயர்ப்பில்
1 நாளாகமம் 17:19 இவ்வாறு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது
:
“யெகோவாவே, உமது அடியவனுக்காக, உமது திட்டத்தின்படி இப்பெரிய செயல்களையெல்லாம் செய்து, இம்மேன்மையான வாக்குத்தத்தங்களையெல்லாம் தெரியப்படுத்தியிருக்கிறீர்.""
அதாவது, கடவுள் தாவீதுக்கு ஒரு நித்திய வாக்குறுதியை அளித்தார்:
“ *உன் சந்ததியில்* *ஒருவனை எழுப்பி,* *அவன்* *அரசாட்சியை* *என்றென்றும்* *நிலைநிறுத்துவேன்* .”
(1 நாளாகமம் 17:12-14)
இது வழக்கமான பூமி அரசாட்சியைப் பற்றியதல்ல.
இது மேசியாவின் அரசாட்சியை பற்றியது.
ஆபிரகாமுக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம்,
ஏதேன் தோட்டத்தில் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம்.
யூதா கோத்திரத்துக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தம்.
இவைகள் அனைத்தும் தாவீதின் வம்சத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவில் நிறைவேறின.
அதனால் தான் தாவீது உணர்ச்சிமிகு தலைவணக்கத்துடன்
“நான் எம்மாத்திரம்?”
எனறு சொன்னான்.
தான் பெற்ற உலக ஆசீர்வாதங்கள் அனைத்தும் இந்த வாக்குத்தத்தத்திற்கு முன்பாக ஒன்றுமில்லாததாகத் தாவீதுக்கு தோன்றின.
*நம்முடைய* *தியானம்*
இவுலக நன்மைகள் எல்லாம் ஒரு காலத்திற்கே.
ஆனால்:
“பரலோகத்தில் நமக்கொரு இடம் உண்டு.”
— இது நித்திய வாக்குத்தத்தம்.
அந்த வாக்குத்தத்தத்தினால் தான் நாம் மகிழ்கிறோம்.
அதற்கு முன்பாக உலக ஆசீர்வாதங்கள் அனைத்தும் சிறியது.
நான்
உண்மையாகவே தாவீதின் ஆன்மீக சந்ததி என்றால் தகுதி இல்லாத நமக்கு இவ்வளவு பெரிய ஆவிக்குரிய நன்மைகளை நாம் பெற்ற பாக்கியமாகக் கருதி இதைப் பெறுவதற்கு நான் எம்மாத்திரம் என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக்
கொள்வோமேயானால் அதுவே இந்தத் தியானத்தின் மிக முக்கியமான சிறப்பான காரியம்.