1 நாளாகமம் அல்லது குறிப்பேடு புத்தகம். *வேத பாடம் 4*
*Bible lesson 4*
*உங்கள் சிந்தனைக்கு*
1 நாளாகமம் அல்லது குறிப்பேடு புத்தகம்.
*வேத பாடம் 4*
தாவீது நாளுக்கு நாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் கர்த்தர் அவனோடே கூட இருந்தார்.
1 நாளாகமம் 11:9
நாளுக்கு நாள் விருத்தி அடைந்தான் என்றால் என்ன? இதற்கான விடைகளுக்கு இந்தப் புத்தகத்தின் அதிகாரம் 11 :10 முதல் 13:22 வரை உள்ள வசனங்களைப் படித்துப் பார்த்தால் நமக்குத் தெரியும்.
அதிகாரம் 13:22 ல் இப்படியாக வேதம் கூறுகிறது,
"அக்காலத்திலே நாளுக்கு நாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப் போல மகா சேனையானார்கள்."
அவனுக்கு உதவி செய்யும் மனிதர்கள் நாளுக்கு நாள் அவனைச் சேர்ந்தார்கள். இதுதான் அவனுடைய நாளுக்கு நாள் வளர்ச்சியின் அடையாளம்.
இந்த அதிகாரத்தில் நாளுக்கு நாள் அவனோடு சேர்ந்தவர்களின் பட்டியலை இப்பொழுது பார்க்கலாம்.
வேதத்தில் தாவீதோடு இருந்த பராக்கிரமசாலிகள் (David’s Mighty Men) என்ற பெயரில் பலர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தாவீதின் அரசாட்சிக் காலத்தில் அவனுக்காக உயிர் விட்டுப் போராடிய வீரர்களின் பெயர்கள் 2 சாமுவேல் 23 மற்றும் 1 நாளாகமம் 11 ஆகிய அதிகாரங்களில் விவரமாக வருகிறது.
1.மூன்று தலைசிறந்த பராக்கிரமசாலிகள்.
இவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள்:
(1.) யாஷோபியாம் .300 பேரை ஒரே சமயத்தில் வீழ்த்தியவன்.
(2.)எலெயாசார் , தோதோவின் மகன்.பெலிஸ்தியருக்கு எதிராகப் போராடி எதிர்த்தவன்.
(3).சம்மா
2.
இவர்கள் இல்லாத மற்ற மூன்று வீரர்கள்
(1)அபிசாய் , யோவாபின் சகோதரன்) – 300 பேரை ஈட்டி கொண்டு கொன்றவன்.
(2).பெனாயா யோய்தாவின் மகன் மோவாபியரின் இரண்டு வல்லமையான வீரர்களை அழித்தவன்.
பனியின்போது ஒரு சிங்கத்தைக் கிணற்றில் கொன்றவன்; ஒரு எகிப்திய வீரனை அவன் ஈட்டியைக் கொண்டு வென்றவன்
(நமது பவர் மொழிபெயர்ப்பில் இரண்டு வீரர்கள் என்பதற்கு பதிலாக இரண்டு சிங்கங்கள் என்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
3."முப்பது வீரர்கள்"
அதி 11:25
ஆக மொத்தம் 37 வலிமையான போர் வீரர்கள் தாவீதோடு இணைந்து கொண்டார்கள்.
இவர்களைத் தவிர
தாவீதின் படைத்தளபதி
யோவாப் ஒரு மிகச்சிறந்த போர் வீரன்.
தாவீதுக்காகப் போராடி, எருசலேமைக் கைப்பற்ற உதவினான். (1 நாளாகமம் 11:6).
பல போர்களில் வெற்றி பெற்று தாவீதின் ராஜ்யத்தை நிலைநிறுத்தினான்.
இதைத் தவிர பனிரெண்டாவது அதிகாரத்தில்
தாவீது கீஷின் மகன் சவுலினால் துரத்தப்பட்டு, சிக்லாத் என்னுமிடத்தில் ஒளித்திருந்தபோது யுத்தத்தில் அவனுக்கு உதவிசெய்ய வந்த வீரர்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.
இப்படியாகத் தாவீதுக்கு ஆதரவாகக் கர்த்தர் மிகப்பெரிய பலசாலிகளையும், தளபதிகளையும் எழுப்பினார். கர்த்தர் ஒரு மனிதனைக் கொண்டு ஒரு ஊழியத்தை எழுப்ப முடிவு செய்துவிட்டால் முதலில் அந்த ஊழியத்திற்கு ஆதரவாக அந்த ஊழியருக்கு உதவியாகத் தேவைப்படுகின்ற அனைத்து உதவிகளையும் அளிப்பார். .
