simony என்றால்என்ன?
படிக்க அப்போ 8:18-24
ஆங்கிலத்தில் “simony” என்கிற வார்த்தை உள்ளது.
அதற்கு அர்த்தம் என்னவென்றால் ஆவிக்குரிய அல்லது புனிதமான காரியங்களை வாங்குவது அல்லது விற்பனை செய்வது என்பதாகும் (Buying or selling of sacred or spiritual things as sacraments or benefices)
அப்போ 8:18-24 ல் சீமோன் செய்த, செய்ய விரும்பின அந்த செயலே simony என்று ஆங்கில அகராதியில் இடம் பெற்றுள்ளது.
இன்றைக்கும் ஆவிக்குரிய அமைப்புகளில், சபைகளில், இயக்கங்களில் நிறுவனங்களில் உள்ள பதவிகள், பொறுப்புகள் பணத்திற்கும், மனிதர்களை பிரியப்படுத்துவதின் மூலமாகவும், சாதி அடிப்படையிலும், குடும்ப உறவின் அடிப்படையிலும் , இன்னும் சொல்லப்படாத பலவித நிர்பந்தங்களுக்கும் விலைக்கு விற்கப்படுவதை பார்க்கிறோம்.
பொறுப்புகள் வழங்கப்படும் பொழுது இவன் இந்த ஊரை சேர்ந்தவனா, இந்த ஜாதியா, நம்ம ஊரு ஆளா, நமது சொந்தங்களா என்கிற அடிப்படையில் பிரித்துப் பார்ப்பது இன்றைய கிறிஸ்தவத்தின் பரிதாபங்கள்.
உண்மை, உழைப்பு, தியாகம், பரிசுத்தம், அழைப்பு, அர்ப்பணிப்பு, தரிசனம் இவைகளை மண்ணோடு மண்ணாக புதைத்துவிட்டு பதவிகளை, பொறுப்புகளை, ஏலம் விடும் அலங்கோலத்தை ஆவிக்குரிய அமைப்புகளில், இயக்கங்களில், நிறுவனங்களில் அரங்கேற்றுவதை பார்க்கிறோம்.
என்ன பரிதாபம்!. விளைவு- The net result Will be
"Movement will become a monument"
என்ன பரிதாபம்! இப்படி பதவிகளை, பொறுப்புகளை விலைக்கு விற்பனை செய்கிறவர்களுக்கு வேதம் சொல்லும் பதில் “தேவனுடைய வரத்தை (பொறுப்பை) பணத்தினாலே சம்பாதித்துக் கொள்ளலாமென்று நீ(நீங்கள் ) நினைத்தபடியால் உன்(உங்கள் பணம்………. ) உன்னோடே(உஙகளோடு)கூட நாசமாய்ப் போகக்கடவது." அப்போ 8:20.
இது தேவனுடைய வார்த்தை அல்லது எச்சரிக்கை.
பொது சமுகம் பேசும் சமுக நீதி, பாரபட்சமின்மை, சமத்துவம் போன்றவைகள் முதலில் தேவனுடைய வீட்டில் இருந்து துவங்க வேண்டும்.