*யோபுவின் புத்தகம் – வேதபாடம் 26*
* *உங்கள் சிந்தனைக்கு.
*
*யோபுவின் புத்தகம் – வேதபாடம் 26*
*
" *எல்லாம் வல்லவர் நியாயந்தீர்க்கும் காலத்தை மறைத்திருப்பது ஏன்? அவரை அறிந்தவர்கள் அந்நாட்களுக்காக* *வீணாய்க் காத்திருப்பதும்* *ஏன்* ?"
– யோபு 24:1
*கடவுளை முழுமையாக அறிந்த மனிதன் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை* . *அதுபோல, தம்முடைய ஆதீனத்தில் அவர் நிர்ணயித்துள்ள காலங்களையும், நேரங்களையும், உயர்வுகளையும்,* *தாழ்வுகளையும், மாற்றங்களையும், நியாயத்தீர்ப்புகளையும் முழுமையாக உணர்ந்தவரும் எவரும் இல்லை.*
ஒரு விசுவாசி தேவனைப் பற்றிய அநேக உண்மைகளை அறிந்திருந்தாலும், அவருடைய இறையாண்மையையும், அவருடைய ஆதீனத்தில் முன்குறிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளையும் பற்றிய தெளிவான வேதப்புரிதல் அவசியமானது. ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே யோபு இந்த மகத்தான உண்மையை உணர்ந்திருந்தான்
.
*இந்தத் தியானத்தில், தேவன் மனிதனிடமிருந்து மறைத்துவைத்துள்ள* *சில காலங்களைச் சுருக்கமாகக் காண்போம்* .
1. *இயற்கையின் காலங்கள்*
*பூகம்பங்கள், பெருவெள்ளங்கள், சுனாமிகள், புயல்கள் மற்றும் இயற்கையின் திடீர் மாற்றங்கள்* *எப்போது நிகழும் என்பதை மனிதன் முன்கூட்டியே அறிய இயலாது.* *படைப்பின் இயக்கம் முழுவதும் படைத்தவரின் அதிகாரத்திற்குள் உள்ளது.*
வேத வசனங்கள்: சங்கீதம் 135:6–7; மத்தேயு 5:45.
2. *அரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்*
*ஒரு பேரரசு கணநேரத்தில் வீழ்ந்து போகலாம்; மற்றொன்று எதிர்பாராத விதமாக* *எழும்பலாம். அதிகாரத்தின் அரியணைகள் கவிழ்க்கப்படலாம்* ; *புதிய ஆட்சிகள் தோன்றலாம். மன்னர்களையும் ஆட்சியாளர்களையும்* *உயர்த்துவதும் தாழ்த்துவதும் தேவனுடைய* *கரமே* .
வேத வசனங்கள்: தானியேல் 2:21; ரோமர் 13:1.
3. *வரலாற்றின் திருப்பங்கள்*
உலக வரலாறு பலமுறை திடீரென திசைமாறியிருக்கிறது. *இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலக அரசியல் அமைப்பு* *முற்றிலும் மாறியது.* "சூரியன் மறையாத பேரரசு" என்று போற்றப்பட்ட இங்கிலாந்துகூட தனது உலகளாவிய ஆதிக்கத்தை இழந்தது. மனிதன் வரலாற்றை எழுதுகிறான் என்று தோன்றினாலும், அதன் திசையை நிர்ணயிப்பவர் தேவனே.
வேத வசனம்: எபேசியர் 1:11.
4. *மனித வாழ்க்கையின் காலங்கள்*
ஒரு மனிதனின் வாழ்நாள், அவனுடைய நடைகள், திட்டங்கள், முன்னேற்றங்கள், உயர்வுகள் அனைத்தும் தேவனுடைய கரத்தில் பாதுகாப்பாக உள்ளன. அவர் நிர்ணயித்த காலத்திற்கு முன்னும் பின்னும் எதுவும் நிகழாது.
வேத வசனங்கள்: நீதிமொழிகள் 3:5–6; எபேசியர் 1:11; ரோமர் 8:28.
எனவே, ஒவ்வொரு விசுவாசியும் தேவனுடைய இறையாண்மையைப் பற்றிய வேதப்புரிதலை உறுதியாகப் பெற்றிருக்க வேண்டும். இந்த உண்மையை உணர்ந்தவன் அவசரப்பட்டு செயல்படமாட்டான்; மனித வலிமையிலும் அரசியல் ஆதரவிலும் நம்பிக்கை வைக்கமாட்டான். எந்த மனிதனுக்கும் அல்லது எந்த அரசியல் சக்திக்கும் கருவியாக மாறாமல், தேவனுடைய சித்தமே இறுதியில் நிலைநிற்கும் என்பதை அறிந்து அமைதியோடு வாழ்வான்.
யோபு இந்த உண்மையை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தான்.
ஆகையால், நம்முடைய கடமையை உண்மையோடு செய்வோம். தேவன் ஒப்படைத்த ஊழியத்தை முழுமையோடு நிறைவேற்றுவோம். *நம்முடைய உயர்வையும், முன்னேற்றத்தையும், காலங்களையும், நேரங்களையும் அவர் ஏற்கனவே* *தமது ஞானத்தில் நிர்ணயித்திருக்கிறார்* . *உரிய காலத்தில் அவற்றை நம் வாழ்வில் நிறைவேற்றுவார்* .
காலத்திற்கு முன்பாக மனித முயற்சியால் எதையும் நிலைநிறுத்த முடியாது. நம்முடைய காலங்களும், நேரங்களும், உயர்வுகளும் அவருடைய கரத்தில் பாதுகாப்பாக இருக்கின்றன. அவற்றை அபகரிக்க இந்த உலகத்தில் யாருக்கும் அதிகாரமில்லை.
*ஆகவே, நம்மை முழுமையாக அவருடைய வல்லமையுள்ள கரத்தில் ஒப்படைப்போம்* . *தமது பரிபூரண சித்தத்தின்படி, நமக்கு நன்மையானதை அவர் தமது நேரத்தில்* *தவறாமல் செய்வார்.*