Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஆங்கில அறிவை வளர்க்க வேண்டிய தேவை!


ஆங்கில அறிவை வளர்க்க வேண்டிய தேவை!

கிறிஸ்தவ இலக்கிய உலகில் 4  மொழிகளுக்கு  சிறப்பான இடம் உண்டு.

1. பழைய ஏற்பாடு அநேகமாக அனைத்தும் எபிரேய மொழியில் எழுதப்பட்டது

2.புதிய ஏற்பாட்டில் உள்ள  அனைத்து நூல்களும்  கிரேக்க  மொழியில் எழுதப்பட்டது. முதல் 3 நூற்றாண்டுகள்  கிறிஸ்தவத்தில் கிரேக்க  மொழியின் ஆதிக்கம் அதிகமாக  காணப்பட்டது.

3. கிபி  400 ல் ஜெரோம்  என்பவர்  வேதத்தை லத்தின்  மொழியில் மொழி  பெயர்த்தார். அதுமுதல்  லத்தின்  மொழி ஆதிக்கம்  சுமார் 1000 ஆண்டுகள் நீடித்தது .
Latin Came to be the Language of Early Christendom. From about 500 to 1500 Latin was the principal language of the church.

4. பின்பு வேதம் ஆங்கில   மொழியில்   மொழிபெயர்க்கப்பட்ட  பின்பு அதின் தாக்கம்  இந்நாள்  வரை உள்ளது.
ஆங்கில மொழியில் இன்று நம் கையில் ஆயிரக்கணக்கான   கிறிஸ்தவ இலக்கியங்கள்,  100க்கும்  மேலான  வேதாகம மொழிப்பெயர்ப்புகள்,  விதவிதமான இறையியல் ஆய்வுகள், கட்டுரைகள், வேதாகம வியாக்கியானங்கள்(commentaries )  Bible concordance,  Bible Dictionary  Study Bibles உள்ளன என்று  சொல்லி  கொண்டே  போகலாம். இவைகள்  எல்லாம் 20 ,30 ஆண்டுகள்  தேவசமுகத்தில் இணைந்து தங்களை  தேவனுக்கு  ஒப்புக்கொடுத்து எழுதப்பட்ட,  தேவனிடத்தில்  இருந்து பெறப்பட்ட  முத்துக்கள். 

Dake's Study Bible  ஒரு உதாரணம்.
.
இறையியல்பற்றி ஆயிரக்கணக்கான நூல்கள் உள்ளன.
நமது தமிழில் அந்த அளவிற்கு சிறந்த நூல்கள் இறையியல் ஆய்வுகள்,கட்டுரைகள்,வேதாகம வியாக்கியானங்கள்(commentaries ) Bible concordance, Bible Dictionary  Study Bibles என்பவை கிடையாது.

இதை தமிழ்  கிறிஸ்தவ  உலகம்  முதலில்  புரிந்து  கொள்ளவேண்டும்.

எனவே தமிழ்  கிறிஸ்தவ  உலகம்   ஆங்கிலத்தில் உள்ளவைகளை பயன்படுத்திக் கொள்ள  வேண்டும்.
இதை சாதாரண எளிய  மக்களுக்கு கொண்டு செல்லவேண்டும்.
இறையியல் அறிவு,   வேதஅறிவு, வியாக்கியானம், போதனைகள் இவைகள் "ஆங்கில படித்த மக்களுக்கு மட்டும்” என்கிற நிலைதான்  காணப்படுகிறது.

   இது மாறவேண்டும். நான் அறிந்த வரையில் இறையியல், வேதவியாக்கியானங்களை சாதாரண  மக்களுக்கு கொண்டு சென்றவர்கள் வெகு சிலர்  மட்டுமே.
“எனக்கு தமிழ்  மட்டும் போதும்" “என்  மொழி  எனக்கு  போதும்"  "வேறு மொழி  எனக்கு  தேவை  இல்லை" என்று    சொல்பவர்களை என்னவென்று   சொல்லுவது?

ஆங்கில மொழியை  படிக்க உற்சாகப்படுத்தி ஆங்கில மொழியில்  உள்ள  முத்துக்களை,   பொக்கிஷங்களை நாம் அறிந்து,   என்  தமிழ்  மக்கள் அறிந்து கொள்ள அதை பயன் படுத்துவதே உண்மையான  பாரம்.

இன்றைய தமிழ்  கிறிஸ்தவத்தில் சரியான  வேத போதனை(Bible teaching) இல்லாமல் இருப்பதற்கு ஆங்கில இலக்கியங்களை பயன்படுத்தாமல்  இருப்பதும் ஒரு காரணம்.