அதில் மனிதர்களும் அடங்குவார்கள்.
ஒரு மிகச்சிறந்த தலைவன் யார் என்றால் நல்ல தளபதிகளை அடையாளம் கண்டு அவர்களைத் தன்னோடு இணைத்துக் கொண்டு தேவன் தனக்கு அளித்த நோக்கத்தை நிறைவேற்றுபவனே சிறந்த தலைவர். தனி மரம் தோப்பாக மாற முடியாது என்பார்கள்.
அது போலதான் ஒரு அமைப்பை, ஒரு சபையை ஏற்படுத்துவதற்கு உதவி செய்யச் சகல விதமான உதவிகளையும் நபர்களையும் எந்த ஒரு தலைவன் பெற்றுக் கொள்கிறனோ அவன் கடவுள் தனக்கு அளித்த சித்தத்தை இந்த உலகத்தில் நிறைவேற்றுகிறவனாகக் காணப்படுவான்.
இயேசு கிறிஸ்துவும் மனித தயவில் வளர்ந்ததாகப் பார்க்கலாம். ஒரு மனிதன் தான் மட்டுமே எதையும் சாதித்து விட முடியும் என்று நினைப்பது தேவனுடைய பார்வையில் சரியல்ல.
எந்த ஊழியமாக இருந்தாலும் அவன் அந்த ஊழியத்தை நிறைவேற்ற அவனுக்கும் மனித உதவிகள் தேவை.
அதுபோலத் தான் தாவீதுக்கு ராஜ்யத்தை கட்டுவதற்கு எதிரிகளோடு போரிடுவதற்கு தேவையான அனைத்து திறமை படைத்த போர்வீரர்களையும் கடவுள் அளித்தார்.
அதனால்தான் அவன் நாளுக்கு நாள் வளர்ந்தான்.
அவனுடைய சேனை பெருகியது.
இதில் முக்கியமாக அறிந்து கொள்ளக்கூடிய காரியம் என்னவென்றால் தாவீதை போலவே சிறப்பான போர்வீரர்கள் அவனுக்குக் கீழ் இருந்தார்கள். அவர்கள் எல்லோரும் அவனுக்கு அடங்கியிருந்தார்கள் . அவன் வாழ்ந்த காலம்வரை (தன் மகன்கள் மூலமாக ஏற்பட்ட நிகழ்வுகளைத் தவிர) தலைமைப் பொறுப்புக்கு எதிராகக் கலகம் யாரும் செய்யவில்லை.
தலைமைப் பொறுப்பு எவ்வளவு கடினமானதோ அதுபோல ஒரு தலைவனுக்கு உடன் ஊழியராக இருந்து பணி செய்வதும் அதுவும் திறமைசாலிகளாக
தலைவனுக்குக் கீழ் இருந்து பணி செய்வது மிகவும் கடினம்.
ஒரு வகையில் சொல்லப் போனால் தலைமைப் பொறுப்பைக் கூடச் சரியாக நிறைவேற்றி விடலாம் .ஆனால் திறமைசாலிகள் ஒரு தலைவனுக்குக் கீழ் இருந்து அந்த ஊழியத்தை நிறைவேற்றுவது மிகவும் கடினம். . ஊழியத்தில் playing second fiddle மிக மிகக் கடினம். தாவீதுக்கு அப்படிப்பட்ட நிலைமை ஏற்படவில்லை
காரணம் அவனும் தன் உடன் ஊழியர்களை மதித்து நடந்தான். தன்னுடைய படைத் தளபதி யோவாப் அநேக நேரங்களில் அவனுக்குப் பிரியம் இல்லாத காரியங்களைச் செய்தாலும் அவனைக் கடைசி வரை அந்தப் பொறுப்பிலிருந்து அவனை விலக்கவில்லை. அவனைத் ் தண்டிக்கும் பொறுப்பை அவன் மகன் சாலொமோனிடம் விட்டுவிட்டான்.
எனவே தாவீதின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பலசாலிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
இதுவும் தன்னுடைய ராஜ்யத்தை விரிவுப் படுத்துவதற்கு மிக முக்கிய காரணம். தாவீது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்தான் என்றால் அந்த வளர்ச்சியில் தேவனுடைய தயவும் தாவீதினுடைய தலைமைப் பண்பும் இணைந்து. செயல்பட்டது