*1 நாளாகமம் அல்லது* *குறிப்பேடு* *புத்தகம்.* *வேதபாடம் 7.
*Lesson* *7*
*உங்கள் *சிந்தனைக்கு.*
*1 நாளாகமம் அல்லது* *குறிப்பேடு* *புத்தகம்.*
*வேதபாடம் 7.*
படிக்க 14:2
இதே வார்த்தை
2 சாமுவேல் புத்தகம் 5:12 லும் வரும்.
பொதுவாக ஒன்று மற்றும் இரண்டு சாமுவேல் புத்தகங்களில் சொல்லப்பட்ட நிகழ்வுகள் பெரும்பான்மையானவை ஒன்று நாளாகமம் புத்தகத்தில் காணப்படும்.
ஒரே கருத்து இரண்டு புத்தகங்களில் காணப்படும்பொழுது அந்த வாக்கியத்தை கொஞ்சம் சிறப்பு கவனத்துடன் ஆராய வேண்டியது நம்முடைய கடமை.
இந்த வார்த்தைக்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் நான் புரிந்து கொண்ட கருத்தை இங்கே பதிவிட விரும்புகிறேன்.
ஒரு விசுவாசியோ அல்லது ஊழியக்காரனோ அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்படும் பொழுது அவன் ஒரு காரியத்தை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
எந்த விசுவாசி கடவுள் ஏன் தன்னை இவ்வளவு அதிகமாக ஆசீர்வதிக்கிறார் என்பதை புரிந்துகொண்டு அதன்படி நடக்கிறானோ அவன்தான் கர்த்தருடைய சித்தத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும்.
இந்த நோக்கத்தை சரியாக பழைய ஏற்பாட்டில் புரிந்து கொண்ட நபர்கள் இரண்டு பேர். ஒன்று யோசேப்பு இன்னொன்று தாவீது.
யோசேப்பு தன்னுடைய சகோதரர்களின் பொறாமையினால் புறக்கணிக்கப்பட்டு படு குழியில் தள்ளப்பட்டாலும் கடவுள் அவனை அந்த காலத்தில் மிகப்பெரிய சாம்ராஜ்யமான எகிப்தின் அதிபதிக்கு அடுத்த நிலைக்கு உயர்த்தினார்.
எல்லாவித கற்பனைகளுக்கும் எட்டாத அந்த உயர்வை அவன் தனக்கான உயர்வாக கருதாமல் அந்த உயர்வின் நோக்கத்தை அவன் சரியாக புரிந்து கொண்டு தேவனால் முன் குறிக்கப்பட்ட சந்ததியை அப்பொழுது காணப்பட்ட கொடுமையான பட்டினியில் அழிந்து போகாமல் அவர்களை எகிப்திற்கு அழைத்து வந்து அவர்களை காப்பாற்றி தன்னோடு இருக்க வைத்து ஆபிரகாமை குறித்த தேவனுடைய தொடர் ஓட்டத்தை தொடர்ந்து ஓடுவதற்கு வழி செய்தான்.
அந்த நேரத்தில் அவன் சொன்ன மிக அருமையான வார்த்தைகள் இவைகள்.
"உயிர்களைக் காப்பதற்காகவே இறைவன் என்னை உங்களுக்கு முன்பாகவே இங்கு அனுப்பினார்.
பூமியில் மிஞ்சியுள்ள உங்கள் சந்ததியைப் பாதுகாத்து வைக்கவும், உங்கள் உயிர்களைப் பெரும் மீட்பினால் காப்பாற்றவுமே, இறைவன் என்னை உங்களுக்கு முன்பாக இங்கு அனுப்பியுள்ளார்.
.
“ஆகையால் நீங்களல்ல, இறைவனே என்னை இங்கு அனுப்பினார். அவரே என்னைப் பார்வோனுக்குத் தந்தையாகவும், அவன் குடும்பம் முழுவதற்கும் தலைவனாகவும், எகிப்து முழுவதற்கும் ஆளுநராகவும் ஏற்படுத்தினார்."
*ஆதி 45:5-9*
யோசேப்பு தன்னை ஆசீர்வதித்ததற்கான முக்கிய காரணத்தை புரிந்து கொண்டான்.
