1 நாளாகமம் புத்தகம் அல்லது குறிப்பேடுகள். வேத பாடம் 5
உங்கள் சிந்தனைக்கு
1 நாளாகமம் புத்தகம் அல்லது குறிப்பேடுகள்.
*வேத* *பாடம் 5*
தியானிக்க வேண்டிய வேதப் பகுதி 13:3
I நாளாகமம் 13:3
" நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டு வருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதே போனோம் என்றான்."
தாவீது தன்னுடைய ஆட்சி அரசு பலப்பட்ட பிறகு இஸ்ரவேல் சபையாரை நோக்கி சொன்ன வார்த்தைகள் இவை.
உடன்படிக்கை பெட்டி, ஏலி பிரதான ஆசாரியனாக இருந்தபோது
பெலிஸ்தியரால் பிடிபட்டது, ஏலி அந்தச் செய்தியைக் கேட்டு விழுந்து இறந்தான்.
அந்த உடன்படிக்கை பெட்டி 7 மாதங்கள் பெலிஸ்தியர் தேசத்தில் இருந்தது. (1 சாமு. 6:1).
பிறகு கீரியத்தியாரீமில் உள்ள அபினதாபின் வீட்டில் 20 ஆண்டுகள் இருந்தது. (1 சாமு. 7:2).
அதற்குப் பிறகு சவுல் அரசாண்ட 40 ஆண்டுகளும் அங்கேயே இருந்தது.
சவுல் இஸ்ரவேல் ராஜ்யத்தின் முதல் அரசன்.
கடவுள் இஸ்ரவேல் ஜனங்களின் விருப்பத்திற்கேற்ப அவனைத் தேர்ந்தெடுத்து அவனை அரசன் ஆக்கினார்.
அவன் அரசாண்டது 40 ஆண்டுகள். இந்த 40 வருடங்களில் அவன் பெரும்பாலும் தாவீதை துரத்துவதும், அவனைக் கொல்ல முயற்சிப்பதும், கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் தன்னை அபிஷேகம் பண்ணின சாமுவேல் தீர்க்கதரிசியின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமலும் தன் வாழ்நாளை கழித்து இறுதியில் தன் வாழ்க்கையை தானே முடித்துக் கொண்டான்.
அவன் வாழ்ந்த நாட்களில் ஆசரிப்பு கூடாரத்திற்கு அடுத்த எந்தச் சிறப்பான பணிகளையும் செய்யவில்லை.
ஆசரிப்புக் கூடாரத்திற்கு தேவனுடைய உடன்படிக்கை பெட்டி கொண்டுவரப்படவில்லை என்கிற வருத்தம் அவனுக்குக் கொஞ்சமும் காணப்படவில்லை. அதைப்பற்றி அக்கறைப்படவும் இல்லை.
சிந்திக்கவும் இல்லை .
எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தன்னை அரசனாக்கின கடவுளுடைய ஆலய பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. தேவனுடைய ஆலயத்தை பற்றி உள்ள எந்த சிந்தனையும் இல்லாமல் வாழ்ந்தான்.
கடவுளுக்காக ஒரு நன்றியுள்ள இருதயம் அவனிடத்தில் காணப்படவில்லை.
கடவுள் தன்னை விட்டுக் கடந்து போய்விட்டார் என்கிற உணர்வே இல்லாமல் தன் ஆட்சியை முடித்துக்கொண்டான்.
ஆனால் தாவீது அப்படி காணப்படவில்லை.
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த அவனைக் கடவுள் பயன்படுத்தி ராட்சசன் கோலியாத்தை கொல்வதற்கு
அவனைப் பயன்படுத்தி சவலின் கொலை முயற்சிகளிலிருந்து அவனைக் காப்பாற்றி, அவனை இஸ்ரவேல் தேசத்தின் அரசனாக்கி, படிப்படியாக உயர்த்தி அவன் ஆட்சியைப் பலப்படுத்தினார்.
தன்னுடைய ஆட்சி பலப்படுத்தியவுடன் அவன் செய்ய நினைத்த முதல் காரியம் ஆசரிப்பு கூடாரத்தில் மறுபடியும் தேவனுடைய உடன்படிக்கை பெட்டியை நிலைநிறுத்த வேண்டும் என்பதுதான்.
அதற்கான முதல் முயற்சி தோல்வி அடைந்தது.
உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டு வருகின்ற வேளையில் வைக்கப்பட்டிருந்த வண்டியின் மாடு மிரண்டு போனதால் அது கீழே விழ அதை ஊசா கைநீட்டி பிடித்ததால் கர்த்தர் அவனை அடித்தார்.
அந்தப் பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே
மூன்று மாதம் இருந்தது.
தாவீது
மறுபடியும் முயற்சி எடுத்து உடன்படிக்கை பெட்டி ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து சேர்ந்தது.
இதன் மூலம் அறிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் தாவீதீன் வாழ்க்கையில் எவ்வளவு தோல்விகள் இருந்தாலும் அவன் தேவன் மீது வைத்துள்ள வைராக்கியம், தேவனுடைய ஆலயத்தின் மீது உள்ள பக்தி, கர்த்தருடைய கற்பனைகள்மீது அவனுக்குள்ள பிரியம், கர்த்தரை தேடுகிற காரியம், வேத வசனங்களை நேசிக்கிற காரியம் இதில் ஒருபோதும் குறைபட்டதில்லை.
அதனால் தாவீது தேவனுடைய இருதயத்திற்கு ஏற்றவனாகக் காணப்பட்டதில்
எந்த ஆச்சரியமும் இல்லை.
தன்னை உயர்த்திய கடவுளுக்கு நன்றி உள்ளவனாக இருந்தான்..
ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆசரிப்புக் கூடாரத்தில் உடன்படிக்கைப் பெட்டி காணப்படவில்லை.
இந்த உணர்வு அவனை பட்சித்திருக்க வேண்டும்.
அதனால்தான் தேவனுக்கு ஒரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்று மிக வாஞ்சையோடு இருந்தான்.
இன்றைக்கு நாமும் கூடத் தேவன் நமக்குக் கொடுத்த ஆசீர்வாதங்களோடு திருப்தி அடைந்து நம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது. அவருடைய சபையைக் குறித்து அவருடைய ஊழியங்களை குறித்து அவர் நமக்கு அளித்த வசனங்களைக் குறித்து தேவன் நமக்கு அளித்த ஊழிய பாரங்களை நாம் ஒருபோதும் நீர்த்துப் போகப் பண்ணக் கூடாது.
ஆரம்ப நாட்களில் அவர்மீது வைத்துள்ள பக்தி, காதல், வைராக்கியம் இவைகள் காலங்கள் போக போக வசதிகள் உயர உயர பாடுகள் அதிகரிக்க மங்கி விடக் கூடாது.
கடவுள்மீது நாம் வைத்திருந்த ஆதி அன்பை ஒரு நாளும் எந்தச் சூழ்நிலைகளைக் காட்டியும் சமரசம் செய்து விடக் கூடாது.
அதனால்தான் இயேசு கிறிஸ்துவை தாவீதின் குமாரன் என்று வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நமக்கும் தாவீதைப் போல மங்கி போகாத வைராக்கியத்தை கடவுள் தருவாராக.
எ