Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தேவனின் பரிபூரண சித்தமும் அனுமதிக்கப்பட்ட சித்தமும்
உங்கள் சிந்தனைக்கு:
தேவனின் பரிபூரண சித்தமும் அனுமதிக்கப்பட்ட சித்தமும்
God's perfect will and permissive will.

நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண சித்தம் நிறைவேற ஒப்புக் கொடுக்க வேண்டும் .
ஏதோ ஒரு காரியத்தில் தேவனோடு வம்பு கட்டி ,போராடி நாம் விரும்பிய காரியத்தை கேட்கும் போதும் அவர் சில நேரங்களில் அதை அனுமதித்து விடுவார்.
.இது தான் அனுமதிக்கப்பட்ட தேவ சித்தம் என்று சொல்லுவார்கள்.

இதைத்தான் இஸ்ரவேல் மக்களின்வாழ்க்கையில் ஆரம்பகாலத்தில் பார்க்கலாம் .
ஆபிரகாமை தேவன் அழைத்தபோது அவருடைய சந்ததிக்கு கானான் தேசத்தை வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார்.
யாக்கோபுக்கு பிறந்த 12 பிள்ளைகளுக்கு அந்த தேசம் முன்குறிக்கப்பட்டது. ஆனால் கானானுக்கு செல்வதற்கு முன்பாக யோர்தானை கடந்து அடுத்தது கானானுக்கு செல்ல வேண்டிய அந்த நேரத்தில் 12 கோத்திரத்தில் ரூபன்,காத் புத்திரர்கள்
‌ யோர்தானுக்கு இக்கரையில் யூதர்கள் கைப்பற்றிய அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்கள் தங்கள் ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமாக இருப்பதால் அதை தங்களுக்கு பிரித்துக் கொடுக்குமாறு கேட்டார்கள். அதேபோல மனசேயின் ஒரு கோத்திரத்தாரும் தங்களுக்கும் யோர்தானுக்கு இக்கரையில் உள்ள இடத்தை கேட்டனர். இதற்கு மோசே முதலில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னால் அவர்கள் கானானை கைப்பற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வோம் என்கிற வாக்குறுதி கொடுத்த படியினாலே
அவர்களுக்கு கானானுக்கு வெளியே யோர்தானுக்கு இக்கரையில் உள்ள இடங்களை பிரித்துக் கொடுத்தார்‌ மோசே . இந்தக் காரியத்தை கர்த்தர் அனுமதித்தாரா என்பது நமக்கு தெரியாது. ஆனாலும் மோசேஅவர்களின் விருப்பத்தின்படி பிரித்துக் கொடுத்தார்.
கர்த்தருடைய பரிபூரண சித்தம் ஆபிரகாமின் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததி அனைவரும் கானானில் குடியிருக்க வேண்டும் என்பதே.
அவர்கள் யோர்தானுக்கு அக்கறை ஒருபுறமும் இக்கரை ஒருபுறமும் பிரிந்து இருப்பது தேவனுடைய சித்தம் இல்லை.
சில வேத பண்டிதர்கள் சொல்லுகின்ற காரியம் என்னவென்றால் எதிரிகளின் தாக்குதலில் முதலில் இவர்கள் தான் பாதிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.
நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவென்றால் தேவனுடைய பரிபூரண சித்தத்தில் வாழ்வதுதான் நமக்கு பாதுகாப்பு.. ஒருவேளை நம்முடைய போராட்டத்தின் மூலம் நாம் விரும்பியதை தேவன் அனுமதித்தாலும் அதில் பரிபூரண பாதுகாப்பு இருக்காது என்பது தான் உண்மை. இப்படி யாக்கோபின் இரண்டு புத்திரர்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட கானானை விரும்பாமல் உலக பார்வையின்படி தங்கள் கால்நடைகளுக்காக யோர்தானின் இக்கரையில்உள்ள இடத்தை தெரிந்து கொண்டார்கள். இதுவும் ஒரு ஆவிக்குரிய சறுக்கல்தான்..
நம்முடைய வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண சித்தத்தை செயல்படுத்த நமக்கு தேவன் கிருபை தருவாராக .
கர்த்தர் மகிமைப்படுவாராக.
படிக்க எண்ணாகம் 32 வது அதிகாரம்