Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

மோசேயின் இறுதி காலம்

மோசேயின் இறுதி காலம்
மோசேயின் இறுதி காலம் தனிமையில் கழிந்தது.
40 வருடங்கள் அவனோடு பயணம் செய்த அவனுடைய அக்கா மீரியாம் அந்த வருட ஆரம்பத்தில் மரித்து போனாள்.
பிறகு அவனுடைய அண்ணன் ஆரோனும் மரித்து போனான். இறுதியில் இவன் மட்டுமே மிஞ்சி இருந்தான். மோசே தேவனால் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு மனிதன். அவனுடைய அர்ப்பணிப்பு தியாகம், பார்வோனுடைய மகன் என்கிற நிலைமையை உதறித் தள்ளிவிட்டு தன் மக்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவன்.
தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பதிலாக தன்னை பெரிய ஜாதியாக்க முன்வந்த போது அந்த மிகப்பெரும் அழைப்பை நிராகரித்தவன்.
தேவனைமுக‌முகமாக தரிசித்தவன் .
தேவனிடமிருந்து நேரடியாக தேவனுடைய கற்பனைகளைப் பெற்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு வழங்கியவன்.
40 வருடங்களாக தன் ஜனங்களை வழிநடத்தியவன்.
ஆனாலும் கானானுக்கு செல்ல வேண்டும் என்கிற இறுதி விருப்பத்தை தேவன் முற்றிலுமாக நிராகரித்து விட்டார். மோசே தன்னுடைய விண்ணப்பத்தை வலியுறுத்தி கெஞ்சிய பிறகும் அதைப்பற்றி பேச வேண்டாம் என்று மோசேயை கடிந்து கொண்டார்.
இறுதி காலங்களில் அவனோடு கூட 40 வருட பயணத்தை ஆரம்பித்த எவரும் கூட இல்லை.
ஆனாலும் மிகுந்த தாழ்மையுடன் தேவன் கொடுத்த பணியை அதற்குப் பிறகும் நிறைவேற்றி கானானை அடைவதற்கு முன்பாக இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தக் கூடிய பொறுப்பை யோசுவாவிடம் ஒப்படைத்து தன் ஊழியத்தை நிறைவாக நிறைவேற்றினான் மோசே.
எப்படி தாவீது தேவனுக்கு ஒரு ஆலயத்தை கட்ட வேண்டும் என்று விரும்பி அதற்கான செல்வங்களை எல்லாம் சேர்த்து வைத்த போதிலும் ஆலயத்தை கட்ட கூடிய பொறுப்பை அவனுடைய மகனான சாலமனிடம் ஒப்படைத்தது போல மோசே தன்னுடைய ஊழியத்தின் அடுத்த பகுதியை நிறைவேற்றும் பொறுப்பை யோசுவாவிடம் ஒப்படைத்து தேவனிடமிருந்து பெற்ற பணியை நிறைவாக முடித்தான்.
எப்படி பவுலும் தன்னுடைய இறுதி நேரத்தில் எல்லோரும் அவரை கைவிட்டாலும் தன்னுடைய ஊழியத்தை நிறைவாக முடித்தானோ அதுபோல மோசேயும் தேவன் தன்னுடைய இறுதி விருப்பத்தை கூட நிறைவேற்றாவிட்டாலும் தேவனிடமிருந்து பெற்ற பணியை மன நிறைவுடன் செய்து முடித்தான் .
மேசேயினுடைய வாழ்க்கை நமக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.
Moses accepted God's painful discipline with meekness.