Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

கடவுள் தரிசனமானார் என்பதற்கும் தம்மை வெளிப்படுத்தினார் என்பதற்கும்* *என்ன வித்தியாசம்?


*கடவுள் தரிசனமானார் என்பதற்கும் தம்மை வெளிப்படுத்தினார் என்பதற்கும்* *என்ன வித்தியாசம்?*

யாத்திராகமம் 6:3 நமக்குச் சொல்லும் பாடம் என்ன?

"சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன். ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை."
— யாத்திராகமம் 6:3

தேவன் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு சர்வவல்லமையுள்ள தேவனாகத் தோன்றினார் (He appeared as God Almighty — El Shaddai)

. அவருடைய தனிப்பட்ட பெயர் (Personal Name) யேகோவா என்பது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குத் தேவன் தரிசனம் கொடுத்திருந்தாலும், யேகோவா என்கிற நாமத்தினால் தன்னை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை.
ஆனால் மோசேக்கு அந்தப் பெயரால் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார் (Revealed) — யாத்திராகமம் 3:14

. மோசேக்கு மட்டுமல்ல, இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தன்னை யேகோவா தேவனாக வெளிப்படுத்தினார்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால்: ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு உடன்படிக்கையின் தேவனாக தன்னை அறிமுகப்படுத்தினார் (யாத். 6:4). ஆனால் மோசேக்கு என்றென்றைக்கும் இருக்கிற தேவனாக தன்னை வெளிப்படுத்தினார் (Self-existing or Eternal).
இதன் உண்மையான அர்த்தம்: அவர் "என்றென்றும் இருக்கிற தேவன்" — அதாவது "இருக்கிறவராகவே இருக்கிற தேவன்." ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்தை, உடன்படிக்கையை இஸ்ரவேல் மக்களுக்கு நிறைவேற்றுவார் என்பதே அதன் கருத்து.
ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு வாக்குத்தத்தங்களை கொடுக்கத் தோன்றினார் ( *Appeared* ).

யேகோவா என்கிற பெயர் இஸ்ரவேல் மக்கள் மத்தியில் அறியப்பட்டிருந்தாலும், அதனுடைய உண்மையான அர்த்தத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றுகிற தேவனாகத் தன்னை வெளிப்படுத்தினார் ( *Revealed* ).

நாம் கற்றுக்கொள்ளக்கூடிய இரண்டு காரியங்கள்:
1. நம்முடைய தேவன் வாக்குத்தத்தங்களை கொடுக்கிற தேவன் மாத்திரமல்ல, அதை நிறைவேற்றுகிற தேவன் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். அது மாத்திரமல்ல — நம் தேவன் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற தேவன் மாத்திரமல்ல, அவர் அதற்கு மேலே என்றென்றைக்கும் இருக்கிற தேவனாக — முழுமையான கடவுளாக — அறியப்பட வேண்டியவர்.

2. *எல்லா தேவனுடைய* *பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரி தன்னைத்* *தேவன் வெளிப்படுத்த மாட்டார். அவரவர்* *சூழ்நிலைகளுக்கும் அழைப்புக்கும் எப்படித் தேவைப்படுகிறதோ* , *அவ்வாறாகத் தன்னை வெளிப்படுத்துவார்* . *முழுமையாகத் தேவனைப் பற்றிய வெளிப்படுத்தலைப்* *பெற்ற மனிதன் உலகத்தில் யாரும் இல்லை.*
நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற தேவனுடைய வெளிச்சத்திற்கு ஏற்றபடி நடந்தால் போதும்.

தேவனைப் பற்றிய தெளிவான புரிதல் அவசியம்தான் ஆனாலும் அதைவிட நமக்கு கிடைத்த வெளிச்சத்திற்கு முழுமையான கீழ்படிதலே மேன்மையான காரியம்.