இரகசியங்கள் (Mysteries)
புதிய ஏற்பாட்டில் 11 இரகசியங்கள் (Mysteries) சொல்லப்பட்டிருக்கிறது.
இரகசியம் என்றால் ஒரு காலத்தில் மறைக்கப்பட்டு தற்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
(Which was kept secret since the world began, but now is made manifest)
இந்த 11 இரகசியங்களில் எட்டு இரகசியங்களை பவுல் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒன்றை இயேசு கிறிஸ்துவும் மற்ற இரண்டையும் அப்போஸ்தலர் யோவான் வெளிப்படுத்தியிருக்கிறார்.
புதிய ஏற்பாட்டில் வெளிப்படுத்தப்பட்டுள்ள 11
மறைபொருள்கள்.
1. தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டது.
1தீமோ3:16
2. இயேசு கிறிஸ்து நம்மில் தங்கி வாழ்கிறார்.
கொலோ 1:26-28
3. இஸ்ரவேல் ஜனங்களும் பிற இன மக்களும் இயேசு கிறிஸ்துவின் உடலில் இணைந்து சபையாக காணப்படுகிறார்கள்.
எபே3:1-11
4. ஏழு நட்சத்திரங்கள், ஏழு குத்து விளக்குகளின் மறை பொருள்
வெளி1:12-20
5.. இயேசு கிறிஸ்து வரும் பொழுது நாம் மறுரூபமாக்கப்படுகிறோம்.
1கொரி15:51-55
6. பிற இனங்களின் நிறைவும் இஸ்ரவேல் மக்களின் பிடிவாதமும்.
ரோம 11:25
7. கேட்டின் மகன் அல்லது பாவ மனிதன் வெளிப்படும் நாள்.
2தெச 2:1-12
8. மகா நகரமான பாபிலோனின் ரகசியம்.
9. கிறிஸ்துவின் மணவாட்டியாகிய சபையை குறித்துள்ள ரகசியம்.
எபே 5:22-33
10. இயேசு கிறிஸ்துவுக்குள் பூலோகத்தில் உள்ளவைகளும் பரலோகத்தில் உள்ளவைகளும் இணைக்கப்படுகின்ற காரியம்.எபே 1:9-10
11. பரலோக இராஜ்யத்தை பற்றி உள்ள ரகசியம்.
1தீமோ 3:16 முழு வேதத்திலும் உள்ள மிகச்சிறந்த பகுதிகளில் இதுவும் ஒன்று.
இந்த வேதப் பகுதி யோவான் 3:16 ன் விரிவாக்கம் என எடுத்துக் கொள்ளலாம் (Amplification of John 3:16)
இந்தப் பகுதியில் பல அருமையான கருத்துக்கள் இருந்தாலும் மிகவும் சிகரமான கருத்து எது என்றால் இந்த உலகத்தை படைத்த தேவன் மனித உடலை தன்னுடைய கூடாரமாக ஆக்கிக் கொண்டு 33 ஆண்டுகள் இந்த உலகத்தில் வாழ்ந்த அந்த நிகழ்வுதான்.
பவுலுக்கு வெளிப்படுத்தின அந்த இரகசியத்தை நாம் புரிந்து கொள்ள நமக்கு தேவன் கிருபை செய்திருக்கிறார்.
இதுதான் கிறிஸ்தவத்தின் அடித்தளம். இது ஒரு பகுதி.
இந்த வசனத்தினுடைய இன்னொரு பகுதி
நம்முடைய தேவ பக்தி இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, மரணம், உயிர்த்தெழுதல் இவைகளை நாம் புரிந்து கொள்வதில் அடங்கி இருக்கிறது.
"Godliness springs from the knowledge of incarnation,death resurrection and ascension of the Lord Jesus Christ .Christ".J.N.Darby
இந்த சத்தியங்கள் அனைத்தும் இந்தப் பகுதியில் அடங்கியிருக்கிறது என்பதை நாம் இந்த வசனங்களை தியானித்து பார்த்தால் நமக்கு விளங்கும்.