**யோபுவின் புத்தகம்* * வேத பாடம் – 27
*உங்கள் சிந்தனைக்கு*
**யோபுவின் புத்தகம்*
*
வேத பாடம் – 27
*"அவர் என்னைச் சோதித்தபின் பொன்னாக விளங்குவேன்* ."
யோபு 23:10
தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்கும் சோதனைகள் வரும். சோதனைகளை தேவன் அனுமதிக்கிறார். *சோதிக்கப்படாத எந்த விசுவாசமும் உண்மையான விசுவாசம் அல்ல.*
சோதனை என்பது ஒரு பரிட்சை. சோதனை என்கிற பரிட்சையில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், சோதனைக்குள் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள் ஏற்படும். சோதனையின் அளவைத் தீர்மானிப்பவர் கடவுள் மட்டுமே.
"இந்த சோதனை மிகவும் கொடியது", " *இந்த சோதனை மிகவும் எளியது" என்று எந்தச் சோதனையையும் வகைப்படுத்த முடியாது.* *சோதிக்கப்படுபவரின் ஆவிக்குரிய திறனைப் பொறுத்து சோதனைகளை கடவுள் அனுமதிப்பார்* .
விசுவாச வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் நாம் சந்திக்கும் சோதனைகள் ஒரு வகை. நாம் ஆவிக்குரிய வளர்ச்சியடைந்த பிறகு சந்திக்கும் சோதனைகள் மற்றொரு வகை. இறுதிக் காலத்தில் நாம் சந்திக்கும் சோதனைகள் வேறொரு வகை. எல்லாக் காலங்களிலும் ஒரே விதமான சோதனைகளை நாம் சந்திப்பது அரிது. சோதனைகளின் அளவும், அவற்றின் நீட்சியும் ஒவ்வொரு விசுவாசிக்கும் மாறுபடும்.
நம்முடைய தாங்கும் சக்திக்கு மேலாக எதையும் அனுமதித்து, தேவன் நம்மைச் சோதிக்க மாட்டார்.
நம்முடைய வாழ்க்கையில் சோதனைகளை நாம் சந்திக்கும்போது, அவற்றைத் துணிவோடு எதிர்நோக்க வேண்டும். சோதனைகளுக்குப் பயந்து பின்வாங்கக் கூடாது. சமரசம் செய்து விடக் கூடாது. பரிசுத்த வாழ்க்கையில் வீழ்ச்சி அடைந்து விடக் கூடாது.
*யோபு இந்த இடத்தில்தான் முதல் முதலாக, "நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன்* " *என்று அறிக்கையிடுகிறான். இதுவரை தன் வழக்கை விசாரிக்கும்படி தேவனை* *நோக்கி விண்ணப்பித்தான். இப்போது, தேவன் அனுமதித்த சோதனையில்* *வெற்றி பெறுவேன் என்று அறிக்கையிடுகிறான்* . *இது மிகப்பெரிய மாற்றம்.*
சோதனைகள் வரும்போது, ஒரு காரியத்தை நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். *இந்தச் சோதனை நம்முடைய பாவங்களினாலா, கீழ்ப்படியாமையினாலா, அல்லது* *வேறு எதனாலா வந்தது என்பதை* *ஆராய்ந்து உறுதிப்படுத்த வேண்டும்.*
நாம் கர்த்தருக்கு முன்பாக உத்தமமாக நடந்து, அதன்பிறகும் நமக்குச் சோதனைகள் வந்தால், அந்தச் சோதனையின் மூலம் கர்த்தர் நம்மைச் சுத்த பொன்னாக மாற்றுவார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
சோதிக்கப்படுவதைப் பற்றி பேதுரு தெளிவாகக் குறிப்பிடுகிறார்:
"அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்."
– 1 பேதுரு 1:7
நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை தங்கத்தைப் போன்றது. தங்கம் ஒரு காலமும் அக்கினிக்குப் பயப்படாது.
*Gold does not fear fire.*
ஒரு சில விசுவாசிகள் சோதனையில் சுட்டெரிக்கப்படுவார்கள். சில விசுவாசிகள் சோதனையில் சுத்த பொன்னாக மாறுவார்கள்.
*The furnace can only make the gold purer and brighter.*
சோதனைகளைக் குறித்த நம்முடைய மனநிலைதான் நம்முடைய வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும்.
*The attitude toward the Word of God and the will of God will determine our success in the test.*
நாம் எந்த அளவுக்கு தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய வசனத்தால் நிறைந்து வாழ்கிறோமோ, அந்த அளவுக்கு சோதனைகளில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்.
*வசனத்திற்குக் கீழ்ப்படிந்து, அதை அனுதின உணவாகக் கொண்டு* *வாழ்கிறவன் சோதனையில் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை* .
*அதுபோல, தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து வாழ்பவனும்* *பின்வாங்கிப் போவதில்லை.*
சோதனையைச் சகிப்பதற்கு இந்த இரண்டு சாவிகள் (Keys) நமக்கு மிகவும் அவசியம்.
தேவனுடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்போம்.
வசனத்தால் நிறைந்து வாழ்வோம்.
கடவுளுடைய பணியில்