Instant punishments of God.
Instant punishments of God.
தேவன் எல்லா நேரங்களிலும் நாம் செய்யும் பாவங்களுக்கும், குற்றங்களுக்கும், மீறுதல்களுக்கும் உடனடியாக சிட்சைகளை அல்லது தண்டனைகளை வழங்க மாட்டார்.
அவருடைய அநாதி தீர்மானத்தின் படி, அவருடைய நோக்கத்தின் படி நம்முடைய பக்தி விருத்திக்காக அவருடைய சிட்சைகள் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படும்.
ஆனால் சில நேரங்களில் அவருடைய தண்டனைகளும் சிட்சைகளும் உடனடியாக வெளிப்படும். வேதத்தில் ஏற்பட்ட அப்படிப்பட்ட தருணங்களை இப்பொழுது பார்க்கலாம்.
1சோதோம், கொமோரா அழிவு
ஆதியாகமம் 19:24
2. ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவுக்கு தேவனால் அங்கீகரிக்கப்படாதநெருப்பை ஆலயத்திற்கு கொண்டு வந்ததினால் ஏற்பட்ட மரணம்
லேவி10:1-2
3. மோசேக்கு விரோதமாக மிரியாம் எழும்பின காரணத்தால் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியாக மாறிய காரியம்.
எண்ணாகமம் 12:10
4.கோராகு, தாத்தான்,ஆபிராம் மற்றும் அவரை சேர்ந்தவர்கள் தேவனுக்கு மோசேக்கு விரோதமாக எழும்பினதால் ஏற்பட்ட சடுதியான மரணம்.
எண்ணா 16வது அதிகாரம்.
5 ஆதி திருச்சபையின் ஆரம்ப நாட்களில்.அனினியா,சப்பிராளின் சடுதியான மரணம்.
இதன் மூலம் நாம் விளங்கிக் கொள்ளும் பாடங்கள்.
சில நேரங்களில் நாம் செய்யும் தவறுகளுக்காக அவருடைய சிட்சைகள் காலம் தாழ்ந்து வெளிப்படலாம்.
சில நேரங்களில் அவைகள் உடனடியாக நமக்கு ஏற்படும்.
காலம் தாழ்த்தி ஏற்படும் பொழுது கர்த்தர் நம்மை தண்டிக்கவில்லை என்றோ, நாம் செய்த காரியங்கள் நியாயமானது என்றோ எண்ணிவிடக்கூடாது.
அவருடைய நேரத்தில், அவருடைய வழியில், அவருடைய திட்டத்தின்படி அவருடைய சிட்சைகள் நம்முடைய வாழ்க்கையில் வெளிப்படும்.
மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களுக்கு தண்டனை கிடையாது.
ஆனால் சிட்சைகள் உண்டு.
Punishment is different from discipline or chastening.
எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே.எபி12:8