Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

வெளிப்படுத்தின விசேஷத்தில்அறிந்து கொள்ளக் கூடிய மூன்று சத்தியங்கள்.


வெளிப்படுத்தின விசேஷத்தில் சபைகளுக்கு இயேசுகிறிஸ்து கூறிய  செய்தியிலிருந்து அறிந்து கொள்ளக் கூடிய மூன்று சத்தியங்கள்.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சொன்ன அந்த காரியங்கள் இன்றைக்கும் நமது திருச்சபைகளுக்கு  மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

சபையை பாதிக்கும் மூன்று காரியங்கள்

1. வெளியிலிருந்து வரும் உபத்திரவங்கள், சித்திரவதைகள்.
  Persecution

2.  தவறான உபதேசங்கள், வேதத்திற்கு புறம்பான காரியங்களை போதிக்கும் போதனைகள்
False doctrines

3. இவைகள் இரண்டையும் சந்திக்க வேண்டிய சபைகள் , சபை தலைவர்கள், விசுவாசிகள் தங்களுடைய சாட்சியை காத்துக் கொள்ள முடியாமல், இந்த மேலே சொல்லப்பட்ட இரண்டு எதிர்ப்புகளையும் சந்திக்க முடியாமல்  தள்ளாடும் சூழ்நிலை .
Sin

The church is under the threefold attack of persecution, false prophets, and immoral men and women of God.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சபைகளுக்கு இயேசு கிறிஸ்து  கொடுத்த எச்சரிப்பு இன்றைக்கும் நம்முடைய சபைகளுக்கு பொருத்தமாய் இருக்கிறது.
இந்த மும்முனை தாக்குதலை சமாளிக்கக்கூடிய பொறுப்பு சபை தலைவர்களை விட திருச்சபைகளில் பெரும்பான்மையாக இருக்கின்ற விசுவாசிகளுக்கு தான் அதிகம் உண்டு என்பது என்னுடைய கருத்து.

இந்தப் பதிவின் மூலக்கருத்து JOHN  STOTT  அவர்களின் “WHAT CHRIST  THINKS OF THE CHURCH “ என்கிற கட்டுரையை  அடிப்படையாகக் கொண்டது