Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தை ஏன் பிதா நிராகரித்தார்?

இயேசு கிறிஸ்துவின் இறுதி ஜெபம் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?
இயேசு கிறிஸ்துவின் ஜெபத்தை ஏன் பிதா நிராகரித்தார்?

.தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே,
எபேசியர் 3:9



பிதாவின் அநாதி தீர்மானங்களுக்கு ஒத்ததாக இல்லாத எந்த ஜெபமும், குமாரனே ஏறெடுத்தாலும் கேட்கப்படாது.

குமாரனை பிதா ஒரு நோக்கத்தோடு இந்த பூமிக்குஅனுப்பினார்.

குமாரனும் அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பிதாவின் சித்தம் செய்வதற்காக தன்னை ஒப்புக்கொடுத்து மனிதனாக அவதரித்தார்.

அவர் வாழ்ந்தது முப்பத்தி மூன்று வருடங்கள்.

ஆனால் அவரது இறுதி மூன்று மணி நேரம் பாடுகள் தான் நமக்கு மீட்பை சம்பாதித்து கொடுத்தது.
பிதாவின் மீட்பின் திட்டம் அந்த மூன்று மணி நேர பாடுகளை சார்ந்து இருந்தது.

இந்த காரியங்களின் அடிப்படையில்தான் கல்வாரியில் தான் அனுபவிக்க போகும் அந்த உபத்திரவம் அகன்று போக வேண்டும் என்கிற குமாரனின் ஜெபம் நிராகரிக்கப்பட்டது



லூக் 22:42,எபே 3:9

இதைப் பற்றி நான் மிகவும் மதிக்கின்ற R.W.Pink இப்படி எழுதுகிறார்.

Had God so pleased , he could have accepted the blood of beasts. The only reason why He did not was because He had decreed that Christ should make an atonement.’ R.W . PINK
I endorse his view.
Please refer Eph 1:11, 3:11

‘Every thing must be resolved into and traced up to the sovereign pleasure of Him who “works all things after the counsel of His will.
This the Son knew , and to it He fully consented’ Eph 1:11
எந்த ஒரு கருத்தையும் தேவனுடைய அநாதி தீர்மானத்தின் அடிப்படையில் தான் பார்க்கவேண்டும்.

தேவனுடைய அநாதி தீர்மானம் தம்முடைய குமாரன் உலகத்தின் மீட்புக்காக கல்வாரியில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட வேண்டும் என்பதே. அதனுடைய அடிப்படையிலேதான் 'இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் எடுத்து விடும்; என்கிற குமாரனின் வேண்டுகோள் தேவனுடைய பார்வையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே
தீர்மானிக்க பட்ட அந்தத் திட்டம் நிறைவேற வேண்டும்

இதைப் பற்றிய சரியான விளக்கம் எபே3;9-11 ல் தெளிவாக பார்க்கலாம் .

அவர் இந்த உலகத்திற்கு பிரதான ஆசாரியராக அனுப்பப்பட்டு அந்தப் பணியை நிறைவேற்றும் படியான ஆணையைப்பெற்று இந்த உலகத்திற்கு வந்தார்
குமாரனும் விரும்பிதான் தன்னுடைய சரீரத்தை ஒரு பாத்திரமாக கருதி தேவ சித்தத்தை நிறைவேற்றினார்‌ எபி10:1-4
எனவே தேவனுடைய பரந்த நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் இயேசுவின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் உண்மையான சத்தியம். அதையும் குமாரன் அறிந்திருந்தார் என்பது தான் உண்மை.

இப்படி இருக்க நாம் கேட்பதெல்லாம், ஜெபிப்பதெல்லாம் கிடைக்கும், எதைக் கேட்டாலும் தேவன் தருவார், தேவனுடைய ஆசிர்வாதத்தில் ஒரு வேதனையும் இருக்காது, நாம் விரும்பியதை எல்லாம் தேவன் செய்வார்,
நம்முடைய மன விருப்பத்தின்படி நமக்கு செய்வார் என்றெல்லாம் இன்றைக்கு பிரசிங்கமார்கள் விசுவாசிகளை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அது உண்மை அல்ல.
எந்த ஒரு செயலையும் நம்முடைய வாழ்வில் தேவன் தம்முடைய அநாதி தீர்மானத்தின் படி தான் செய்வார். இதுதான் பரிபூரண சத்தியம்.
காது உள்ளவன் கேட்கக்கடவன்