Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

*சங்கீதப் புத்தகம் வேத பாடம் 9*
*உங்கள் சிந்தனைக்கு*

*சங்கீதப் புத்தகம்
வேத பாடம் 9*

*தியானப் பகுதி: சங்கீதம் 4*

இந்த சங்கீதத்தை மூன்றாவது சங்கீதத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும் என்று சில வேத அறிஞர்கள் கருதுகிறார்கள். *மூன்றாவது* *சங்கீதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள* *சூழ்நிலையின் அடிப்படையிலேயே இந்த சங்கீதமும் இயற்றப்பட்டதாக* *அவர்கள் கருதுகிறார்கள்.*

*மூன்றாவது சங்கீதம் காலைப் பாடல் என்றால், நான்காவது சங்கீதத்தை மாலைப்* *பாடல் என்று கூறலாம். இதற்குச்* *சங்கீதம் 3:5 மற்றும் 4:8 ஆகிய வசனங்கள் பொருத்தமாக இருக்கின்றன* .
இந்த சங்கீதத்தை ராஜரீகம் அவர்கள் மிகவும் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். ராஜரீகம் அவர்கள் புதிய ஏற்பாட்டையும், சங்கீதங்கள் மற்றும் நீதிமொழிகள் ஆகியவற்றையும் மூல மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார். அவருடைய மொழிபெயர்ப்பு மிகவும் அழகானதாகவும், மூல மொழியின் கருத்தைத் தெளிவாக வெளிப்படுத்துவதாகவும் கருதப்படுகிறது.
நான்காம் சங்கீதத்தை அவர் பின்வருமாறு மொழிபெயர்த்திருக்கிறார்:
1 “எனக்கு நீதி கிடைக்கச் செய்யும் கடவுளே,

நான் மன்றாடும்போது எனக்குச் செவிசாய்த்தருளும்; நான் நெருக்கடி நிலையில் இருந்தபோது, நீர் என் இக்கட்டை நீக்கினீர்; எனக்கு இரங்கும்; என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்.
2 மானிடரே, எவ்வளவு காலம் சிலை வழிபாட்டை நாடுவீர்கள்? பொய்யானதைத் தேடிச் செல்வீர்கள்?

எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிமையை அளிக்காமல் இவ்வாறு என்னை அவமானப்படுத்துவீர்கள்?
3 ஆண்டவர் என்னைத் தமக்குரியவனாகத் தேர்ந்துகொண்டார் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.
4 சினங்கொண்டாலும் பாவம் செய்யாதீர்கள்.”
இந்த மொழிபெயர்ப்பை நான் படிக்கும்போது, மூன்றாவது சங்கீதத்தில் சொல்லப்பட்டுள்ள நிகழ்வுகளோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த மொழிபெயர்ப்பு மிகவும் அருமையாக இருப்பதாகத் தோன்றுகிறது.
இங்கு “மானிடரே” என்று தாவீது குறிப்பிடுவது, தன்னோடு இருந்து, பின்னர் தன் மகன் அப்சலோமால் ஏமாற்றப்பட்டு அவனுடன் சேர்ந்துகொண்ட மக்களை நோக்கிச் சொல்லப்பட்ட வார்த்தைகளாகக் கருதலாம்.
அந்த மக்களை நோக்கி தாவீது கூறும் கருத்து இதுவாக இருக்கலாம்:
“ *எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிமையை அளிக்காமல் இவ்வாறு என்னை* *அவமானப்படுத்துவீர்கள்? ஆண்டவர் என்னைத் தமக்குரியவனாகத்* *தேர்ந்துகொண்டார்* *என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். நீங்கள் பின்பற்றுகின்ற என்* *மகன் அப்சலோம், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவன் அல்ல* என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.”
இந்த வரிகள் மூலமாகக் கடவுள் நமக்கு சில முக்கியமான பாடங்களை உணர்த்துகிறார்.
தேவனால் அழைக்கப்பட்டவர்களுக்கும், தேவனால் ஒப்படைக்கப்பட்ட ஊழியத்திற்கும் எதிராக நிற்பது நமக்குத் தகுதியானது அல்ல.
அவர்களுக்கு விரோதமாகக் கலகம் செய்வது, தேவன் கொடுத்த பொறுப்புக்கும் திட்டத்திற்கும் விரோதமாக நிற்பதாக ஆகிவிடலாம்.
அப்சலோம் தாவீதின் மகனாக இருந்தாலும், திறமைசாலியாகவும் அழகானவனாகவும் இருந்தாலும், *தாவீதைப் போல தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா அல்ல.* *தாவீதுக்குப் பிறகு இஸ்ரவேலின் ராஜாவாக இருக்க தேவனால் முன்குறிக்கப்பட்டவர்சாலமோன்.*
*இதை அறியாமல், தன் மகனோடு சேர்ந்து தன்னுடைய** *அரசாங்கத்தைக் கவிழ்த்தவர்களை நோக்கி தாவீது,*
“ *எவ்வளவு காலம் நீங்கள் பொய்யானதைத் தேடிச் செல்வீர்கள்?”*
*என்று கேட்பதாக இந்தப் பகுதியை நாம் தியானிக்கலாம்.*

*எனவே, தேவனால் ஒப்படைக்கப்பட்ட ஊழியத்தையும், தேவனால் அழைக்கப்பட்டவர்களையும் நாம் அவமதிக்கக் கூடாது* .
*ஒவ்வொரு ஊழியத்திற்கும் உரிய மதிப்பை நாம் செலுத்த வேண்டும். எந்த ஊழியம் யாருக்குப் பயன்படும் என்பதை நாம் எப்போதும் தீர்மானிக்க முடியாது. நமக்குப் புரியாத ஒரு ஊழியத்தைப் பார்த்து நாம் ஏளனம் செய்யக்கூடாது.*
*புரிந்துகொள்ள முடியாவிட்டால், ஒதுங்கி இருப்பது நல்லது.*
இராஜரீகம் அவர்கள் சங்கீதம் 4:8-ஐ மிகவும் அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார்:
“ *கடவுளைச் சார்ந்து வாழ்பவன் தனிமையாக வாழ்ந்தாலும், அவனை அச்சமின்றி கடவுள் வாழச் செய்கிறார்.”*
கடவுளைச் சார்ந்து வாழ்கிறவன் உண்மையில் தனிமையான வாழ்க்கை வாழ்பவன் அல்ல. அவன் தேவனோடு இணைந்து வாழ்கிறான்.
“A *man with God is *always* *a majority.”**
*கடவுளோடு இருக்கும் மனிதன் ஒருபோதும் உண்மையான* *அர்த்தத்தில் தனிமையானவன் அல்ல.*
சிறிய சங்கீதமாக இருந்தாலும், மூன்றாம் சங்கீதத்தோடு இணைத்துப் படிக்கும்போதும், தியானிக்கும்போதும், இந்த சங்கீதம் நமக்கு மிகப்பெரிய ஆறுதலையும் சந்தோஷத்தையும் வழங்குகிறது.