Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

யோசுவா மோசேயை போல தனக்கு பின்னால் ஏன் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தவில்லை.?
உங்கள் சிந்தனைக்கு:
யோசுவா மோசேயை போல தனக்கு பின்னால் ஏன் ஒரு தலைவனை அறிமுகப்படுத்தவில்லை.?
அல்லது ஏன் உருவாகவில்லை?

மோசேயைப் போலயோசுவா மரிக்கும் போது தனக்குப் பின்னால் ஒரு தலைவனை இஸ்ரவேலரை வழி நடத்தும் படியாக உருவாக்கவில்லை.

இதற்கான காரணங்களை நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
மோசே இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும்படியாக தேவனால் முன் குறிக்கப்பட்டவன்.
ஏறக்குறைய 20 லட்சம் அடிமைகளை அவன் கானானுக்கு செல்வதற்கு முந்திய நிலை வரைக்கும் அவர்களை வழிநடத்தினான்.

Moses was the lawgiver who built a great nation out of a collection of slaves, but Joshua was the general who led that nation in conquering the land and claiming the inheritance. W.W.WIERSBE


யோசுவா மோசேயோடு பல நிலைகளில் இணைந்து செயல்பட்டவன்.
அமேலேக்கியரோடு நடந்த போரில் இஸ்ரவேல் ஜனங்களை வழி நடத்தியவன்.
யாத் 17:8-16
.மோசேயின் ஊழியக்காரனாக செயல்பட்டவன்.
தேவன் கொடுத்த கற்பனைகளை மோசே பெறுவதற்காக சீனாய் மலைக்கு சென்ற போது அவனோடு உடன் சென்றவன். கானானை வேவுபார்க்க பார்க்க சென்றவர்களில் இவனும் ஒருவன்.
இப்படி இவனைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
இறுதியில் மோசேயல்ல தேவனே மோசேக்கு பிறகு ஜனங்களை வழிநடத்த யோசுவாவை நியமித்தார்.

காரணம் அடிமைகளாய் இருந்த அந்த ஜனங்கள் தங்களை தானே ஆளுவதற்கு அனுபவம் இல்லாதவர்களாக காணப்பட்டார்கள்.
அவர்களுக்கு இன்னும் கானானை ஆட்சி செய்திட தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு தலைவன் தேவைப்பட்டான்.

40 வருடங்களாக வனாந்தரத்தில் இருந்த அவர்கள் முழுமையான ஒரு பக்குவம் இல்லாமல் இருந்தார்கள்‌

. ஆனால் யோசுவா மரிக்கும்போது சூழ்நிலை அப்படி இல்லை. 12 கோத்திரங்கள் கானானில் தேவன் தங்களுக்கு அளித்த இடங்களில் தங்களை தலைவர்களாக நிலை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களுக்கென்று ஆசாரியர்கள், ஆசரிப்பு கூடாரம் எல்லாம் உருவாக்கப்பட்டு விட்டது.

அவர்களுக்கு தேவன் அரசனாகவும் அவர்களை வழிநடத்த கற்பனைகளும் இருந்தது‌.


After the conquest of Canaan, the twelve tribes were established in their God Appointed territories, each with its own officers and judges, and the tabernacle and priesthood were in place. The people knew that God was their King, and they had His law to guide them.W.W.WIERSBE

எனவே யோசுவா மரிக்கும் பொழுது அவர்களை வழிநடத்த தலைவர்கள் உருவாகியிருந்தார்கள். எனவே யோசுவா தனக்கு பின்னால் ஒரு தலைவனை நியமிக்கவுமில்லை. அதற்கு தேவன் கட்டளை இடவும் இல்லை.
இஸ்ரவேல் ஜனங்களுடைய வீழ்ச்சிக்கு காரணம் யோசுவாக்கு பின் வந்த இரண்டாம் தலைமுறை மக்கள் ஆண்டவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படியாத காரணத்தினால் அவர்கள் வழி விலகிப் போனார்கள்.

தலைவர்கள் இல்லாத காரணத்தினால் அல்ல. கீழ்ப்படியாமையே காரணம்.
இதைப் பற்றி விளக்கத்தை நியாயாதிபதிகள் 2:7-11ல் தெளிவாக பார்க்கலாம்.
. It was a spiritual failure, not organisational or political. The people had failed to obey the word of God
இன்றைக்கு விசுவாசிகள் யோசுவா காலத்தில் உள்ள தலைவர்களை போல காணப்பட வேண்டுமேயல்லாமல் மோசே‌காலத்தில் உள்ள அடிமைகளை போல் நாம் காணப்படக்கூடாது.
கர்த்தர் மகிமைப்படுவாராக.