Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

Importance of "Born again" experience.

Importance of "Born again" experience.


பழைய ஏற்பாட்டில் தேவனுக்கும், அபிரகாமுக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கைக்கு அடையாளமாக விருத்தசேதனம் கொடுக்கப்பட்டது ஆதி 17:11
விருத்தசேதனம் செய்யப்பட்டவர்களில் ஆபிராமுக்கு அடுத்தபடியாக இஸ்மவேல்தான் முதலில் விருத்தசேதனம் செய்யப்பட்டான் .
ஈசாக்குக்கு முன்பாகவே இஸ்மவேல்தான் விருத்தசேதனம் பண்ணப்பட்டான்.
ஆனால் அவன் வாக்குத்தத்தத்தின் பிள்ளையாக கருதப்படவில்லை.
புதிய ஏற்பாட்டிலும் இதற்கு அடையாளமாக காணப்படுவது திருமுழுக்கு.
ஒரு மனிதன் இந்த திருமுழுக்கின் அடிப்படையில் மட்டும் தேவனுடைய காணக்கூடாத சபையில் அங்கமாக முடியாது.
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியினால் உயிர்ப்பிக்கப்பட்டு, மறுபடியும் பிறந்த நபர்கள் மட்டுமே தேவனுடைய ஆவிக்குரிய சபையில் அங்கமாக மாறமுடியும்.
காணக் கூடிய சபையில் வேண்டுமானால் ஆவியினால் மறுபடியும் பிறக்காமல் ஒருவன் திருமுழுக்குப் பெற்று அங்கமாக மாறலாம்
ஆனால் தேவனுடைய காணக்கூடாத சபையில் மறுபடியும் பிறந்த நபர்கள் மட்டுமே புதிய உடன்படிக்கையின் பிள்ளைகளாக கருதப்படுவார்கள்.
மறுபிறப்பின் அனுபவம் என்பது மிகவும் ஆழமான அடித்தளம்.
இந்த அடித்தளம் இல்லாமல் கட்டப்படும் கட்டடங்கள், சபைகள் இந்த உலகத்தில் தேவ சித்தத்தை செய்ய முடியாது.
மறுபிறப்பின் அனுபவம் இல்லாமல் எண்ணிக்கையை மட்டும் கூட்டிக்கொண்டு, அதிகரித்துக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் எவ்வளவு பெரிய சபைகளாக உலகத்தில் பார்வையில் தோற்றமளித்தாலும் அவர்கள் தேவனுடைய பார்வையில் சபைகளாக கருதப்படமாட்டாது.They are merely buildings.