ஆபிரகாமின் சந்ததியை அதாவது தன்னுடைய சகோதரர்களை பஞ்சத்திலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான் எகிப்தின் அதிபதிக்கு அடுத்த நிலைக்கு தேவன் தன்னை உயர்த்தினார் என்பதை அறிந்து கொண்டான்.
அதை உணர்ந்து யோசேப்பு தன் தகப்பனையும் சகோதரர் குடும்பம் அனைத்தையும் எகிப்துக்கு கொண்டு வந்து பாதுகாத்தான்.
அதேபோல் காடுகளில் ஆடுகளின் பின்னே சுற்றித்திரிந்த ஒருவனை மிகப்பெரிய உச்ச நிலைக்கு உயர்த்தி இஸ்ரவேல் தேசத்திற்கு தேவன், தாவீதை அரசனாக்கினார்.
தாவீது அந்த மிகப்பெரிய உயர்வை தனக்கான உயர்வாக எடுத்துக்கொள்ளாமல் தன் ஜனங்களுக்காக தன்னை உயர்த்தினார் என்பதை புரிந்து கொண்டு அவன் செய்த மூன்று காரியங்கள்.
1 தாவீது இஸ்ரவேல் தேசத்தை சூழ்ந்துள்ள எதிரிகளிடமிருந்து தன் ஜனங்களை காப்பாற்றினான். ஜனங்களை பயமில்லாமல் வாழ வழி செய்தான்.
2.நீதியுடன் ஆட்சி செய்தான்.
" தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான். அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்து வந்தான்.
2 *சாமுவேல் 8:15*
தேவன் தனக்கு கொடுத்த ஆளுமை தனக்கானது அல்ல தன்னுடைய ஜனங்களுக்கானது என்பதை உணர்ந்திருந்தான்.
எந்த ஒரு தலைவன் தன்னுடைய ஆளுமை தனக்கானது அல்ல நான் சார்ந்த சபைக்கானது இயக்கத்திற்கானது என்று கருதுகிறானோ அவனே உண்மையான தலைவன் ,மேய்ப்பன், போதகன்.
3.ஜனங்களின் ஆவிக்குரிய தேவைகளை விருப்பங்களை பூர்த்தி செய்தான்.
பல ஆண்டுகளாக ஆசரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கை பெட்டி இல்லாமல் இருந்தது .
அதை ஆசரிப்பு கூடாரத்துக்குள் கொண்டு வந்து பழைய மகிமையை திரும்ப கொண்டு வந்தான்.
ஜனங்கள் ஆராதிப்பதற்கென்று ஒரு மிகப்பெரிய தேவாலயத்தை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து ஆலயத்தை கட்ட வழி வகுத்தான்.
தாவீதிடம் பல குறைகள் காணப்பட்டாலும் ஆவிக்குரிய புரிதல் மிகவும் கூர்மையாக காணப்பட்டது.
(Spiritual sharpness)
கடவுளிடம் நாம் விரும்பி கேட்க வேண்டிய ஒரு காரியம் என்னவென்றால் அது "ஆவிக்குரிய கூர்மை."
எத்தனையோ காரியங்களில் நாம் கூர்மையாக இருக்க விரும்புகிறோம்.
ஆனால் ஆவிக்குரிய காரியத்தில் நாம் ஒருபோதும் மந்த புத்தி உள்ளவர்களாக காணப்படக்கூடாது.
தாவீதின் வெற்றிகரமான ஓட்டத்திற்கு அவனுடைய ஆவிக்குரிய புத்திசாலித்தனமும் கூர்மையும் ஒரு காரணம் என்றால் அந்த மதிப்பீட்டில் தவறும் இல்லை.
நாம் எப்பொழுதுமே ஆசீர்வாதத்திற்கு சொந்தக்காரர்கள் அல்ல. அதை மற்றவர்களுடைய நலனுக்காக பயன்படுத்துவார்களே என்கிற
சிந்தனை நமக்கு வர வேண்டும்.
We are not the owner of god's blessings..
God expects us to use the blessing of God for the shake of His Kingdom.