Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

"The man who is separated from sin should be separated to the Scripture
" The man who is separated from sin should be separated to the Scripture "

உலகத்தின் பாவங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவன் வேத வசனத்தோடு இணைந்து இருக்க வேண்டும். பாவத்திலிருந்து விடுதலை பெற்றவன் வாழ்க்கை வசனத்திற்கு சிறைப்படும் வாழ்க்கைக்கு நேராக கடந்து செல்ல வேண்டும்.

அப்படி இல்லை என்றால் அவன் மறுபடியும் பாவ வாழ்க்கைக்கு சிறைப்பட்டு போவான். வேதத்தின் மீது உள்ளஅன்பு ,வேதவாசிப்பு தியானம் இவைகள் மூலமாகத்தான் பாவத்தின் அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.

பரிசுத்த ஆவியானவர் மூலமாக நமக்கு கிடைக்கும் வேத வெளிச்சம் நமக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஆவிக்குரிய ஆயுதம் .
அவைகள் மூலமாக நாம் பாவத்தை எளிதாக மேற்கொள்ளலாம்.
அனுதின வேத வாசிப்பு ,தியானம் ,இவைகள் கிறிஸ்தவ வளர்ச்சிக்கு அடிப்படையான மூலக்கூறுகள்.
வேதத்தோடு இணைந்த மனிதன் வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும், நேரங்களிலும் மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயனுள்ளவனாக இருப்பான்.
ஆவிக்குரிய தட்பவெப்ப நிலைகள் ஏற்றத் தாழ்வுகள் சோர்வுகள் ஏமாற்றங்கள் இவைகள் ஒருபோதும் அவன் மற்றவர்களுக்கு பயனுள்ளவனாக இருப்பதை தடை செய்ய முடியாது. இதுதான் முதலாவது சங்கீதம் 1-3 நமக்கு உணர்த்தும் பாடம்.