Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

1 நாளாகமம் அல்லது குறிப்பீடுகள் புத்தகம். வேத பாடம் 16

உங்கள் சிந்தனைக்கு.
1 நாளாகமம் அல்லது குறிப்பீடுகள் புத்தகம்.
வேத பாடம் 16
தைரியமாயிரு, நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம், கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
1 நாளாகமம் 19:13

இந்த நிகழ்வு நடந்த பின்னணி
. நாகாசு (Nahash) — அம்மோனிய அரசாங்கத்தின் ராஜா



அவன் சவுலின் ஆட்சிக்காலத்தில் (1 சாமுவேல் 11:1–2) யாபேஸ் கிலேயாத்தை முற்றுகையிட்டான்.

அப்போது சவுல் புதிய ராஜாவாக இருந்து, இஸ்ரவேலரை ஒன்றிணைத்து, யாபேஸ் மக்களை விடுவித்தான்.

இதனால் நாகாசு இஸ்ரவேலுக்குச் சற்று பகைமை கொண்டிருந்தான்.

ஆனால், காலப்போக்கில் தாவீது அவனோடு சமாதானமான உறவு வைத்திருந்திருக்கிறார்.
→ இது “நாகாசு எனக்குச் தயை செய்தான்” என்ற தாவீதின் சொல்களில் தெரிகிறது.
இதன் பொருள், தாவீதின் தப்பித்தோடிய நாட்களில்

(சவுலிடமிருந்து தப்பித்தபோது) நாகாசு தாவீதுக்கு உதவி
செய்திருக்கலாம். நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
1 நாளாகமம் 19:1

அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக ஆறுதல் சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான், தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது, அந்த
நாட்டின் பிரபுக்கள் அவர்களை வேவு பார்க்க வந்தவராகக் கருதி அவமானப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.


ஒவ்வொரு விசுவாசியும் கடவுளுக்காகத் தேவனுடைய சபைக்காகப் பக்தி வைராக்கியம் கொண்டவர்களாகக் காணப்பட வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் நமக்கு அரசாங்கமும் அதிகாரமும் சாதனம் இல்லாத சூழ்நிலையில் ஒவ்வொரு விசுவாசியும் தங்களுடைய நிலையில் அழைப்பில் தைரியமாக வைராக்கியமாக மிக்க அழைக்கப்பட்டு இருக்கிறோம். இன்றைக்கு நமக்குள்ள மிகப்பெரிய ஊழியம் நம்மையும் காத்துக்கொண்டு நம்முடைய குடும்பத்தை அடுத்த தலைமுறைக்கு நிலை நிறுத்தவும் நமக்கு கற்ற தனிப்பட்ட முறையில் கொடுத்த ஊழியத்தை இறுதிவரை நிறைவேற்றவும் அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
நாம் நாம் ஆண்டவருக்காகத் தைரியமாக விசுவாசத்தோடு செயல்படும்பொழுது கடவுள் தமக்கு நலமானதல நம்மிலும் நம்முடைய குடும்பத்திலும், ஊழியத்திலும் நிச்சயம் நிறைவேற்றுவார்,