Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

ஆரோனின் இறுதிக்காலம்

ஆரோனின் இறுதிக்காலம்

மோசையைப் போலவே ஆரோனுடைய கடைசி காலங்கள் மிகவும் வேதனை, வாழ்நாள் விருப்பங்கள் நிறைவேறாத காலம்.

ஏற்கனவே பிரதான ஆசாரியனாக நியமிக்கப்பட்டு ஆசரிப்பு கூடாரத்தில் பணியேற்ற அந்த நாளிலேயே தன்னுடைய இரண்டு குமாரர்களையும் இழந்தான். அது அவனுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு வலியைதந்த நிகழ்வு.

இறுதிக் காலத்தில் இஸ்ரவேல் மக்கள் தண்ணீருக்காக கலகம் செய்த போது மோசே ஆத்திரத்தில் கன்மலையை பேசுவதற்கு பதிலாக அடித்த காரணத்தினால் கர்த்தர் மோசே மீதும் ஆரோன் மீதும் கடும் கோபம் கொண்டு அவர்கள் கானானுக்குள் செல்ல அனுமதிக்க வில்லை.

ஆரோனின் இறுதி கால நிகழ்வுகளை விவரிக்கும்
எண்ணாகம புத்தகம்20:23-29 வரை உள்ள வசனங்களை படிக்கும் போது அது நமக்கு பாடங்களை கற்பிக்கும்.

மோசே ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, ஓர் என்னும் மலைக்கு‌ தேவன் போகச் சொன்னார்
எண்ணாகமம் 20:25

பின்பு தேவன் மோசேயிடம்ஆரோன் உடுத்தியிருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்த சொன்னார்
. தேவன் கட்டளை இட்டபடியே மோசே செய்தான்.ஆரோன் அங்கேயே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

முதலில் தன் அண்ணனுக்கு உடைகளை அணிவித்தவன் இப்பொழுது அண்ணனுடைய மகனுக்கு அணிவிக்கிறான்.

மூன்று பேராக சென்றவர்கள் இரண்டு பேராக மலையில் இருந்து திரும்பினார்கள்.

அப்பொழுதுதான் இஸ்ரேல் ஜனங்கள் ஆரோன் மரித்ததை அறிந்தார்கள்.
ஆனால் ஆரோன் எப்படி மரித்தான் என்று சொல்லப்படவில்லை. வாதையினாலோ வானத்திலிருந்து இறங்கி வந்த அக்கினியினாலோ‌ அவன் மரிக்கவில்லை. இயற்கையாக மரித்தான் என்று அறிந்து கொள்ளலாம்.

ஆரோனைப் பொறுத்த அளவில் அவன் மோசேயின் வாயாக பார்வோனுக்கு முன்பாக நின்றவன்.

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தில் இருந்து மீட்டெடுக்க மோசேக்கு துணையாக நின்றவன்.
40 வருட வனாந்திர வாழ்க்கையில் மோசேக்கு அடுத்தபடியாக ஆரோன்தான் தலைவனாக காணப்பட்டான்.

பிரதான ஆசாரியனாக தேவனுக்கு முன்பாக மக்களுக்காக மன்றாடியவன்.

இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டவன் கடைசியில் தான் உயிரோடு இருக்கும்போதே தன் கண் முன்னால் கனத்திற்குரிய ஆசாரிய உடைகளையும் ஆசாரிய இடத்தையும் இழந்தது என்பது மிகவும் வலி நிறைந்த ஒரு அனுபவம்.

அதை ஆரோன் மன நிறைவோடு ஏற்றுக் கொண்டான் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மோசேயை‌ போலவே அவனுடைய இறுதி நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சி உள்ளதாக வசனத்தின் படி காணப்படவில்லை.

தேவன் ஆரோனையும் மோசேயையும் இறுதி காலத்தில் நடத்தின விதம் நமக்கு பலவித கேள்விகளை எழுப்பினாலும் அவைகளுக்கு உண்மையான விளக்கம் பரலோகத்தில் மட்டுமே கிடைக்கும்.

தேவனுடைய சித்தத்துக்கு பரிபூரணமாக தன்னைஒப்புக்கொடுத்தான் ஆரோன்.கர்த்தர் மகிமைப்படுவாராக.