எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 1* *Expository Commentary on the Book of Esther
*எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 1*
*Expository Commentary on the Book of Esther*
"எஸ்தர் 'என்றால் நட்சத்திரம் என்று அர்த்தம். இவள் ஒரு தாய் தகப்பன் இல்லாத ஒரு பெண். இந்த பெண்ணை கடவுள் ராணி ஆக்கினார். இந்த புத்தகத்தை எழுதியவர் யார் என்று சரியாக அறியப்பட முடியவில்லை.
வேதாகமத்தில் இரண்டு பெண்மணிகள் பெயர்களில் புத்தகங்கள் காணப்படுகின்றது. ஒன்று எஸ்தர். இன்னொரு புத்தகம் ரூத்.
இந்த புத்தகத்தில் கடவுள், *யெகோவா என்கிற வார்த்தை காணப்படவில்லை* . ஆனாலும் இதை தேவனுடைய வார்த்தையாக சபை முன்னோர்கள், யூதர்கள் தேர்ந்தெடுத்து விட்டார்கள். காரணம், எல்லா நிகழ்வுகளுக்குப் பின்னால் கடவுள் கிரியை செய்கிறார் என்கிற காரியம் இந்த புத்தகத்தில் காணப்படுகின்றது.
“ *God is the author of all history even if He does not sign His name at the bottom of every page.”*
ஒவ்வொரு நிகழ்வின் பின்னாலும் தேவனுடைய திட்டம் இருக்கிறது. God’s providence இந்த புத்தகத்தில் அதிகமாக உணரப்படுகின்றது.
பூரிம் என்கிற பண்டிகை இந்த புத்தகத்தில் தான் முதல் முதலாக கொண்டாடப்படுகின்றது. ஆனால் இந்த பண்டிகை மோசேயினால் ஏற்படுத்தப்படவில்லை. ஆனாலும் இந்தப் பண்டிகை இந்த நாள் வரைக்கும் யூதர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை குறித்து வேறு எந்த பழைய ஏற்பாட்டு நூல்களிலும் காணப்படவில்லை.
*தேவனை அறியாத ஜனங்கள் ஆளும் ராஜ்யங்களின் ஆளுகையின் மத்தியிலும் தேவன் தம்முடைய இறையாண்மையை செலுத்த முடியும் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு உதாரணம்.*
பார்வோன் யூத ஜனங்களை அழிக்க முயன்ற போது தேவன் அவர்களை விடுதலையாக்கினார். அதன் விளைவாக பஸ்கா பண்டிகை ஆதரிக்கப்படுகிறது. *அதேபோல ஆமான் யூத ஜனங்களை அழிப்பதற்கு திட்டம் தீட்டிய போது தேவன் அவர்களை பாதுகாத்ததற்காக பூரிம் பண்டிகை இந்த* *நாள் வரைக்கும் கொண்டாடப்படுகிறது* .
வரலாற்று பின்னணி.
கிமு 538 ல் கோரேசு மன்னன் யூத ஜனங்களை எருசலேமில் ஆலயம் கட்ட அனுமதித்து அவர்களை தங்கள் நாட்டிற்கு திரும்ப அனுமதித்தான்.
கிமு 516 ல் தேவனுடைய ஆலயம் மறுபடியும் கட்டப்பட்டது.
கிமு 478 ல் எஸ்தர் அரசியாக முடி சூட்டப்பட்டாள்.
கிமு 473 ல் எஸ்தர் தன்னுடைய ஜனங்களை காப்பாற்றினாள்.
கிமு 458 ல் எஸ்ரா எருசலேமுக்கு திரும்பினான்.
கிமு 445 ல் நெகேமியா எருசலேமுக்கு திரும்பினான்.
எருசலேம் தேவாலயம் கட்ட கோரேசு மன்னன் அனுமதி அளித்த போதிலும், எருசலேமுக்கு திரும்பாமல் மக்களோடு ஒரு கூட்ட மக்கள் பாபிலோனிலேயே தங்கி விட்டார்கள். காரணம், தங்கள் வாழும் நாட்டில் அவர்கள் வசதியாக இருந்தார்கள். எருசலேம் சென்று கஷ்டங்களை அனுபவித்து தேவனுடைய ஆலயத்தைக் கட்ட அவர்களுக்கு மனம் இல்லை.
ஆனாலும் கடவுள் அவர்களை தன்னுடைய ஜனம் என்று கருதி, அந்த ஜனத்தை அழிக்க திட்டம் தீட்டப்பட்டபோது அவர்களை காப்பாற்றினார். இதன் மூலம் தேவன் தான் முன்குறித்த ஜனங்களை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பதற்கு இது ஒரு சான்று.
*இந்த புத்தகத்தில் எந்த தீர்க்கதரிசனமோ எந்த வாக்குறுதிகளோ* *சொல்லப்படவில்லை* . இறையாண்மையோடு செயல்படுகிறார் என்பதுதான் இந்த புத்தகத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் சத்தியம்.
*இந்த புத்தகத்தில் தற்செயலாக நடந்த சம்பவங்களுக்கு பின்னால் தேவனுடைய கிரியை காணப்படுகிறது* .
இந்த புத்தகத்தை பற்றி புதிய ஏற்பாட்டில் எதுவும் சொல்லப்படவில்லை. அது மட்டும் அல்ல, சவக்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட தோல் சுருள்களில் பழைய ஏற்பாட்டின் அத்தனை நூல்களும் காணப்பட்டது; இந்த நூலைத் தவிர.
இந்த புத்தகத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளும் சத்தியங்கள்
*கடவுள் எல்லா நேரங்களிலும், எல்லா காலங்களிலும்* , *எல்லா இடங்களிலும் அவர் கிரியை செய்து கொண்டுதான்* *இருக்கிறார்* .
*கடவுளுடைய பார்வையில் அமைதியான காலகட்டம்* *அல்லது மறைவான காலகட்டம் என்று ஒன்றும் கிடையாது.*
மனிதர்களுக்கு தற்செயலாக தோன்றும் நிகழ்வுகளுக்கும் பின்னால் தேவனுடைய திட்டம் இருக்க முடியும்.
தேவன் தம்முடைய ஜனங்களை ஒருபோதும் கைவிடமாட்டார்.
தேவன் தமது நாமத்தை வெளிப்படையாக காட்டாமல் இருந்தாலும், தமது கிரியைகளை வரலாற்றில் வெளிப்படுத்துகிறார்.