Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஆதாம்,  ஏவாளை  சபிக்காத கர்த்தர் ஏன் காயினை சபித்தார் ?


ஆதாம்,  ஏவாளை  சபிக்காத கர்த்தர் ஏன் காயினை சபித்தார் ?

ஆண்டவரால் சபிக்கப்பட்ட முதல் மனிதன்  காயின்.

கர்த்தர் முதலில் சர்ப்பத்தையும் சாத்தானையும் பின்பு நிலத்தையும் சபித்தார்.(ஆதி 3:14-17).
ஆனால்  ஆதாமையும் ஏவாளையும் சபிக்கவில்லை.
ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள் . ஆதாம் அதற்கு உடந்தையாக இருந்தான்.
அவர்கள் தேவனுக்கு விரோதமாக எதிர்த்து நிற்கவில்லை.

ஆனால் காயின் நிலை அப்படியில்லை. கர்த்தரோடு நல்மனசாட்சியோடு வாழ விரும்பவில்லை. காணிக்கையின் மூலம் தேவனை பிரியப்படுத்திவிடலாம்  என்று நினைத்தான்.

காணிக்கைகளின் தரத்தை  வைத்தோ அல்லது   அதன்  சிறப்பை வைத்தோ ஆண்டவர் எந்த மனிதனின் செயலையும் அங்கீகரிப்பதில்லை. 

காணிக்கை செலுத்துபவர்களது ஆவிக்குரிய குணங்களின் அடிப்படையில் கர்த்தர் காணிக்கைகளை அங்கீகரிக்கிறார்.

காயின் வழி (The ways of Cain)கர்த்தருக்கு பிரியமில்லாத வழிகள்( யூதா 11).
ஆண்டவரின் ஆளுகையை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களின் வழி, (ஆதி 4: 5,9.)

"நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும். அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் "என்கிற ஆலோசனையை நிராகரித்தான்.
ஆதியாகமம் 4:7

எனவே கர்த்தர் காயினை சபித்தார்.

கர்த்தருக்கு பிரியமில்லாமல்  போலியான ஆராதனை செய்து, பாவத்தோடு விளையாடி, தேவனுடைய இரக்கத்தை அலட்சியம் செய்யும் மனிதர்களின் எந்த  காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரிக்க மாட்டார். அவனுடைய சந்ததி முழுவதும் வெள்ளத்தில் அழிந்து போனது. இன்று காணிக்கைகளை பற்றியே பேசும் எல்லோர்க்கும் காயின் வாழ்க்கை மிகப்பெரிய எச்சரிக்கை .