603550-2= 603548
6,03550
2
---------------
603548
--------------
வேத புத்தகத்தில் எத்தனையோ கணக்குகள் உண்டு.
ஆனால் மேலே சொல்லப்பட்ட கணக்கு மிகவும் ஒரு எச்சரிக்கையை நமக்கு அளிக்கின்ற கணக்கு.
இஸ்ரவேல் மக்கள் 400 ஆண்டு காலமாக எகிப்து தேசத்திலே அடிமைகளாக வாழ்ந்தார்கள்.
அங்கே அவர்களுடைய வாழ்க்கை கசப்பாக இருந்தது.
அவர்கள் படுகின்ற வேதனையை, கூக்குரலை கேட்ட தேவன் அவர்களை விடுதலை ஆக்கினார் .
அவர்கள் தேவன் வாக்களித்த கானான் தேசத்திற்கு புறப்பட்டு வந்தார்கள்.
அப்பொழுது அந்த திரள் கூட்டத்தில் 603550 பேர் 20 வயதுக்கு மேற்பட்ட அதாவது போர் புரிவதற்கு தகுதியான நபர்கள்.
ஆனால் இவர்கள் தங்களை விடுதலையாக்கின தேவனுடைய வாக்குறுதியை விசுவாசியாமல் அவருக்கு விரோதமாக கலகம் செய்து
அவரை துக்கப்படுத்தினார்கள். வனாந்திரத்தில் தேவனுடைய சத்தத்தை கேட்டு அதன் படி நடக்க மனதில்லாமல் வழி விலகிப் போனார்கள்.
எனவே
யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் அதாவது எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, மற்ற அனைவரும் வனாந்தரத்தில் மடிந்து போனார்கள்.
உபாகமம் 2:14
வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் சொல்லிபடியே, எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.
எண்ணாகமம் 26:65
அதாவது 603548 பேர்கள் அந்த 38 வருட வனாந்திர வாழ்க்கையில் மடிந்து போனார்கள்.
எத்தனை கனவுகளோடு மகிழ்ச்சியோடு தேவன் கொடுக்க போகும் கானான் தேசத்தை அடையப் போகிறோம் என்கிற மகிழ்ச்சியோடு புறப்பட்ட சந்ததி அதை அடைய முடியாமல் போனது எவ்வளவு வேதனையானது.
இத்தனைக்கும் இந்த மக்கள் தேவனுடைய அதிசயங்களை கண்ணால் கண்டவர்கள்.
தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்தவர்கள்.
தேவன் பேசியதை கேட்டவர்கள்.
தேவனுடைய கட்டளைகளை கேட்டு அதன்படி நடக்க தங்களை ஒப்புக்கொடுத்தவர்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக இவர்கள் தேவனுடைய ஜனங்கள்.
ஆனால் அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானுக்குள் செல்ல முடியவில்லை.
இது நமக்கு மிகப்பெரிய எச்சரிப்பு.
இன்று அவர் நமக்கு கொடுக்கும் எச்சரிப்புகளை அலட்சியம் பண்ணாமல்
அவருடைய சத்தத்தைக் கேட்கும் பொழுது, இஸ்ரவேல் மக்கள் வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும், சோதனை நாளிலும் நடந்ததுபோல நாமும் நம்முடைய இருதயத்தை கடினப்படுத்தாமல் இருந்தால் நிச்சயமாக நமது அழைப்பை நாம் நிறைவேற்றுவோம்.
நிற்கிற எவனும் விழாதபடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சங்கீதம் 95:8, 1கொரி 10:12