பவுல் தன்னுடைய கடிதத்தை ஏன் கர்த்தரின் மேல் ஆணையிட்டு விசுவாசிகளை படிக்க சொன்னார்?
உங்கள் சிந்தனைக்கு !
பவுல் தன்னுடைய கடிதத்தை ஏன் கர்த்தரின் மேல் ஆணையிட்டு விசுவாசிகளை படிக்க சொன்னார்?
"இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன்" 1 தெச .5:27
"அவர்கள் எல்லாருக்கும் இத்திருமுகத்தை வாசித்துக்காட்ட வேண்டுமென்று ஆண்டவர் பெயரால் ஆணையிடுகிறேன்."
1 தெசலோனிக்கர் 5:27.
இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு.
இது தெசலோனிக்கேயரின் சபைக்கு அவர் விடுக்கும் கட்டளை
இதே விருப்பத்தை கொலோசிய சபைக்கும் தெரிவித்திருக்கிறார்.
“இந்த நிருபம் உங்களிடத்தில்ஞ வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள், லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள்.” கொலோ 4:16
"இத்திருமுகத்தை நீங்கள் வாசித்தபின்பு லவோதிக்கேயா திருச்சபையிலும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். அவ்வாறே லவோதிக்கேயா திருச்சபையிலிருந்து வரும் திருமுகத்தையும் நீங்கள் வாசியுங்கள். "
கொலோசையர் 4:16
இது கத்தோலிக்க மொழிபெயர்ப்பு.
பவுலடியார் தன் நிருபத்தை வாசிக்கும்படி ஆணையிட்டு ஒரு கருத்தை ஏன் மிகவும் வலியுறுத்தி கூறுகிறார் ?
இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு
1.
யார் இந்த பவுல்?
ஆண்டவரை ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக யூத மார்க்கத்தின் மீது தீவிர பற்று கொண்டவர்.
சபையை பாழாக்கியவர்.
இயேசு கிறிஸ்துவை சந்தித்த பிறகு அவன் மனம் மாறினார்.
இவர் அப்போஸ்தலனாக இருந்தாலும் இவர் இயேசு கிறிஸ்துவை முகமுகமாக சந்தித்து பேசினது கிடையாது.
இயேசு கிறிஸ்து தெரிந்தெடுத்த 12 அப்போஸ்தலர்களில் இவர்
கிடையாது.
ஆரம்ப நாட்களில் எருசலேம் சபையின் அங்கீகரிப்பும் இவருக்குகிடையாது.
பல சபைகளில் இவருடைய அப்போஸ்தல அதிகாரத்தை கேள்விக்குறியாக்கின காரியங்களும் காணப்படுகிறது.
ஆனால் இவர் தான் புதிய ஏற்பாட்டில் உள்ள புத்தகங்களில் 13 கடிதங்களை எழுதியிருக்கிறார்.
புற இனத்தார் மத்தியில் நற்செய்தியை தீவிரமாக பரப்பியவர்.
சபையை குறித்தும், நற்செய்தியை குறித்தும் மற்ற அப்போஸ்தலர்களை காட்டிலும் மிக அதிகமான வெளிப்படுத்தலை தேவனிடத்தில் இருந்து பெற்றவர்.கலா2;11,12, எபே 3;8-11,2கொரி11:6
எனவேதான் தன்னுடைய அப்போஸ்தல அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது
இந்த வார்த்தையின் ஆழத்தை சரியாக புரிந்து கொண்டால் புதிய ஏற்பாடு நூல்கள் எவ்வாறு வரைமுறை செய்ய பட்டது என்பதை அறிந்து கொள்ளலாம்.
இன்னொரு காரணம்.
ஆதி திருச்சபைகளில் முதலில் பழைய ஏற்பாடு நூல்கள்தான் வாசிக்கப்பட்டு வந்தது.
பவுல்தான் செல்லும் எல்லா இடங்களிலும் அங்குள்ள யூதர்களுடைய தேவாலயத்தில் சென்று பழைய ஏற்பாட்டில் உள்ள நூல்களில், மேசியாவாகிய கிறிஸ்து எவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறார் என்பதை விவரித்து நற்செய்தியை அறிவிப்பது வழக்கம்.
அதனால் புற இனத்தாரும் தேவனுடைய அரசில் இணைந்தனர் .
அதன் பிறகு பழைய ஏற்பாடு நூல்களோடு அப்போஸ்தலர்களின் நிரூபங்களும் சபைகளில் சத்தமாக வாசிக்கப்பட்டது.
According to John Stott “this was the origin of the tradition of having both an old and a New Testament lesson in Church.The clear implication is that these apostolic documents were to b regarded as being on a level with the Old Testament Scriptures”
இந்த பழக்கம்தான் பின்னாட்களில் புதிய ஏற்பாடு நூல்கள் தெரிந்துகொள்ளப் படுவதற்கும் தொகுக்கப்படுவதற்கும் ஆதாரமாகிவிட்டது.
This tradition enabled the Church fathers to complete the “Canon of Scripture”
ஒரு மனித தேவையை ஏற்படுத்தி அதன் மூலம் தேவன் தமது திட்டத்தை நிறைவேற்றினார்.