*எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 3* வஸ்தியின் எதிர்ப்பும் தேவனின் திட்டமும் *Expository Commentary on the Book of Esther*
*எஸ்தர் புத்தகம் — வேதபாடம் 3*
வஸ்தியின் எதிர்ப்பும் தேவனின் திட்டமும்
*Expository Commentary on the Book of Esther*
வஸ்தியின் மூன்று மறுப்புகள்.
வஸ்தி தன்னுடைய கணவனும் அரசனுமான அகாஸ்வேருவின் கட்டளைக்கு கீழ்ப்படியவில்லை.
இந்த ஒரு செயலில் மூன்று தளங்களில் அவள் மறுப்புத் தெரிவித்தாள்:
◆ ஒரு பெண்ணாக இருந்து ஆணின் கட்டளைக்கு கீழ்படியவில்லை.
◆ ஒரு மனைவியாக இருந்து கணவனின் கட்டளைக்கு கீழ்படியவில்லை.
◆ ஒரு நாட்டினுடைய குடிமகளாக இருந்து அரசகட்டளை மீறினாள்.
" *Here was a woman challenging the authority of a man, a wife disobeying the orders of her husband, and a subject defying the* *command of the king." — Warren Wiersbe*
மறுப்புக்கான காரணம்:
*பரிசுத்த வேதாகமம் இந்த இடத்தில் அமைதியாக இருக்கிறது. எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.*
வஸ்தி ஏன் அரசகட்டளைக்கு கீழ்படியவில்லை என்பதற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு காரணங்களை கூறுகிறார்கள்:
◆ அரசகுடும்பத்தை சேர்ந்த பெண்கள் பொதுவெளியில் தங்கள் அழகை காட்டுவது தகாது என்ற பண்பாட்டு நடைமுறை அக்காலத்தில் இருந்தது; அதனால் அவள் அந்த அழைப்பை நிராகரித்திருக்கலாம்.
◆ சில வேத அறிஞர்கள் அவள் அக்காலத்தில் கருவுற்றிருந்ததால் மறுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
◆ ஒரு நாட்டின் அரசி என்ற கண்ணியத்தை காப்பாற்றுவதற்காக, மற்றவர்கள் முன்பாக காட்சிப்பொருளாக நிறுத்தப்படுவதை விரும்பாமல் மறுத்திருக்கலாம்.
வேதம் எந்த இடத்தில் அமைதியாக இருக்கிறதோ, அங்கே நாமும் அமைதியாக இருந்து விட வேண்டியது.
வஸ்தி மறுப்புக்கான காரணத்தை குறித்து வேதம் எதுவும் சொல்லவில்லை. எனவே அதைப் பற்றி நாம் புலன் விசாரணை செய்ய அவசியமில்லை.
ஒரு அரசியின் வீழ்ச்சி — இன்னொரு அரசியின் எழுச்சி
வேதம் இங்கு உணர்த்தும் மையகருத்து என்னவென்றால்: ஒரு அரசியின் வீழ்ச்சியிலிருந்து இன்னொரு அரசியை தேவன் உருவாக்குகிறார் என்பதுதான்.
அரசியலில் கூட *ஒரு அரசாங்கம் வீழ்வதற்கு வெளிப்படையான காரணங்கள் எதுவும் இல்லாவிட்டாலும்* *அதன் பின்னால் ஒரு கடவுளுடைய திட்டம் இருக்கிறது என்பதை புரிந்து* *கொள்ள வேண்டும்.*
செல்வாக்கோடு அரசபீடத்தில் இருந்த வஸ்தியை கீழே இறக்குவதும்,
தந்தையும் தாயும் இல்லாமல் வளர்க்கப்பட்ட அறியப்படாத எஸ்தரை அரசியாக்குவதும்
— தேவனுடைய கரத்தில் இருக்கிறது.
அவர் தன்னுடைய இறையாண்மையின்படி அதிகாரங்களை தனக்கு விருப்பமானவர்களுக்கு கொடுக்கிறார். தகுதி, திறமை, குடிப்பிறப்பு, அழகு, செல்வாக்கு இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு கடவுள் யாரையும் உயர்த்த மாட்டார்.
ஒரு தேசத்தின் மீது கடவுள் தம்முடைய இறையாண்மையை வெளிப்படுத்துவது முழுக்க முழுக்க அவருடைய இறைஆட்சியின் சுதந்திரம். அதைக் கேள்வி கேட்பதற்கு நமக்கு உரிமை இல்லை.
*உலக அரசுகள் எல்லாம் "இரண்டாம் இடத்தில்"* *மட்டுமே — உண்மையான அதிகாரத்தில் இருப்பவர் நம்முடைய கடவுள் மட்டுமே.*
நடைமுறைப் பாடங்கள்
கடவுளால் ஆட்சிபீடம் ஏறியவர்களை:
◆ கனம் பண்ண வேண்டும்.
◆ மதிக்க வேண்டும்.
◆ அவர்களுக்காக ஜெபிக்க வேண்டும்.
*கடவுளின் கட்டளையை மீறி எதுவும் நம்முடைய தேசத்தில் நடக்காது என்பதை புரிந்து* *கொண்டால், அரசியல் நிகழ்வுகளை குறித்து* *தேவையில்லாத விவாதங்களை சபைத் தலைவர்கள் ஏறெடுக்க மாட்டார்கள்.*
இதுவே எஸ்தர் புத்தகம் முதல் அதிகாரத்தில் நாம் கற்றுக் கொள்ளும் பாடம்.
*எசேக்கியல் சண்முகவேல்*